தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A01136 இக்கால இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள்

  • பாடம் - 6

    A01136  இக்கால இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள்

    E

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இக்காலத்தில் இயற்றப்பெற்ற இசுலாமியத் தமிழ்க் காப்பியங்களில் மூன்றினைப் பற்றிக் கூறுகிறது. பனைக்குளம் மு.அப்துல்மஜீது இயற்றிய நாயக வெண்பா என்னும் காப்பியத்தைப் பற்றியும், அதன் பாடுபொருள், இலக்கிய நலங்கள் பற்றியும் கூறுகிறது. சாரண பாஸ்கரன் இயற்றிய யூசுப் ஜுலைகா என்னும் காப்பியத்தைப் பற்றியும், அதன் சிறப்புகள் பற்றியும் சொல்கிறது. ஜின்னாஹ் ஷரீபுத்தீன் இயற்றிய மஹ்ஜபீன் - புனித பூமியிலே என்னும் காப்பியத்தின் பொருள், நயம் பற்றிக் கூறுகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • இக்கால இசுலாமியத் தமிழ்க் காப்பியங்களில் மூன்றினைப் பற்றிய அறிமுகம் பெறுகிறோம்.

    • இக்காப்பியங்களின் இலக்கிய நயமும் சுவையும் அவற்றின் இன்பமும் அறிய முடியும்.

    • அவற்றில் கூறப்படும் இசுலாமிய வரலாற்றுச் செய்திகளை அறியலாம்.

    • இக்காலத்தில் தோன்றிய பிற காப்பியங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-10-2019 16:16:29(இந்திய நேரம்)