முகப்பு |
முல்லை |
21. முல்லை |
விரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர் |
||
அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ, |
||
வேண்டு அமர் நடையர், மென்மெல வருக! |
||
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு |
||
5 |
ஏமதி, வலவ, தேரே! உதுக் காண்- |
|
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன |
||
அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக் |
||
காமரு தகைய கானவாரணம் |
||
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில் |
||
10 |
புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி, |
|
நாள் இரை கவர மாட்டி, தன் |
||
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே! | உரை | |
வினை முற்றி மீள்வான்தேர்ப்பாகற்குச் சொல்லியது.-மருதன் இளநாகனார்
|
42. முல்லை |
மறத்தற்கு அரிதால்-பாக! பல் நாள் |
||
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய |
||
பழ மழை பொழிந்த புது நீர் அவல |
||
நா நவில் பல் கிளை கறங்க, மாண் வினை |
||
5 |
மணி ஒலி கேளாள், வாணுதல்; அதனால், |
|
'ஏகுமின்' என்ற இளையர் வல்லே |
||
இல் புக்கு அறியுநராக, மெல்லென |
||
மண்ணாக் கூந்தல் மாசு அறக் கழீஇ, |
||
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய |
||
10 |
அந் நிலை புகுதலின், மெய் வருத்துறாஅ |
|
அவிழ் பூ முடியினள் கவைஇய |
||
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே. | உரை | |
வினைமுற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.-கீரத்தனார்
|
59. முல்லை |
உடும்பு கொலீஇ, வரி நுணல் அகழ்ந்து, |
||
நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி, |
||
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல |
||
பல் வேறு பண்டத் தொடை மறந்து, இல்லத்து, |
||
5 |
இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும் |
|
வன் புலக் காட்டு நாட்டதுவே-அன்பு கலந்து |
||
நம்வயின் புரிந்த கொள்கையொடு, நெஞ்சத்து |
||
உள்ளினள் உறைவோள் ஊரே; முல்லை |
||
நுண் முகை அவிழ்ந்த புறவின் |
||
10 |
பொறை தலை மணந்தன்று; உயவுமார் இனியே. | உரை |
வினைமுற்றி மீள்வான்தேர்ப்பாகற்குச் சொல்லியது.- கபிலர்
|
69. முல்லை |
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி, |
||
சேய் உயர் பெரு வரைச் சென்று, அவண் மறைய, |
||
பறவை பார்ப்புவயின் அடைய, புறவில் |
||
மா எருத்து இரலை மடப் பிணை தழுவ, |
||
5 |
முல்லை முகை வாய் திறப்ப, பல் வயின் |
|
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ, |
||
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி, |
||
கொடுங் கோல் கோவலர் குழலோடு ஒன்றி, |
||
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை, |
||
10 |
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் |
|
இனையவாகித் தோன்றின், |
||
வினை வலித்து அமைதல் ஆற்றலர்மன்னே! | உரை | |
வினைவயிற் பிரிதல்ஆற்றாளாய தலைவி சொல்லியது.-சேகம்பூதனார்
|
81. முல்லை |
இரு நிலம் குறையக் கொட்டிப்பரிந்தின்று |
||
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள், |
||
மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவி |
||
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப, |
||
5 |
பூண்கதில்-பாக!-நின் தேரே: பூண் தாழ் |
|
ஆக வன முலைக் கரைவலம் தெறிப்ப |
||
அழுதனள் உறையும் அம் மா அரிவை |
||
விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய |
||
முறுவல் இன் நகை காண்கம்!- |
||
10 |
உறு பகை தணித்தனன், உரவு வாள் வேந்தே. | உரை |
வினை முற்றிய தலைவன்தேர்ப்பாகற்கு உரைத்தது.-அகம்பன்மாலாதனார்
|
89. முல்லை |
கொண்டல் ஆற்றி விண்தலைச்செறீஇயர், |
||
திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி, |
||
நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழை |
||
அழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள், |
||
5 |
இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின் |
