தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • சரவணப் பெருமாளையர்

  முனைவர் த.கலாஸ்ரீதர்
  உதவிப்பேராசிரியர்
  ஓலைச்சுவடித்துறை

  இவர் திருத்தணிகை கந்தப்பையரின் இளைய மகனாவார். பிங்கல வருடம் பங்குனி மீ இரண்டாந் தேதி (1799) பிறந்தார். விசாகப் பெருமாளையரின் இளவல் இவரும் இராமானுசக் கவிராயரிடம் கல்வி பயின்றவர்.

  பதிப்பு நூல்கள்

  1830 இல் இவர் திருக்குறளைப் பரிமேலழகர் உரையுடனும், 1849 இல் தெளிபொருள் விளக்கவுரையுடனும் அச்சிட்டுப் பதிப்பத்துள்ளார். 1830 இல் அருணகிரியந்தாதியையும், 1832 இல் பழமலையந்தாதியையும், 1835 இல் திருக்கருவைப் பதிப்பந்தாதி மூலபாடத்தையும், 1836இல் கந்தரலங்காரத்தையும் சுத்த பாடமாகப் பதித்துள்ளார். மேலும் இவர் கொன்றைவேந்தனுரை, திருவள்ளுவமாலை உரை, நைடத உரை, 1842இல் நறுந்தொகை உரை, நன்னெறி உரை, நான்மணிமாலை உரை, பிரபுலிங்க உரை (மாயையுற்பத்திப் படலம் வரை), வாக்குண்டாம் உரை (1841) வெங்கைக் கோவை உரை ஆகியவற்றையும் அச்சிட்டுப் பதித்துள்ளார். இவர் நாலடியார் திருவிளையாடற் புராணம், திருவாசகம் (1857) முதலிய நூல்களையும் பரிசோதித்து அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார். இயற்றமிழ் சுருக்கம், இலக்கணச் சுருக்கம் வினாவிடை அணியியல் விளக்கம், கோள தீபிகை (1839), நான்மணிமாலை, குளத்தூர்ப் புராணம் என்பவைகளையும் இவர் இயற்றியுள்ளார்.

  இவர் பயன்படத்தக்க பல தமிழ் நூல்களை வெளியிட்டவர் என்று திரு.தி.செல்வக் கேசவராய முதலியார் தமது தமிழும் தமிழரும் (1896) எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:20:04(இந்திய நேரம்)