10. யூகிக்கு
விலாவித்தது
|
இதன்கண் : சாங்கியத்தாய்
உதயணன்பாற் செல்லுதலும் ;அவனோடு அளவளாவுதலும், பின்னர் வாசவதத்தையைக் கண்டு
அளவளாவுதலும், பின்னர் உருமண்ணுவாவையும் வயந்தகனையும் கண்டு யூகி தன்பால் கூறிய
மறைச்செய்தி்யைக் கூறுதலும் வயந்தகன் வரைந்து தந்த உதயணன் உருவப்படத்தைக்
கொண்டுசென்று உதயணன்பால் கொடுத்தலும், உதயணன் அப்படத்தில் உள்ள குறிப்பாலே
யூகி இறந்துவிட்டான் என்று கருதிக் கையற வெய்துதலும், பின்னர் ஒருவகையாகத் தெளிந்து,
யூகியின் சிறப்புக்கள் பலவற்றையும் கூறிக்கூறிப் புலம்புதலும், நல்லோர் தேற்றுதலும்
கூறப்படும். |
|
5
10 |
அறம்புரி யாட்டி அமைச்சனின் நீங்கி மறம்புரி தானை மன்னவன்
இருந்த தயங்குஇதழ்த்
தாமரைத் தண்பணை தழீஇய சயந்தியம் பெரும்பதி இயைந்துஇகம்
புக்குப் பொன்வரை அன்ன பொருவுஇல் ஆகத்து மன்ன குமரனை மரபுளிக்
குறுகித் தாய்காண் கன்றின் காவலன் விரும்பி ஏற்ற செவ்வி மாற்றம்
கூறிச் சேடுபடப் புனைந்த சித்திரக் கம்மத்துப் பீடங் காட்டலின் ஈடுபட இருந்து
|
உரை |
|
15 |
மன்னவன் மகனே மாதரொடு
போந்து நின்நகர்ப் புகுந்த பின்னர்க்
கண்டனென் என்னா கியர்மற்று என்வயின்
இனியென முகமன் கிளவி தகுவ கூறி ஆடியல் யானை அவந்தியல்
நகர்வயின் பாடி மாற்றமொடு பட்டதை உரைத்தபின் முனிமூ தாட்டியை முகன்அமர்ந்து
நோக்கி இனியவர் பெருங்கடம் இயல்பின் தீர்த்த யூகி நும்மொடு போந்தில னோஎனப்
|
உரை |
|
20
25
30 |
போகிய
புகழோன்குப் பொருக்கென உரையாள் ஆங்கவன் கேட்ப அறிவின்
நாடி சாங்கிய முதுமகள் தான்தெரிந்து
உரைக்கும் ஒலியுஞ் சேனையுள் வலியோரை வணக்கி நங்கையைத் தழீஇநீ போந்த கங்குல் பட்டதை எல்லாம் பட்டாங்கு உணர்ந்து மறுபிறப்பு உணர்ந்த மாந்தர்
போல உறுகுறைக் கருமம் உள்ளகம் மருங்கின் தானே உணரின் அல்லது
புறப்பட்டு ஏனோர் அறியா இயற்கைத்து ஆகிக் காரிய முடிவின் ஆரிருள் மறையா
|
உரை |
|
35 |
அரும்பொறி வையத்துக் கரந்துஅகத்து
ஒடுங்கி எம்மைக் கொண்டுவந்து ஏமஞ் சார்த்தி வெம்மை வேட்டுவர் வியன்மலை
வரைப்பின் கோல்தொழில் கருமம் ஆற்றுளி முடித்துச் சிலபகல் கழிந்த பின் வருவன்நீர்சென்று நலமிகு வேந்தனை நண்ணுமின்
விரைந்துஎன்று ஓழிந்தனன் உதயண யூகி
பின்என மொழிந்தனள் அடக்கி முகிழ்விரல் பணைத்தோள்
|
உரை |
|
40 |
வாசவ
தத்தையை வகையுளிக் காண்கெனத் தேச மன்னன் திறத்துளிக் கூறக் கன்றுகாண் கறவையின் சென்றுஅவள்
பொருந்தித் தளர்நடை இளமையில்
தான்கொண்குஓம்பிய வளர்கொடி மருங்குல் வருந்தப்
புல்லி உவகைத் தண்துளி ஊழ்ஊழ் சிதறி
|
உரை |
|
45
50 |
அமிர்துகடை கடலின்
அரவம் ஓவாது தமர்தலை மணந்த தன்பெரும்
கோயில் கண்ணீர் வெள்ளம் கால்அலைத்து ஒழுக வட்டிகை வாக்கின் வனப்பொடு
