Primary tabs
-
2. உண்மையான நண்பர்களை எப்பொழுது புரிந்து
கொள்ளலாம்?நமக்குப் புகழும் செல்வாக்கும் செல்வமும் இருக்கும் பொழுது,
பலர் நம்மிடம் நட்பு கொள்வார்கள். ஆனால் நமக்கு ஒரு துன்பம்
வரும் பொழுது, பலர் நம்மை விட்டுச் சென்று விடுவார்கள். ஒரு
சிலரே, நம்மிடம் நிலைத்து இருப்பார்கள். இவ்வாறு துன்ப
காலத்திலும் நம் உடன் இருந்து உதவுபவர்கள் தான் நல்ல
நண்பர்கள். எனவே, நமக்குத் துன்பம் வரும்பொழுது தான்
உண்மையான நண்பர்கள் யார் என்பதை அடையாளம்
காணமுடியும்.ஜுலியஸ்சீசரும், தனக்குத் துன்பம் வந்த பொழுதுதான்,
பூரூட்டஸ் என்பவன் எத்தகைய நண்பன் என்பதைப் புரிந்து
கொண்டார்.