தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஆதிச்சநல்லூர்

  • பரூஉமோவாய்ப் பதுமனார்

    முனைவர் இரா.காமராசு
    உதவிப்பேராசிரியர்
    இலக்கியத்துறை

    பரூஉமோவாய்ப் பதுமனார் ஒரு புலவர். பருத்த மோவாயையுடைய பதுமனார் என்று இவர் பெயருக்கு விளக்கம் கூறுவார். உ.வே.சா. எனவே, உறுப்புக் குறித்த அடையுடன் இவர் பெயர் பெற்றவராவார். இவரால் பாடப்பெற்றது குறுந்தொகையில் 101 ஆம் பாடலாகும். தலைவியோடு இன்புற்று இல்லறம் நடத்தும் தலைவன் அத்தலைவியால் வரும் இன்பம் வேறு எப்பொருளிலும் சிறப்புடையதன்று பாங்காயினார் கேட்ப கூறியதாக இவர் அதனைப் பாடியுள்ளார். பெரிய கடல் சூழ்ந்த இவ்வுலக இன்பமும் அரிதாகப் பெறுதற்குரிய சிறப்பமைந்த புத்தேள் நாட்டு இன்பமும் ஆகிய இரண்டினையும் ஒரு தட்டிலும், தாமரைப் பூப்போலும் மையுண்ட கண்களும் பொன் போலும் நிறமும் மாட்சிமைப்பட்ட வரிகளமைந்த அல்குலும் உடைய காதலியாகிய குறுமகளின் தோளோடு தோள் மாறுபடத் தழுவும் இன்பத்தை மறுதட்டிலும் வைத்துத் தூக்கினால் எமக்குக் காதலின்பத்தோடு அந்த ஈடுலக இன்பமும் கனம் ஒவ்வாதொழியும் என்று தலைவன் கூற்றாக இவர் உணர்வு நலத்தோடு புனைந்துள்ளார். இவர் உறுப்பாற் பெயர் பெற்ற சங்கப் புலவர்களுள் ஒருவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:18:56(இந்திய நேரம்)