தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

 • தீபப்பிரகாசப் பெருமாள் கோவில் - திருத்தண்கா

  முளைக்கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா
      மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற
  அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய
      அந்தணனை அந்தணர்தம் சிந்தையானை
  விளக்கொளியை மரகதத்தை திருத்தண்காவில்
      வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
  வளர்த்தனால் பயன்பெற்றேன் வருக என்று
      மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே
              திருநெடுந்தாண்டகம் 14 - (2065)

  என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம்
  காஞ்சி மாநகரிலேயே அமைந்துள்ளது. அட்ட புயக்கர சன்னதியிலிருந்து
  மேற்குத் திக்கில் சுமார் அரை மைல் தொலைவில் உள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:29:04(இந்திய நேரம்)