தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • தீன்மதி நாகனார்

    முனைவர் இரா.காமராசு
    உதவிப்பேராசிரியர்
    இலக்கியத்துறை


    தீன்மிதி நாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குறுந்தொகை 111 எண்ணுள்ள பாடல் ஒன்று மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

    தீன் என்பது தீனியாகிய உணவு. உணவு இனிது. இவரது பாடலில் காணப்படும் உவமை மிகவும் இனிதாக எல்லாரும் உணரும் வகையில் அமைந்துள்ளது. அதனால் இவரது அறிவைப் போற்றும் வகையில் இவரது பெயருக்கு முன் ‘தீன்மதி’ என்னும் அடைமொழி தரப்பட்டுள்ளது.

    தலைவன் தலைவிக்காக வெளியில் காத்திருக்கிறான். தலைவி தோழியிடம் சொல்கிறாள் எனத் தோள் அவரை எண்ணி வாடுகிறது. இதனைக் கண்ட தாய் முருகன் என்னை அணங்கியதால் இந்த வாட்டம் நேர்ந்துள்ளது என்று நினைக்கிறாள். இது யானையைக் கைக்குள் மறைப்பது போல உள்ளது.

    உண்மை வெளியிடத் தலைவன் பல்லார் முன் தோன்றட்டும் என்கிறாள் தலைவி என்ற கருத்மைந்தப் பாடலைத் தீன்மதி நாகனார் இயற்றியுள்ளார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:19:35(இந்திய நேரம்)