Primary tabs
-
1. யாரது நட்பை விலக்க வேண்டும்?
நம் குணங்களுக்கு ஒத்துவராதவர் நட்பினை விலக்கவேண்டும்.
அதுபோல, மனதினுள் ஒன்றை வைத்துக் கொண்டு, வெளியே
இன்னொன்றைச் சொல்லும் இரட்டை வேடதாரிகளின் நட்பை
விலக்க வேண்டும். மிக அதிகமாகப் பணிந்து நல்லவர்கள்
போல் நடிப்பவர்களின் நட்பையும் விலக்க வேண்டும் என்று
வள்ளுவர் கூறுகிறார்.