Primary tabs
-
1.5 தொகுப்புரை
திறனாய்வு பற்றிய இந்த முதல் பாடத்தில், நாம் திறனாய்வு என்றால் என்ன என்று அறிமுக நிலையில் தெரிந்து கொண்டோம். இலக்கியம் பல பண்புகளைக் கொண்டது. இலக்கியங்கள் பல திறத்தன. பல விளக்கங்களையும் பலவரையறைகளையும் கொண்ட இலக்கியத்தின் தேவைக்கும், அதனை வாசிக்கிற வாசகனின் தேவைக்கும் ஏற்பத் திறனாய்வு என்பது அமைகிறது. இலக்கியத்தைப் படைக்கிறவர், அதனைப் படிக்கிறவர். அதனைத் திறனாய்வு செய்கிறவர் என்ற மூன்று பரிமாணங்கள், இலக்கியம் என்ற பொதுவான தளத்தின் அடிப்படையாகும். திறனாய்வு, ஒரு பாலமாக அமைய வேண்டும். உற்ற தோழனாக அமைய வேண்டும். இலக்கியத்தைப் படிப்பவரின் அறிவையும் ரசனையையும் தரத்தையும் உயர்த்துவதாகத் திறனாய்வு அமைய வேண்டும்.
3எழுதுவதாலும் அதனைப் படிப்பதாலும் பயன்கிடைக்க வேண்டுமானால், எழுதுகிறவனும் படிக்கிறவனும் எவ்வாறு இருக்க வேண்டும்?