Primary tabs
-
1.பாத்திரப் படைப்பின் சிறப்புகள் யாவை?
புதினக் கூறுகளுள் சிறந்தது பாத்திரப் படைப்பு ஆகும். கதை மாந்தரைப் படைக்கின்ற போது, நேரில் காண்பது போன்று படைத்தல் கதைமாந்தர் படைப்பின் சிறப்பு ஆகும். உயிருள்ளவை போலத் தோன்றும் பாத்திரப் படைப்பு உடைய புதினமே சிறப்புடையதாய் மதிக்கப் பெறும்.