முகப்பு |
மருதம் |
8. மருதம் |
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் |
||
பழன வாளை கதூஉம் ஊரன் |
||
எம் இல் பெருமொழி கூறி, தம் இல், |
||
கையும் காலும் தூக்கத் தூக்கும் |
||
ஆடிப் பாவை போல, |
||
மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே. | உரை | |
கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் எனக் கேட்ட காதற் பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - ஆலங்குடி வங்கனார். |
9. நெய்தல் |
யாய் ஆகியளே மாஅயோளே- |
||
மடை மாண் செப்பில் தமிய வைகிய |
||
பெய்யாப் பூவின் மெய் சாயினளே; |
||
பாசடை நிவந்த கணைக் கால் நெய்தல் |
||
இன மீன் இருங் கழி ஓதம் மல்குதொறும் |
||
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் |
||
தண்ணம் துறைவன் கொடுமை |
||
நம் முன் நாணிக் கரப்பாடும்மே. | உரை | |
தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது. - கயமனார் |
19. மருதம் |
எவ்வி இழந்த வறுமையர் பாணர் |
||
பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று |
||
இனைமதி வாழியர்-நெஞ்சே!-மனை மரத்து |
||
எல்லுறும் மௌவல் நாறும் |
||
பல் இருங் கூந்தல் யாரளோ நமக்கே? | உரை | |
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது. - பரணர் |
31. மருதம் |
மள்ளர் குழீஇய விழவினானும், |
||
மகளிர் தழீஇய துணங்கையானும், |
||
யாண்டும் காணேன், மாண் தக்கோனை; |
||
யானும் ஓர் ஆடுகள மகளே; என் கைக் |
||
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த |
||
பீடு கெழு குரிசிலும், ஓர் ஆடுகள மகனே. | உரை | |
நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தோடு நின்றது. - ஆதிமந்தி |
33. மருதம் |
அன்னாய்! இவன் ஓர் இள மாணாக்கன்; |
||
தன் ஊர் மன்றத்து என்னன்கொல்லோ? |
||
இரந்தூண் நிரம்பா மேனியொடு |
||
விருந்தின் ஊரும் பெருஞ் செம்மலனே. | உரை | |
வாயிலாகப் புக்க பாணன் கேட்ப, தோழியை நோக்கி, தலைமகள் வாயில் நேர்வாள் கூறியது. - படுமரத்து மோசிகீரன் |
34. மருதம் |
ஒறுப்ப ஓவலர், மறுப்பத் தேறலர், |
||
தமியர் உறங்கும் கௌவை இன்றாய், |
||
இனியது, கேட்டு இன்புறுக இவ் ஊரே!- |
||
முனாஅது, யானையங்குருகின் கானல்அம் பெருந்தோடு |
||
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம் |
||
குட்டுவன் மரந்தை அன்ன எம் |
||
குழை விளங்கு ஆய் நுதற் கிழவனும் அவனே. | உரை | |
வரைவு மலிந்தமை ஊர்மேல் வைத்துத் தோழி கிழத்திக்குச் சொல்லியது.- கொல்லிக் கண்ணன் |
35. மருதம் |
நாண் இல மன்ற, எம் கண்ணே-நாள் நேர்பு, |
||
சினைப் பசும்பாம்பின் சூல் முதிர்ப்பன்ன |
||
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ |
||
நுண் உறை அழிதுளி தலைஇய |
||
தண் வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே. | உரை | |
பிரிவிடை மெலிந்த கிழத்தி தோழிக்குச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றி |
45. மருதம் |
காலை எழுந்து, கடுந் தேர் பண்ணி, |
||
வால் இழை மகளிர்த் தழீஇய சென்ற |
||
மல்லல் ஊரன், 'எல்லினன் பெரிது' என, |
||
மறுவரும் சிறுவன் தாயே; |
||
தெறுவது அம்ம, இத் திணைப் பிறத்தல்லே. | உரை | |
தலைமகற்குப் பாங்காயினார் வாயில் வேண்டியவழி, தோழி வாயில் நேர்ந்தது.- ஆலங்குடி வங்கனார் |
46. மருதம் |
ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன |
||
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ |
||
முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து |
||
எருவின் நுண் தாது குடைவன ஆடி, |
||
இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும் |
||
புன்கண் மாலையும், புலம்பும், |
||
இன்றுகொல்-தோழி!-அவர் சென்ற நாட்டே? | உரை | |
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது. - மாமிலாடன். |
50. மருதம் |
ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் |
||
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த் |
||
துறை அணிந்தன்று, அவர் ஊரே; இறை இறந்து |
||
இலங்கு வளை நெகிழ, சாஅய்ப் |
||
புலம்பு அணிந்தன்று, அவர் மணந்த தோளே. | உரை | |
கிழவற்குப் பாங்காயின வாயில்கட்குக் கிழத்தி சொல்லியது. - குன்றியனார் |
53. மருதம் |
எம் அணங்கினவே-மகிழ்ந! முன்றில் |
||
நனை முதிர் புன்கின் பூத் தாழ் வெண் மணல், |
||
வேலன் புனைந்த வெறி அயர் களம்தொறும் |
||
செந் நெல் வான் பொரி சிதறி அன்ன, |
||
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை, |
||
நேர் இறை முன்கை பற்றி, |
||
சூரரமகளிரோடு உற்ற சூளே. | உரை | |
வரைவு நீட்டித்தவழித் தோழி தலைமகற்கு உரைத்தது. - கோப்பெருஞ்சோழன் |
61. மருதம் |
தச்சன் செய்த சிறு மா வையம், |
||
ஊர்ந்து இன்புறாஅர்ஆயினும், கையின் |
||
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல, |
||
உற்று இன்புறேஎம்ஆயினும், நற்றோர்ப் |
||
பொய்கை ஊரன் கேண்மை |
||
செய்து இன்புற்றனெம்; செறிந்தன வளையே. | உரை | |
தோழி தலைமகன் வாயில்கட்கு உரைத்தது. - தும்பிசேர்கீரன் |
75. மருதம் |
நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?- |
||
ஒன்று தெளிய நசையினம்; மொழிமோ! |
||
வெண் கோட்டு யானை சோணை படியும் |
||
பொன் மலி பாடலி பெறீஇயர்!- |
||
யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே? | உரை | |
தலைமகன் வரவுணர்த்திய பாணர்க்குத் தலைமகள் கூறியது. - படுமரத்து மோசிகீரனார் |
80. மருதம் |
கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சி, |
||
பெரும் புனல் வந்த இருந் துறை விரும்பி, |
||
யாம் அஃது அயர்கம் சேறும்; தான் அஃது |
||
அஞ்சுவது உடையளாயின், வெம் போர் |
||
நுகம் பட கடக்கும் பல் வேல் எழினி |
||
முனை ஆன் பெரு நிரை போல, |
||
கிளையொடு காக்க, தன் கொழுநன் மார்பே. | உரை | |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - ஒளவையார் |
85. மருதம் |
யாரினும் இனியன்; பேர் அன்பினனே- |
||
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல் |
||
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர், |
||
தேம் பொதிக் கொண்ட தீம் கழைக் கரும்பின் |
||
நாறா வெண் பூ கொழுதும் |
||
யாணர் ஊரன் பாணன் வாயே. | உரை | |
வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தோழி சொல்லி, வாயில் மறுத்தது. - வடம வண்ணக்கன் தாமோதரன் |
89. மருதம் |
பா அடி உரல பகுவாய் வள்ளை |
||
ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப; |
||
அழிவது எவன்கொல், இப் பேதை ஊர்க்கே?- |
||
பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லிக் |
||
கருங் கட் தெய்வம் குடவரை எழுதிய |
||
நல் இயல் பாவை அன்ன இம் |
||
மெல் இயல் குறுமகள் பாடினள் குறினே. | உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது;தலைமகற்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லி, வாயில் மறுத்ததூஉம் ஆம். - பரணர் |
91. மருதம் |
அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற விளை கனி |
||
குண்டு நீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம் |
||
தண் துறை ஊரன் பெண்டினை ஆயின், |
||
பல ஆகுக, நின் நெஞ்சில் படரே! |
||
ஓவாது ஈயும் மாரி வண் கை, |
||
கடும் பகட்டு யானை, நெடுந் தேர், அஞ்சி |
||
கொன் முனை இரவு ஊர் போலச் |
||
சில ஆகுக, நீ துஞ்சும் நாளே! | உரை | |
பரத்தையர்மாட்டுப் பிரிந்த தலைமகன் வாயில் வேண்டிப் புக்கவழி, தன்வரை த்தன்றி அவன் வரைத்தாகித் தன் நெஞ்சு நெகிழ்ந்துழி, தலைமகள் அதனை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற் பிர |
93. மருதம் |
நல் நலம் தொலைய, நலம் மிகச் சாஅய், |
||
இன் உயிர் கழியினும் உரையல்; அவர் நமக்கு |
||
அன்னையும் அத்தனும் அல்லரோ? |
||