|
அகல் இலை அகல வீசி, அகலாது |
||
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை, |
||
பரும யானை அயா உயிர்த்தாஅங்கு, |
||
இன்னும் வருமே-தோழி!-வாரா |
||
10 |
வன்கணாளரோடு இயைந்த |
|
புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே! | உரை | |
'பொருள் முற்றி மறுத்தந்தான்' எனக் கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது.-இளம் புல்லூர்க் காவிதி
|
97. முல்லை |
அழுந்து படு விழுப் புண் வழும்பு வாய்புலரா |
||
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு, |
||
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும், |
||
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே; |
||
5 |
அதனினும் கொடியள் தானே, 'மதனின் |
|
துய்த் தலை இதழ பைங் குருக்கத்தியொடு |
||
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ?' என |
||
வண்டு சூழ் வட்டியள் திரிதரும் |
||
தண்டலை உழவர் தனி மட மகளே. | உரை | |
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்கு உரைத்தது.-மாறன் வழுதி
|
99. முல்லை |
'நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை, |
||
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின், |
||
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர் |
||
தாம் வரத் தெளித்த பருவம் காண்வர |
||
5 |
இதுவோ?' என்றிசின்-மடந்தை!-மதி இன்று, |
|
மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழை |
||
பொறுத்தல்செல்லாது இறுத்த வண் பெயல் |
||
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல- |
||
பிடவமும், கொன்றையும் கோடலும்- |
||
10 |
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே. | உரை |
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது.-இளந்திரையனார்
|
121. முல்லை |
விதையர் கொன்ற முதையல் பூழி, |
||
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின் |
||
கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை, |
||
அரலை அம் காட்டு இரலையொடு, வதியும் |
||
5 |
புறவிற்று அம்ம, நீ நயந்தோள் ஊரே: |
|
'எல்லி விட்டன்று, வேந்து' எனச் சொல்லுபு |
||
பரியல்; வாழ்க, நின் கண்ணி!-காண் வர |
||
விரி உளைப் பொலிந்த வீங்கு செலல் கலி மா |
||
வண் பரி தயங்க எழீஇ, தண் பெயற் |
||
10 |
கான் யாற்று இகுமணற் கரை பிறக்கு ஒழிய, |
|
எல் விருந்து அயரும் மனைவி |
||
மெல் இறைப் பணைத் தோள் துயில் அமர்வோயே! | உரை | |
வினை முற்றி மறுத்தரும்தலைமகற்குத் தேர்ப்பாகன் சொல்லியது.-ஒரு சிறைப்பெரியனார்
|
142. முல்லை |
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள், |
||
பாணி கொண்ட பல் கால் மெல் உறி |
||
ஞெலி கோல் கலப் பை அதளொடு சுருக்கி, |
||
பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன் |
||
5 |
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப, |
|
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி |
||
சிறு தலைத் தொழுதி ஏமார்த்து அல்கும் |
||
புறவினதுவே-பொய்யா யாணர், |
||
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும், |
||
10 |
முல்லை சான்ற கற்பின், |
|
மெல் இயற் குறுமகள் உறைவின், ஊரே. | உரை | |
வினை முற்றி மீளும்தலைமகன், தேர்ப்பாகற்குச் சொல்லியது.-இடைக்காடனார்
|
161. முல்லை |
இறையும், அருந் தொழில் முடித்தென, பொறைய, |
||
கண் போல் நீலம் சுனைதொறும் மலர, |
||
வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின், |
||
இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய, |
||
5 |
நெடுந் தெரு அன்ன நேர் கொள் நெடு வழி, |
|
இளையர் ஏகுவனர் பரிப்ப, வளை எனக் |
||
காந்தள் வள் இதழ் கவிகுளம்பு அறுப்ப, |
||
தோள் வலி யாப்ப, ஈண்டு நம் வரவினைப் |
||
புள் அறிவுறீஇயினகொல்லோ-தெள்ளிதின் |
||
10 |
காதல் கெழுமிய நலத்தள், ஏதில் |
|
புதல்வற் காட்டிப் பொய்க்கும் |
||
திதலை அல்குல் தேம் மொழியாட்கே? | உரை | |
வினை முற்றிப் பெயரும்தலைவன், தேர்ப்பாகன் கேட்ப, சொல்லியது.
