தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • சோடசாவதானம் சுப்புராய செட்டியார்

  (- 1894)

  முனைவர் த.கலாஸ்ரீதர்
  உதவிப்பேராசிரியர்
  ஓலைச்சுவடித்துறை

  இவர் பாலக்கரை வீரராகவ செட்டியார் என்னும் புலவரின் மகனாவர். திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர். பதினாறு அவதானங்களைச் செய்து காண்பித்ததால் சோடசாவதானம் என்று விருது பெற்றவர். சென்னை அரசாங்கத்து நார்மல் பள்ளியில் தமிழ்ப் புலவராக இருந்தவர். இவர் விரிஞ்சேகர்சதகம் எயினனூர் ஆதிதல புராணம் திருசிராமலை வெண்பா என்னும் நூல்களை இயற்றியவர். பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்திற்கும், கம்பராமாயண அயோத்தியா காண்டத்திற்கும் உரை எழுதியவர்.

  பதிப்பு நூல்கள்

  பதினோராம் திருமுறை முழுவதையும் பல ஏட்டுச்சுவடிகளை ஒப்புநோக்கி முதன் முதலாகப் பதிப்பித்து 1869 இல் வெளியிட்டவர் இவரே. தம் ஆசிரியர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் மாயூரப் புராணம், நாகைக்கரோணப் புராணம் ஆகியவற்றையும், காங்கேயன் உரிச்சொல் நிகண்டு, திருப்போரூர் சந்நிதிமுறை ஆகியவற்றையும் பதிப்பித்துள்ளார். இவர் சிலப்பதிகாரப் புகார்க் காண்டம் கானல்வரிக்குப் புதியதாய் உரை எழுதி அச்சிட்டு முதன் முதலாக 1872 இல் பதிப்பித்துள்ளார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:20:24(இந்திய நேரம்)