புலவி அஃது எவனோ, அன்பிலங்கடையே? | உரை | |
வாயிலாகப் புக்க தோழிக்கு வாயில் மறுத்தது. - அள்ளூர் நன்முல்லையார் |
107. மருதம் |
குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன |
||
தொகு செந் நெற்றிக் கணம்கொள் சேவல்!- |
||
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும் |
||
பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி, |
||
கடு நவைப் படீஇயரோ, நீயே-நெடு நீர் |
||
யாணர் ஊரனொடு வதிந்த |
||
ஏம இன் துயில் எடுப்பியோயே! | உரை | |
பொருள் முற்றி வந்த தலைமகனை உடைய கிழத்தி காமம் மிக்க கழிபடர் கிளவியால் கூறியது. - மதுரைக் கண்ணனார். |
113. மருதம் |
ஊர்க்கும் அணித்தே, பொய்கை; பொய்கைக்குச் |
||
சேய்த்தும் அன்றே, சிறு கான்யாறே: |
||
இரை தேர் வெண் குருகு அல்லது யாவதும் |
||
துன்னல் போகின்றால், பொழிலே; யாம் எம் |
||
கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்; |
||
ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே. | உரை | |
பகற்குறி நேர்ந்த தலைமகற்குக் குறிப்பினால் குறியிடம் பெயர்த்துச் சொல்லியது.- மாதீர்த்தன் |
127. மருதம் |
குருகு கொளக் குளித்த கெண்டை அயலது |
||
உரு கெழு தாமரை வால் முகை வெரூஉம் |
||
கழனிஅம் படப்பை காஞ்சி ஊர! |
||
ஒரு நின் பாணன் பொய்யன் ஆக, |
||
உள்ள பாணர் எல்லாம் |
||
கள்வர் போல்வர், நீ அகன்றிசினோர்க்கே. | உரை | |
பாணன் வாயிலாகப் புக்கவழித் தலைமகற்குத் தோழி சொல்லியது. - ஓரம்போகியார் |
138. குறிஞ்சி |
கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே- |
||
எம் இல் அயலது ஏழில் உம்பர், |
||
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி |
||
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த |
||
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே. | உரை | |
குறி பிழைத்த தலைமகன் பிற்றை ஞான்று இரவுக்குறி வந்துழி, தோழி சிறைப்புறமாகக் கூறியது; இரவுக்குறி நேர்ந்ததூஉம் ஆம். - கொல்லன் அழிசி |
139. மருதம் |
மனை உறை கோழி குறுங் கால் பேடை, |
||
வேலி வெருகினம் மாலை உற்றென, |
||
புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய |
||
பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந்தாஅங்கு |
||
இன்னாது இசைக்கும் அம்பலொடு |
||
வாரல், வாழியர்!-ஐய!-எம் தெருவே. | உரை | |
வாயில் வேண்டிப் புக்க தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - ஒக்கூர் மாசாத்தியார். |
155. முல்லை |
முதைப் புனம் கொன்ற ஆர்கலி உழவர் |
||
விதைக் குறு வட்டி போதொடு பொதுளப் |
||
பொழுதோ தான் வந்தன்றே; 'மெழுகு ஆன்று |
||
ஊது உலைப் பெய்த பகுவாய்த் தெண் மணி |
||
மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப, சுரன் இழிபு, |
||
மாலை நனி விருந்து அயர்மார் |
||
தேர் வரும்' என்னும் உரை வாராதே. | உரை | |
தலைமகள் பருவம் கண்டு அழிந்து சொல்லியது. - உரோடகத்துக் கந்தரத்தன் |
157. மருதம் |
'குக்கூ' என்றது கோழி; அதன் எதிர் |
||
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்- |
||
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும் |
||
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே. | உரை | |
பூப்பு எய்திய தலைமகள் உரைத்தது. - அள்ளூர் நன்முல்லை |
164. மருதம் |
கணைக் கோட்டு வாளைக் கமஞ் சூல் மட நாகு |
||
துணர்த் தேக்கொக்கின் தீம் பழம் கதூஉம் |
||
தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது |
||
தண் பெரும் பௌவம் அணங்குக-தோழி!- |
||
மனையோள் மடமையின் புலக்கும் |
||
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே! | உரை | |
காதல்பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது. - மாங்குடிமருதன் |
169. மருதம் |
சுரம் செல் யானைக் கல் உறு கோட்டின் |
||
தெற்றென இறீஇயரோ-ஐய! மற்று யாம் |
