தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • புதுவை சவராயலு நாயகர்

  (1829 – 1911)

  முனைவர் த.கலாஸ்ரீதர்
  உதவிப்பேராசிரியர்
  ஓலைச்சுவடித்துறை

  இவர் தமிழ்மொழியையும் பிரஞ்சு மொழியையும் கற்றவர். திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தேம்பாவணி, திருக்காவலூர் கலம்பகம் முதலிய கிருஸ்தவ நூல்களுக்குப் பொருள் விளக்கம் கேட்டுத் தமிழில் நல்ல பயிற்சியடைந்தவர். திரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை இவரைப் பாராட்டி சவராயலு நாயகர் மாலை பாடியுள்ளார். திரு தியாகராச செட்டியார் இவர் மீது இரட்டை மணிமாலை இயற்றியுள்ளார்.

  புதுவையில் வாழ்ந்த பல குருமார்களும் துரைமார்களும் சவராயலு நாயகரிடம் தமிழ்க் கற்றுக் கொண்டு அவரது புலமையைப் போற்றியுள்ளனர். இவரது புகழ் புதுவையைச் சுற்றிலும் தமிழகமெங்கும் கடல் கடந்தும் போரிஸ் போன்ற அயல்நாட்டுத் தலைநகரங்களிலும் பரவிற்று. இவரது சிறந்த முயற்சியின் விளைவாக 1866 இல் புதுச்சேரியில் ஒரு பெண் கல்விச் சாலை நிறுவப்பட்டது.

  பதிப்பு நூல்கள்

  இவர் தேவமாதாவின் பெயரில் பேரின்ப சதகம், பேரின்ப அந்தாதி, திருநவச் சதகம் முதலிய பாமாலையைப் பாடி அச்சிட்டுப் பதித்துள்ளார். இவர் காலத்தில் வழங்கி வந்த உருக்குலைந்த இசைப் பாடல்களைத் திரட்டி ஒழுங்குப்படுத்தி தேவதோத்திர சங்கீத கீர்த்தனம் என்றும் பெயரால் இவர் அச்சிட்டுப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். தாமே பல இசைப் பாடல்களைப் பாடி பல இசைவாணர்களைக் கொண்டு இராகமும் தாளமும் அமைத்து வெளியிட்ட பெருமையும் இவருக்கு உண்டு. சவராயலு நாயகரைத் தேம்பாவணி உபதேசிகர் என்று கிருஸ்தவர்கள் அன்பாக அழைப்பர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:19:33(இந்திய நேரம்)