|
169. முல்லை |
'முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல்! |
||
வருவம்' என்னும் பருவரல் தீர, |
||
படும்கொல், வாழி, நெடுஞ் சுவர்ப் பல்லி- |
||
பரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளி |
||
5 |
மீமிசைக் கலித்த வீ நறு முல்லை |
|
ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும் |
||
வெண் போழ் தைஇய அலங்கல்அம் தொடலை |
||
மறுகுடன் கமழும் மாலை, |
||
10 |
சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே. | உரை |
வினை முற்றி மறுத்தராநின்றான் நெஞ்சிற்கு உரைத்தது.
|
181. முல்லை |
உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல் |
||
பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி, |
||
வந்ததன் செவ்வி நோக்கி, பேடை |
||
நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன |
||
5 |
சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின், |
|
துவலையின் நனைந்த புறத்தது அயலது |
||
கூரல் இருக்கை அருளி, நெடிது நினைந்து, |
||
ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப, |
||
கையற வந்த மையல் மாலை |
||
10 |
இரீஇய ஆகலின், இன் ஒலி இழந்த |
|
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப |
||
வந்தன்று, பெருவிறல் தேரே; |
||
உய்ந்தன்றாகும், இவள் ஆய் நுதற் கவினே. | உரை | |
வினை முற்றிப் புகுந்தது கண்ட தோழி மகிழ்ந்து உரைத்தது.
|
221. முல்லை |
மணி கண்டன்ன மா நிறக் கருவிளை |
||
ஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய, |
||
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க் |
||
கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க, |
||
5 |
வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில், |
|
நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ, |
||
செல்க-பாக!-நின் செய்வினை நெடுந் தேர்: |
||
விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள், |
||
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க, |
||
10 |
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப் |
|
பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி, |
||
'வந்தீக, எந்தை!' என்னும் |
||
அம் தீம் கிளவி கேட்கம் நாமே. | உரை | |
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் பாகற்குச் சொல்லியது.-இடைக்காடனார்
|
238. முல்லை |
வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங் |
||
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப, |
||
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம், |
||
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய |
||
5 |
பருவம் செய்த கருவி மா மழை! |
|
'அவர் நிலை அறியுமோ, ஈங்கு' என வருதல் |
||
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன் |
||
உர உரும் உரறும் நீரின், பரந்த |
||
பாம்பு பை மழுங்கல் அன்றியும், மாண்ட |
||
10 |
கனியா நெஞ்சத்தானும், |
|
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே. | உரை | |
தலைமகள் பருவம் கண்டு அழிந்தது.-கந்தரத்தனார்
|
239. நெய்தல் |
ஞான்ற ஞாயிறு குடமலை மறைய, |
||
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் |
||
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி, |
||
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில் |
||
5 |
காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின், |
|
ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல் |
||
புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும் |
||
மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு |
||
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே; 'முன்கை |
||
10 |
வார் கோல் எல் வளை உடைய வாங்கி, |
|
முயங்கு' எனக் கலுழ்ந்த இவ் ஊர் |
||
எற்று ஆவதுகொல், யாம் மற்றொன்று செயினே? | உரை | |
தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.-குன்றியனார்
|
242. முல்லை |
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப, |
||
புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ, |
||
பொன் எனக் கொன்றை மலர, மணி எனப் |
||
பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல, |
