தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஆதிச்சநல்லூர்

  • புதுவை நயனப்ப முதலியார்

    (1779 – 1845)

    முனைவர் த.கலாஸ்ரீதர்
    உதவிப்பேராசிரியர்
    ஓலைச்சுவடித்துறை

    இவருடைய ஊர் புதுச்சேரி. இவர் தமது 18 ஆவது வயதில் சென்னைக்கு வந்தவர். சென்னைக் கோட்டைக் கல்லூரிக் கல்விச் சங்கத்தில் தலைமைத் தமிழ்ப் புலவராக இருந்தவர். இவர் ஓய்வு நேரங்களில் ஓலைச்சுவடிகளைத் திரட்டி ஆராய்ந்து அவற்றில் சிலவற்றைப் பரிசோதித்து அச்சில் பதிப்பித்துள்ளார். அவைகளுள் சிலவற்றின் விவரம்.

    1836 தஞ்சைவாணன் கோவை–பொய்யாமொழிப் புலவர் செய்தது. இது கையெழுத்துப் பிரதிகளில் பாடந்தோறும் பிழைபடுகின்றனவற்றை விலக்கிச் சுத்த பாடமாக வழங்கவிருக்கும் பொருட்டு அகப்பொருளிற்றோற்றுஞ் சங்கையெல்லாந் தீரத் தொல்காப்பிய வழிப்படி செய்தவுரைக்கிணங்கினதாகச் சென்னைக் கல்விச் சங்கத்துப் புலவராகிய புதுவை நயனப்ப முதலியாராற் பழுதற வாராயப்பட்டு சரஸ்வதி அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. ஒரு சொற் பலபொருட்டொகுதி உரை பாடம் (1836) நாலடியார் (1844), திவாகர நிகண்டு 9, 10 ஆம் பகுதி, சூடாமணி நிகண்டு (1839) 11 ஆம் பகுதி வரை அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார். சித்தாந்த சைவர்களின் உண்மை நிலை எனும் நூலையும் வெளியிட்டுள்ளார். இவரது காலத்தில் வில்லிபுத்தூரார் பாரதத்தை அச்சிடுவதற்காக வேண்டி பெருமக்கள் ஒரு குழுவை ஏற்படுத்தி அந்நூலைப் பதிப்பிக்கும் பொறுப்பைத் திரு நயனப்ப முதலியாரிடத்திலே ஒப்படைத்தனர். இவர் இதற்காக வேண்டிய சுவடிகளைச் சேர்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று இறந்து போனார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:17:18(இந்திய நேரம்)