தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வாலாஜா மசூதி - சென்னை

  • வாலாஜா மசூதி - சென்னை

    சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜான்பஜார் பகுதி வாலாஜா சாலையில் வாலாஜா மசூதி அமைந்துள்ளது. இம்மசூதி 1795ஆம் ஆண்டு நவாப் அவர்களின் நினைவால் வாலாஜா குடும்பத்தினரால் கட்டப்பட்டது. ஆற்காடு ராஜகுமாரனுடன் இன்றளவிற்கும் இது சம்மந்தப்பட்டுள்ளது. இது பெரிய மசூதி என்றும் அழைக்கப்படுகிறது.

    இம்மசூதி சாம்பல் நிற கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இயற்கை சீற்றத்தை தாங்கக் கூடிய இரும்பு போன்ற உலோகங்களை இக்கட்டிடத்திற்கு பயன்படுத்தவில்லை. இருப்பினும் இவ்வரலாற்று சிறப்பு மிக்க மசூதி பல நூற்றாண்டுகளைக் கடந்தும் பொலிவுடனும், அழகுடனும் காணப்படுகிறது.

    இம்மசூதியின் நுழைவாயிலில் இரண்டு மெல்லிய உயரமான ஸ்தூபிகள் உள்ளன. இடைக்கால கட்டிடக்கலையின் அழகும், நுட்பமும் இதன் மூலம் நன்கு புலப்படுகிறது.

    இது தென்னிந்தியாவிலுள்ள முக்கியமான இஸ்லாமிய புண்ணிய ஸ்தலங்களுள் ஒன்றாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 24-08-2017 12:09:27(இந்திய நேரம்)