புணர்ந்த பட்டச் சின்நுதல் பதினாறு ஆயிரர் நும்மோய் மார்களும் தம்இன மகளிரும் ஒருதுணை ஆயமும் உடைவுகொண்டு ஒழியப்
|
உரை |
|
55 |
பெருமகன் தான்எனப் பெற்றியில்
பிழையான் யாப்பமை காதலோடு ஆருயிர் அன்ன கோப்பெருந் தேவிக்கு நீப்புஇடம்
உணர்த்தித் தந்தைஉரை
காட்ட உய்ந்தது முதலா இன்பக்-கட்டுரை பைந்தொடி
கேட்ப முறைமையின் விரிப்ப முகத்துஒளி புல்என
|
உரை |
|
60
65 |
நிறைமலர் நெடுங்கண் நீஇர்
நெகிழத் தமர்வயின் நினைஇய தன்மையள் ஆகிப் புகர்இல் கோலத்துப் புனைஇழை
புலம்பத் தாழ்நகை ஆகத்துத் தண்காள்து
சிதைய வீழ்தரு வெந்துளி விரலின் நீக்கிச்
. செவிலித் தவமகள் தேறக் காட்டி அவலம் கோடல் அங்கண் ஞாலந்து வெங்கண் வேந்தன் பைந்தொடிப்
பாவாய் மங்கல மகளிர்க்கு மரபுஅன்று இதுவென
|
உரை |
|
70 |
நீலப் பொய்கைப் பாசடைத்
தாமரை கதிர்வாய் திறந்து,,,,,,, ,,. ,,,,
, பகுவாய்க் கிண்கிணி பரட்டுமிசை ஆர்ப்பக் கோடுவாய் சிலம்பி்ன் கொழுஞ்சிகைக்
குன்றின் பாடமை படுகால் பைய ஏறி நங்காய் காண்உன் பெருமான்
நன்னகர் உந்தத் திசையதென்று ஒன்றப்
பிறவும் உகப்பக் கூறி மிகப்பல வருட்டி
|
உரை |
|
75 |
உலகியல் வழாஅ உருமண்
ணுவாவொடு வலிகெழு நோன்தாள் வயந்தகன் குறுகி நட்டோன் துணிந்த கட்டுஅழல்
கருமம் மந்தணம் ஆக அந்தணி உரைத்தலும்
|
உரை |
|
80
85
90 |
நன்நெறி நூல்வழித் திண்ணறி
வாளன் வருந்தி நோற்ற
அருந்தவம் போலப் பிற்பயம் உடைமை தெற்றெனத்
தெளிந்து தெரிமதி யாட்டியைத் திட்பங் கொளீஇ அருமதி அமைச்சனை அன்பில்
கெழீஇ,த் தோழன்கு உணர்த்தும் குழ்வினை
தொடங்கிக் கட்டளை
அமைந்த கண்ஆர் வனப்பினோர் வட்டிகைப் பலகையுள் வாக்குவகை
அமைத்து வத்தவன் வடிவினோர் வண்ணப் பாவை வித்தகம் சிறப்ப வேறுபட
எழுதி நாற்கண் ஆக அமைத்துமற்று அவற்றுள் மேற்கண் மழுகிய வினையிற்று ஆகக் கைத்தொழில் அமைத்தபின்
உய்த்தவள்கு உணர்த்தி
|
உரை |
|
95 |
விருத்தி அமைத்த வினைமுடி பாவைக் கருத்துமெய் தெரிதல் காவலன்
கடன்எனத் தேவியோடு இருந்த செவ்விக்
கோட்டியுள் ஓவியப் பாவை உய்த்துஅவள் காட்ட நுண்உணர் மன்னன் தன்ஒப்
பாகிய கண்உளர் நுட்பத்துக் கருத்து நோக்கி
|
உரை |
|
100
105 |
இடம்படு ஞாலத்து உடம்பொடு புணர்ந்த இன்னியல் மாந்தர் திண்ணியல்
உறுப்பினுள் தாளே
பெருங்கிளை தோளே துணைவி பல்லே மக்கள் கண்ணே
தோழர் முடியே குரவர் அடியே ஆளாம் ஆக்கையின் னாடி அங்ஙனங்
காணின் மேற்கட் குற்றது விதுப்பியல்
வழாது நூற்கண்
நுனித்த நுண்உணர் எண்ணத்தின் யூகி தன்வயின் உறுகண்
வெந்தொழில் ஆகியது உண்டென ஐயம் தேறி
|
உரை |
|
110 |
உதயணன் மாழாந்து உயிர்வாழ்வு ஒழிகெனச் சிதர்பொறி எந்திரம் போலச்
சிதர்ந்து தாரும்
பூணும் மார்பிடைத் துயல்வரச் சோரும் கண்ணினன் துளங்கிமெய்ம் மறப்ப
