Primary tabs
-
3.5 தொகுப்புரை
திறனாய்வுக்குத் தளமாக இருப்பது இலக்கியம். இலக்கியத்திற்குத் தளமாக இருப்பது வாழ்க்கை. இலக்கியம் வாழ்க்கையைச் சித்திரிக்கிறது; வாழ்க்கையைப் பதிவு செய்கிறது; வாழ்க்கையை விளக்குகிறது; வாழ்க்கையை விமரிசனம் செய்கிறது.
இலக்கியத்தில் சொல்லப்படும் வாழ்க்கை குறுகிய காலப் பகுதியாகவும் குறுகிய இடம் பற்றியதாகவும் தோன்றினாலும், உண்மையில் அது அதனுடைய கலைநேர்த்தி மற்றும் பொதுமைத்தன்மை காரணமாக, கடந்தது, நிகழ்வது, வருவது என்ற நீண்ட காலத்தையும், பெரும் நிலப்பரப்பையும் உள்ளடக்கியிருக்கிறது. இத்தகைய இலக்கியத்தின் பரப்புக்குள் இனம், பண்பாடு, காலம் ஆகியவற்றின் ‘மனநிலை’ இருக்கின்றது.
இலக்கியம், வாழ்க்கையின் நேர்முன் வருணனை அல்ல. வாழ்க்கையைப் பல உருவங்களில், பல நிலைகளில், பல வழிமுறைகளில் சொல்கின்றது.
திறனாய்வு, இத்தகைய இலக்கியம் கூறும் வாழ்க்கையைக் காரண காரியங்களுடன் ஆழமாக உட்சென்று புலப்படுத்துகின்றது.
3.வாழ்க்கையின் சில எதிர்நிலைகளை இலக்கியத்தில் மறுதலிக்கிற போது, அது எவ்வெவ்வகையில் வெளிப்படக்கூடும்?