||
நும்மொடு நக்க வால் வெள் எயிறே: |
||
பாணர் பசுமீன் சொரிந்த மண்டை போல |
||
எமக்கும் பெரும் புலவு ஆகி, |
||
நும்மும் பெறேஎம், இறீஇயர் எம் உயிரே. | உரை | |
கற்புக் காலத்துத் தெளிவிடை விலங்கியது; இனித் தோழி வரைவு நீட்டித்தவழி வரைவு கடாயதூஉம் ஆம். - வெள்ளிவீதியார். |
171. மருதம் |
காண் இனி வாழி-தோழி-யாணர்க் |
||
கடும்புனல் அடைகரை நெடுங் கயத்து இட்ட |
||
மீன் வலை மாப் பட்டாஅங்கு, |
||
இது மற்று-எவனோ, நொதுமலர் தலையே? | உரை | |
வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.- பூங்கணுத்திரையார் |
178. மருதம் |
அயிரை பரந்த அம் தண் பழனத்து |
||
ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள்கால் |
||
ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு, இவள் |
||
இடை முலைக் கிடந்தும், நடுங்கல் ஆனீர்; |
||
தொழுது காண் பிறையின் தோன்றி, யாம் நுமக்கு |
||
அரியம் ஆகிய காலைப் |
||
பெரிய நோன்றனிர்; நோகோ யானே. | உரை | |
கடிநகர் புக்க தோழி, தலைமகன் புணர்ச்சி விதும்பல் கண்டு, முன்னர்க் களவுக் காலத்து ஒழுகலாற்றினை நினைந்து, அழிந்து கூறியது. - நெதும்பல்லியத்தை |
181. குறிஞ்சி |
இது மற்று எவனோ-தோழி!-துனியிடை |
||
இன்னர் என்னும் இன்னாக் கிளவி- |
||
இரு மருப்பு எருமை ஈன்றணிக் காரான் |
||
உழவன் யாத்த குழவியின் அகலாது, |
||
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன் |
||
திரு மனைப் பல் கடம் பூண்ட |
||
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே? | உரை | |
தலைமகன் பரத்தையிற் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது. - கிள்ளிமங்கலங்கிழார் |
196. மருதம் |
வேம்பின் பைங் காய் என் தோழி தரினே, |
||
'தேம் பூங் கட்டி' என்றனிர்; இனியே, |
||
பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர் |
||
தைஇத் திங்கள் தண்ணிய தரினும், |
||
'வெய்ய உவர்க்கும்' என்றனிர்- |
||
ஐய!-அற்றால் அன்பின் பாலே. | உரை | |
வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி கூறியது. - மிளைக் கந்தன். |
202. மருதம் |
நோம், என் நெஞ்சே! நோம், என் நெஞ்சே! |
||
புன் புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக் |
||
கட்கு இன் புது மலர் முட் பயந்தாஅங்கு, |
||
இனிய செய்த நம் காதலர் |
||
இன்னா செய்தல் நோம், என் நெஞ்சே! | உரை | |
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. - அள்ளூர் நன்முல்லை |
203. மருதம் |
மலை இடையிட்ட நாட்டரும் அல்லர்; |
||
மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்; |
||
கண்ணின் காண நண்ணுவழி இருந்தும், |
||
கடவுள் நண்ணிய பாலோர் போல, |
||
ஒரீஇனன் ஒழுகும் என்னைக்குப் |
||
பரியலென்மன் யான், பண்டு ஒரு காலே. | உரை | |
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நெடும்பல்லியத்தன் |
231. மருதம் |
ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்; |
||
சேரி வரினும் ஆர முயங்கார்; |
||
ஏதிலாளர் சுடலை போலக் |
||
காணாக் கழிபமன்னே-நாண் அட்டு, |
||
நல் அறிவு இழந்த காமம் |
||
வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே. | உரை | |
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
238. மருதம் |
பாசவல் இடித்த கருங் காழ் உலக்கை |
||
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி, |
||
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் |
||
தொண்டி அன்ன என் நலம் தந்து, |
||
கொண்டனை சென்மோ-மகிழ்ந!-நின் சூளே. | உரை | |
தலைமகன் பரத்தையின் மறுத்தந்து, வாயில் வேண்டித் தோழியிடைச் சென்று, தெளிப்பான் புக்காற்குத் தோழி சொல்லியது. - குன்றியன் |
258. மருதம் |
வாரல் எம் சேரி; தாரல் நின் தாரே; |
||
அலராகின்றால்-பெரும!-காவிரிப் |
||
பலர் ஆடு பெருந் துறை மருதொடு பிணித்த |
||
ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை, |
||
அரியல்அம் புகவின் அம் கோட்டு வேட்டை |
||
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன், |
||
அழிசி ஆர்க்காடு அன்ன இவள் |
||
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே. | உரை | |
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது; வாயில் நேர்ந்ததூஉம். ஆம். - பரணர் |
271. மருதம் |
அருவி அன்ன பரு உறை சிதறி |
||
யர்றுநிறை பகரும் நாடனைத் தேறி, |
||
உற்றதுமன்னும் ஒரு நாள்; மற்று-அது |
||
தவப் பல் நாள் தோள் மயங்கி, |
||
வௌவும் பண்பின் நோய் ஆகின்றே, | உரை | |
தலைமகற்கு வாயில் நேர்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.- அழிசி நச்சாத்தனார் |
293. மருதம் |
கள்ளின் கேளிர் ஆர்த்திய, உள்ளூர்ப் |
||
பாளை தந்த பஞ்சிஅம் குறுங் காய் |
||
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும் |
||
ஆதி அருமன் மூதூர் அன்ன, |
||
அய வெள்ளாம்பல் அம் பகை நெறித் தழை |
||
தித்திக் குறங்கின் ஊழ் மாறு அலைப்ப, |
||
வருமே சேயிழை, அந்தில் |
||
கொழுநற் காணிய; அளியேன் யானே! | உரை | |
பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்கு வாயிலாகப் புக்க தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கள்ளில் ஆத்திரையன் |
295. நெய்தல் |
உடுத்தும், தொடுத்தும், பூண்டும், செரீஇயும், |
||
தழை அணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி, |
||
விழவொடு வருதி, நீயே; இஃதோ |
||
ஓர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை |
||
பெரு நலக் குறுமகள் வந்தென, |
||
இனி விழவு ஆயிற்று என்னும், இவ் ஊரே. | உரை | |
வாயில் வேண்டிச் சென்ற கிழவற்குத் தோழி உரைத்தது. - தூங்கலோரி |
305. மருதம் |
கண் தர வந்த காம ஒள் எரி |
||
என்பு உற நலியினும், அவரொடு பேணிச் |
||
சென்று, நாம் முயங்கற்கு அருங் காட்சியமே |
||
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே; |
||
உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார் |
||
குப்பைக் கோழித் தனிப் போர் போல, |
||
விளிவாங்கு விளியின் அல்லது, |
||
களைவோர் இலை-யான் உற்ற நோயே. | உரை | |
காப்பு மிகுதிக்கண், தோழி அறத்தோடு நிற்பாளாக, தனது ஆற்றாமை தோன்றத் தலைமகள் தன்னுள்ளே கூறியது. - குப்பைக் கோழியார். |
309. மருதம் |
கைவினை மாக்கள் தம் செய் வினை முடிமார், |
||
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட, |
||
நீடிய வரம்பின் வாடிய விடினும், |
||
'கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம்' என்னாது' |
||
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் |
||
நின் ஊர் நெய்தல் அனையேம்-பெரும!- |
||
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும், |
||
நின் இன்று அமைதல் வல்லாமாறே. | உரை | |
பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்குத் தோழி வாயில் நேர்ந்தது.- உறையூர்ச் சல்லியன் குமாரன் |
330. மருதம் |
நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து எடுத்துத் |
||
தலைப் புடைப் போக்கித் தண் கயத்து இட்ட |
||
நீரின் பிரியாப் பரூஉத் திரி கடுக்கும் |
||
பேர் இலைப் பகன்றைப் பொதி அவிழ் வான் பூ |
||
இன் கடுங் கள்ளின் மணம் இல கமழும் |
||
புன்கண் மாலையும், புலம்பும், |
||
இன்றுகொல்-தோழி!-அவர் சென்ற நாட்டே? | உரை | |
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றியன் |
354. மருதம் |
நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்; |
||
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்; |
||
தணந்தனைஆயின், எம் இல் உய்த்துக் கொடுமோ- |
||
அம் தண் பொய்கை எந்தை எம் ஊர்க் |
||
கடும் பாம்பு வழங்கும் தெருவில் |
||
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே? | உரை | |
பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- கயத்தூர் கிழான் |
359. மருதம் |
கண்டிசின்-பாண!-பண்பு உடைத்து அம்ம: |
||
மாலை விரிந்த பசு வெண் நிலவின் |
||
குறுங் காற் கட்டில் நறும் பூஞ் சேக்கை, |
||
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ, |
||
புதல்வற் தழீஇயினன் விறலவன்; |
||
புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளே. | உரை | |
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிப் பெறாது, தானே புக்குக் கூடியது கண்டு தோழி, பாணற்குச் சொல்லியது. - பேயன். |
364. மருதம் |
அரில் பவர்ப் பிரம்பின் வரி புற நீர்நாய் |
||
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன் |
||
பொன் கோல் அவிர் தொடித் தற் கெழு தகுவி |
||
எற் புறங்கூறும் என்ப; தெற்றென |
||
வணங்கு இறைப் பணைத் தோள் எல் வளை மகளிர் |
||
துணங்கை நாளும் வந்தன அவ் வரைக் |
||
கண் பொர, மற்று அதன்கண் அவர் |
||
மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே. | உரை | |
வேறு ஒரு பரத்தை தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட இற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பக் கூறியது. - ஒளவையார் |
367. மருதம் |
கொடியோர் நல்கார்ஆயினும், யாழ நின் |
||
தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர், |
||
உவக்காண்-தோழி!-அவ் வந்திசினே- |
||
தொய்யல் மா மழை தொடங்கலின், அவர் நாட்டுப் |
||
பூசல் ஆயம் புகன்று இழி அருவி |
||
மண்ணுறு மணியின் தோன்றும் |
||
தண் நறுந் துறுகல் ஓங்கிய மலையே. | உரை | |
வரைவு உணர்த்திய தோழி தலைமகட்குக் கழியுவகை மீதூராமை உணர்த்தியது;வரைவு நீட்டித்த இடத்து ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றும் வகையான் ஆற்றுவித்ததூஉம் ஆம். - மதுரை மருதன் இளநாகன் |
368. மருதம் |
மெல்லியலோயே! மெல்லியலோயே! |
||
நல் நாண் நீத்த பழி தீர் மாமை |
||
வன்பின் ஆற்றுதல் அல்லது, செப்பின், |
||
சொல்ல கிற்றா மெல்லியலோயே! |
||
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே, |
||
நாள் இடைப் படாஅ நளி நீர் நீத்தத்து |
||
இடிகரைப் பெரு மரம் போல, |
||
தீது இல் நிலைமை முயங்குகம் பலவே. | உரை | |
வரைவு மலிந்த தோழிக்குக் கிழத்தி கூறியது. - நக்கீரர் |
370. முல்லை |
பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழு முகை |
||
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு |
||
இருப்பின், இரு மருங்கினமே; கிடப்பின், |
||
வில்லக விரலின் பொருந்தி; அவன் |
||
நல் அகம் சேரின், ஒரு மருங்கினமே. | உரை | |
கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் என்பது கேட்டபரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - வில்லக விரலினார் |
384. மருதம் |
உழுந்துடை கழுந்தின் கரும்புடைப் பணைத் தோள், |
||
நெடும் பல் கூந்தல், குறுந்தொடி, மகளிர் |
||
நலன் உண்டு துறத்தி ஆயின், |
||
மிக நன்று அம்ம-மகிழ்ந!-நின் சூளே. | உரை | |
'நின் பரத்தையர்க்கு நீ உற்ற சூளூறவு நன்றாயிருந்தது!' என்று நகையாடித் தோழி வாயில் மறுத்தது. - ஓரம்போகியார் |
393. மருதம் |
மயங்கு மலர்க் கோதை குழைய மகிழ்நன் |
||
முயங்கிய நாள் தவச் சிலவே அலரே, |
||
கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் |
||
பசும் பூட் பாண்டியன் வினை வல் அதிகன் |
||
களிறொடு பட்ட ஞான்றை, |
||
ஒளிறு வாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே | உரை | |
தலைமகன் சிறைப்புறமாக, தோழி அலர் மலிவு உரைத்தது, வரைவு கடாயது.- பரணர் |
399. மருதம் |
ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க |
||
பாசி அற்றே பசலை-காதலர் |
||
தொடுவுழித் தொடுவுழி நீங்கி, |
||
விடுவுழி விடுவுழிப் பரத்தலானே. | உரை | |
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பரணர் |