பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

102

அவ

அவிநயத்தன

- அபிநயம் செய்வன 237

அழுவித்து

- அழச் செய்து 544

அளறு

- சேறு 91

அற்புதம்

- பத்து கோடி 192

அற

- முடிய, நன்கு 146

அறவுடைய

- முற்றிலும் அழிய 544

அறுதல்

- சீரணம் செய்தல் 378

அனக

- பாவமற்ற, குற்றமற்ற 486

அனலம்

- தீ 408

அனிலம்

- காற்று 408

ஆகுதி

- வேள்வித் தீயில் இடும் பொருள் 325

ஆடகம்

- பொன் 186

ஆயு

- உயிர் 474

ஆரணம்

- வேதம் 1

ஆலம்

- நஞ்சு 33

ஆலவிடவாரி

- நிறைந்த ஆலகால விடம் 376

ஆவலம்

- பெருமித ஆரவாரம் 93

ஆழி

-

ஆழ்ந்தது

184
கடல் 370
ஏழு வகைப்படும்: உவர்நீர், நல்நீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன் 480

ஆழிப்பொருப்பு

- சக்கரவாள கிரி 566

ஆளி

- சிங்கம் 479

ஆறு சமயம்

-

1. வேதத்திற்கு உட்பட்டவை : வைணவம்,
சைவம், சாக்தம், சௌரம், காணபதம்,
கௌமாரம்
2. வேதத்திற்கு புறம்பானவை: லோகயதம்,
பௌத்தம், ஜைனம், பயிரவம், காளாமுகம்,
சூன்யவாதம்

422

ஆறுதல்

- முற்றுதல் 149

இசித்தல்

- இழுபடுதல் 123

இசைந்து

- பொருந்தி 299

இசைப்பித்தர்

- சிவபெருமான் 96

இடந்த

- கிழித்த, தோண்டிய 59

இடம்

- விசாலம் 520

இடமகி

- இடம் உள்ள பூமி 538

இடாகினியர்

-

காளியின் பரிசனங்களுள் ஓர் இனத்தவர்

98