தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Cultural Gallery - -

  • அரவிந்தலோசனர் கோவில் - (இரட்டைத்திருப்பதி)
    திருத்தொலைவில்லிமங்கலம்


        துலைவில்லி மங்கலமென்னும் இரட்டைத் திருப்பதியில்
        முதலாவதான தேவர் பிரான் ஸ்தல வரலாறு.
        துவளில் மாமணிமாட மோங்குந்
        தொலைவில்லி மங்கலம் தொழும்
        இவளை நீர் இனி அன்னை மீர்
        உமக்காசையில்லை விடுமினோ
        தவளவொன் சங்கு சக்கர மென்றும்
        தாமரைத் தடங்கனென்றும்
        குவளையொண் மலர்கண்கள் நீர்மல்க
        நின்று நின்று குமுறுமோ
            (3271) திருவாய்மொழி 6-5-1

    என்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட இத்திருத்தலம் ஆழ்வார்
    திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் நேராக இரண்டு
    மைல் தொலைவு கிழக்கே, வந்து, கோமல் என்னும் இடத்திற்கு
    அருகில் தாமிரபரணி யாற்றைக் கடந்தால இத்தலத்தை யடையலாம்.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகளில் இத்தலத்தைச்
    சேவிப்பதான் மிகவும் சிரமம். ஆழ்வாரால் பாடப்பட்ட போன்று
    மணிமாடங்கள் யாம் இங்கில்ல. தனிக்காட்டில், புதரும், காடும்,
    முட்செடிகளுள் மண்டியுள்ள இடத்தில் இத்திவ்ய தேசம் அமைந்ள்ளது.

    “ஆளரவமற்ற தனிக்காட்டில் அம்போ” என்று சொல்வது போல்
    இத்தலம் அமைந்துள்ளது. இப்பெருமான் மீது நம்மாழ்வார்
    மயங்குந்திறம் எளிதிற் சொல்லும் தரமன்று. நின்று நின்று நெஞ்சு குமுறு
    மென்கிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:27:59(இந்திய நேரம்)