|
உரை |
|
115 |
இடிஎறு
உண்ட நாகம் போலக் கொடிஏர் சாயல் கொழுங்கவின் வாடப்
பூஇருங்
கூந்தல் புல்என விரிய வாசவ தத்தையும் வத்தவன் மார்பின் மம்மர் எய்திய மயக்கம் நோக்கி
விம்மல்
எய்தி வியன்பெருங் கோயில் அழுகை ஆகுலம் கழுமிய பின்றை
|
உரை |
|
120 |
அவல
உயிர்ப்பிணி அடியற எறியும்
தவலருஞ் சாந்தந்து
அடிஉற அப்பிச் சீதச் செய்கையின் மாதுயர்
விடுப்பத் தீதில் பெருமகன் தெலிவுமுந்து உறீஇக்
காதலில்
கவலைப் பாசம் தட்பத் தண்தா மரைக்கண் வெம்பனி வீழ
|
உரை |
|
125
130 |
விண்தோய்
கானத்து வேழ வேட்டத்துச் சிறைகொளப் பட்டியான் செல்சார்வு
அறுத்தபின் மறைகொள் மாயமொடு துறைநகர் விழவினுள் ஏதில் மன்னன் காதலி
பயந்த மாதரைத் தழீஇப் போதரப் புணர்த்துப் போதுவல் என்றோய் பொய்த்தனை
யோஎனக் காதல் தோழனைக் காணாது கலங்கி
|
உரை |
|
135 |
மாதாங்கு தடக்கை மன்னருள்
மன்னவன் நளிகதிர் மண்டிலம் நாள்முதல் தோன்றி ஒளிஇடப் பெறாஅ உலகம்
போல இருளகம் புதைப்ப
மருளகத்து எய்தித் தருமமும் கருமமும் தளரச்
சாஅய் ஆழின் அல்லதை அரசியல் வழாமை வாழ்தல் ஆற்றேன் யான்என மயங்கியும்
|
உரை |
|
140
145
150 |
நிழல்பொலி காவின் நிரந்துடன்
ஆடிக் குழல்சிகை
அவிழக் குண்டுநீர் யமுனைக் கணைக்கடு நீத்திடைப் புணைப்புறம்
தழீஇ விளையாட்டு விரும்பி அளைஇன
வாகிய இன்சுவை
அடிசில் உண்பதும் ஒரீஇ மன்பெருங் கோயிலுள் வளர்ந்த
காலை வேக நம்பிக்கு
விலக்குக
அடிசில்என்(று) ஆகுபொருள் அறிவி அரும்பொருள் என்மகன் யூகந் தராயன் உண்கென
உண்ணாய் குடிப்பெருந் தேவி அடிக்கலம் பற்றி அருளினும் காயினும் ஒப்பது அல்லதை பொருள்அஃதன்று புரவலன்
மாட்டுஎன்று என்செய் குற்றம் நின்கண் தாங்கி அன்பளி சிறப்பித்து இன்பதம்
இயற்றல் இளமைக் காலத்தும் இயல்போ உடையோய்
|
உரை |
|
155 |
முதுமைக் காலத்து மதலையின்
தாங்கிப் பின்போக் குரிய
பெருந்தகை யாள முன்போக்கு விரும்புதல் மூர்க்கரது
இயல்பெனக் கேட்டோர் உருக மீட்டுமீட்டு அரற்றப்
|
உரை |
|
160
165 |
பூந்தார் மார்ப புலம்புகொண்டு
அழீஇ இருநில வரைப்பின் இயற்கை ஓராப் பெருநிலம் காவல பேணாது
அவர்முன் இனையை ஆகுதல் இறைமை அன்றால் கொடுங்காழ் சோரினும் கூடம்
ஊன்றிய நெடுங்காழ் போல நிலைமையின்
வழாஅது துன்பத்தில் துளங்காது இன்பத்தின் மகிழாது ஆற்றுளி நிற்றல் ஆடவர்
கடனென மாற்றம் பற்பல மரபில் கூறி
|
உரை |
|
170 |
அடநடு
தரூத டங்கண் தபுத்த அந்த ணாளரின் வெந்திறல்
வீரன் சொற்துணைத் தோழன் தொழில்பா ராட்டி நற்துணை மாந்தர் முன்துணை
யாக அரசியல்
ஆக்கம் கூடும் ஆயினும் பெருவிறல் தோழன் வருதலும்
உண்டுஎனத் தானயர் பெருநெறித் தலைநின்
றனன்ஆல் வீணை வித்தகன் விலாவணை தொடர்ந்துஎன்.
|
உரை |
|