||
5 |
கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து |
|
செல்க-பாக!-நின் தேரே: உவக்காண்- |
||
கழிப் பெயர் களரில் போகிய மட மான் |
||
விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓட, |
||
காமர் நெஞ்சமொடு அகலா, |
||
10 |
தேடூஉ நின்ற இரலை ஏறே. | உரை |
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் கார் கண்டு பாகற்குச் சொல்லியது.-விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்
|
248. முல்லை |
'சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ, |
||
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப, |
||
தண் புதல் அணிபெற மலர, வண் பெயல் |
||
கார் வரு பருவம்' என்றனர்மன்-இனி, |
||
5 |
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர், |
|
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும் |
||
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும் |
||
இன மயில் மடக் கணம் போல, |
||
நினை மருள்வேனோ? வாழியர், மழையே! | உரை | |
பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழை மேல் வைத்துப் பருவம் மறுத்தது.-காசிபன் கீரனார்
|
266. முல்லை |
கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த |
||
குறுங் காற் குரவின் குவி இணர் வான் பூ |
||
ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும் |
||
அகலுள் ஆங்கண் சீறூரேமே; |
||
5 |
அதுவே சாலும் காமம்; அன்றியும், |
|
எம் விட்டு அகறிர்ஆயின், கொன் ஒன்று |
||
கூறுவல்-வாழியர், ஐய!-வேறுபட்டு |
||
இரீஇய காலை இரியின், |
||
பெரிய அல்லவோ, பெரியவர் நிலையே? | உரை | |
தலைமகனைச் செலவுடன்பட்டது; கடிநகர் வரைப்பில் கண்டு மகிழ்ந்த தலைமகற்குத் தோழி 'நும்மாலே ஆயிற்று' என்று சொல்லியதூஉம் ஆம்.-கச்சிப்பேட்டு இளந்தச்சனார்
|
289. முல்லை |
அம்ம வாழி, தோழி!-காதலர், |
||
நிலம் புடைபெயர்வதாயினும், கூறிய |
||
சொல் புடைபெயர்தலோ இலரே; வானம் |
||
நளி கடல் முகந்து, செறிதக இருளி, |
||
5 |
கனை பெயல் பொழிந்து, கடுங் குரல் பயிற்றி, |
|
கார் செய்து, என் உழையதுவே; ஆயிடை, |
||
கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய |
||
பெரு மர ஒடியல் போல, |
||
அருள் இலேன் அம்ம; அளியேன் யானே. | உரை | |
பிரிவிடைப் பருவம் கண்டு சொல்லியது.- மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
|
321. முல்லை |
செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை |
||
பாடு இன் தெள் மணித் தோடு தலைப்பெயர, |
||
கான முல்லைக் கய வாய் அலரி |
||
பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய, |
||
5 |
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை, |
|
புல்லென் வறு மனை நோக்கி, மெல்ல |
||
வருந்தும்கொல்லோ, திருந்துஇழை அரிவை? |
||
வல்லைக் கடவுமதி தேரே; சென்றிக, |
||
குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற, |
||
10 |
பெருங் கலி மூதூர் மரம் தோன்றும்மே. | உரை |
வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.-மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
|
361. முல்லை |
சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரி |
||
தானும் சூடினன்; இளைஞரும் மலைந்தனர்; |
||
விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலி மா, |
||
படு மழை பொழிந்த தண் நறும் புறவில், |
||
5 |
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப, |
|
மாலை மான்ற மணம் மலி வியல் நகர்த் |
||
தந்தன நெடுந்தகை தேரே; என்றும் |
||
அரும் படர் அகல நீக்கி, |
||
விருந்து அயர் விருப்பினள், திருந்துஇழையோளே. | உரை | |
வாயில்களோடு தோழி உறழ்ந்து சொல்லியது.-மதுரைப் பேராலவாயர்
|
364. முல்லை |
சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும் |
||
மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி, |
||
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க, |
||
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப, |
||
5 |
இன்ன சில் நாள் கழியின், பல் நாள் |
|
வாழலென் வாழி-தோழி!-ஊழின் |
||
உரும் இசை அறியாச் சிறு செந் நாவின் |
||
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப, |
||
பல் ஆ தந்த கல்லாக் கோவலர் |
||
10 |
கொன்றைஅம் தீம் குழல் மன்றுதோறு இயம்ப, |
