Primary tabs
-
1. நட்பிற்கு வள்ளுவர் கூறும் இலக்கணம் யாது?
ஒருவன் அணிந்திருக்கும் ஆடை, அவனது உடலிலிருந்து நழுவும்
பொழுது, அவனை அறியாமலே, அவன் கைகள், அந்த
ஆடையைப் பற்றி, அவனது மானத்தை மறைக்கும். அதைப்போல,
நல்ல நண்பர்கள், தம் நண்பர்க்குத் துன்பம் வந்ததை அறிந்த
உடனேயே, நண்பரது, அழைப்பையோ, ஆணையையோ,
எதிர்பார்க்காமல், விரைந்து சென்று உதவி செய்வார்கள். இதுதான் நட்புக்கு உரிய அடையாளம். இதுவே, வள்ளுவர் நட்புக்குக் கூறும் இலக்கணம். நட்பிற்குப் பலர், பலவிதமான விளக்கங்களைக்
கூறியுள்ளனர். ஆனால், வள்ளுவர் எல்லோருக்கும் புரியும்
வகையில், அன்றாடம், நம் வாழ்க்கையில் நிகழும் ஒரு சிறு
நிகழ்ச்சி மூலம் எளிமையாக விளக்குகிறார்.