|
உயிர் செலத் துனைதரும் மாலை, |
||
செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே. | உரை | |
தலைமகள் பிரிவிடை மெலிந்தது.-கிடங்கில் காவிதிப் பெருங் கொற்றனார்
|
367. முல்லை |
கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடை |
||
நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ, கிளை பயிர்ந்து, |
||
கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறு |
||
சூருடைப் பலியொடு கவரிய, குறுங் கால் |
||
5 |
கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும் |
|
மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி |
||
மெல் இயல் அரிவை! நின் பல் இருங் கதுப்பின் |
||
குவளையொடு தொடுத்த நறு வீ முல்லைத் |
||
தளை அவிழ் அலரித் தண் நறுங் கோதை |
||
10 |
இளையரும் சூடி வந்தனர்: நமரும் |
|
விரி உளை நன் மாக் கடைஇ, |
||
பரியாது வருவர், இப் பனி படு நாளே. | உரை | |
வரவு மலிந்தது-நக்கீரர்
|
காயாங் குன்றத்துக் கொன்றை போல, |
||
மா மலை விடர் அகம் விளங்க மின்னி, |
||
மாயோள் இருந்த தேஎம் நோக்கி, |
||
வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய், |
||
5 |
பெயல் தொடங்கினவே, பெய்யா வானம்: |
|
நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி, |
||
அழல் தொடங்கினளே ஆயிழை; அதன் எதிர், |
||
குழல் தொடங்கினரே கோவலர்- |
||
தழங்கு குரல் உருமின் கங்குலானே. | உரை | |
வினை முற்றி மறுத்தராநின்றான் பாகற்குச் சொல்லியது.-ஒளவையார்
|
374. முல்லை |
முரம்பு தலை மணந்த நிரம்பா இயவின் |
||
ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக் |
||
களரிப் புளியின் காய் பசி பெயர்ப்ப, |
||
உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர்! |
||
5 |
முற்றையும் உடையமோ மற்றே-பிற்றை |
|
வீழ் மா மணிய புனை நெடுங் கூந்தல், |
||
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப, |
||
விருந்து அயர் விருப்பினள் வருந்தும் |
||
திருந்துஇழை, அரிவைத் தேமொழி நிலையே? | உரை | |
வினை முற்றி மீள்வான் இடைச் சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது.-வன் பரணர்
|
381. முல்லை |
'அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம்' எனப் |
||
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்; |
||
கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரை |
||
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல, |
||
5 |
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை |
|
யாங்கனம் தாங்குவென் மற்றே?-ஓங்கு செலல் |
||
கடும் பகட்டு யானை நெடு மான் அஞ்சி, |
||
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க, |
||
தேர் வீசு இருக்கை போல, |
||
10 |
மாரி இரீஇ மான்றன்றால் மழையே. | உரை |
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் பருவ வரவின்கண் சொல்லியது.-ஒளவையார்
|
384. பாலை |
பைம் புறப் புறவின் செங் காற் சேவல் |
||
களரி ஓங்கிய கவை முடக் கள்ளி |
||
முளரி அம் குடம்பை ஈன்று, இளைப்பட்ட |
||
உயவு நடைப் பேடை உணீஇய, மன்னர் |
||
5 |
முனை கவர் முது பாழ் உகு நெற் பெறூஉம் |
|
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை, மலர்ந்த |
||
நல் நாள் வேங்கைப் பொன் மருள் புதுப் பூப் |
||
பரந்தன நடக்க, யாம் கண்டனம் மாதோ: |
||
காண் இனி வாழி-என் நெஞ்சே!-நாண் விட்டு |
||
10 |
அருந் துயர் உழந்த காலை |
|
மருந்து எனப்படூஉம் மடவோளையே. | உரை | |
உடன் போகாநின்றான் மலிந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
394. முல்லை |
மரந்தலை மணந்த நனந் தலைக் கானத்து, |
||
அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை, |
||
பொன் செய் கொல்லனின், இனிய தெளிர்ப்ப, |
||
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந் தேர், |
||
5 |
வன் பரல் முரம்பின், நேமி அதிர, |
|
சென்றிசின் வாழியோ, பனிக் கடு நாளே; |
||
இடைச் சுரத்து எழிலி உறைத்தென, மார்பின் |
||
குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு |
||
நறுந் தண்ணியன்கொல்; நோகோ யானே? | உரை | |
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகனை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது;வன்சொல்லால் குறை நயப்பித்த தோழி தந்து அளித்ததூஉம் ஆம்.-ஒளவையார்
|