7. நகர்வலம் கொண்டது

இதன்கண் : உதயணன் சயந்தி நகரத்தை வலஞ்செய்தலும், மகளிரும், மைந்தரும், உதயணனைக் காண விரும்பிக் குழாங்கொள்ளலும், அவர்கள் மலர்மழை, பொழிதலும்,புகழ்தலும், உதயனனும் வாசவதத்தையும் நீராடுதலும், பிறவும் கூறப்படும்.
 
 

 பரவுக்கடன் கழிந்து விரவுப்பகை தணிந்த
 தாமம் துயல்வரும் காமர் கைவினைக்
 கோயில் முற்றத்து வாயில் போந்து

 

5




10

 குன்றுகண் கூடிய குழாஅம் ஏய்ப்ப
 ஒன்றுகண் டன்ன ஓங்குநிலை வனப்பின்
 மாடம் ஓங்கிய மகிழ்மலி  மூதூர்
 யாறுகண்  டன்ன அகன்கனை வீதியுள்
 காற்றுஉறழ் செலவில் கோல்தொழில் இளையர்
 மங்கல மரபினர் அல்லது மற்றையர்
 கொங்குஅலர் நறுந்தார்க் குமரன் முன்னர்
 நில்லன்மின் நீர்என நீக்குவனர் கடிய

 



15

 மல்லல் ஆவணத்து இருபுடை மருங்கினும்
 நண்ணா மாந்தர் ஆயினும் கண்உறின்
 இமைத்தல் உறாஅ அமைப்பின் மேலும்
 புதுமணக் கோலத்துப் பொலிவொடு புணர்ந்த
 கதிர்முடி மன்னனைக் காண்பது விரும்பி

 



20

 மணிஅறைந்து அன்ன மாவீழ் ஓதி
 அணிபெறக் கிடந்த அம்பொன் சூட்டினர்
 சூடுறு பொன்வினைச் சுவணர் புனைந்த
 தோடும் கடிப்பும் துளங்கு காதினர்

 




25




30

 வெம்மை பொதிந்த பொம்என்இளமுலை
 இடைப்படீஇப் பிறழும் ஏக வல்லி
 அணிக்கலை புனைந்த அரசிலைப் பொன்அடர்
 புனற்சுழி புரையும் பொலிவிற்று ஆகி
 வனப்பமை அவ்வயிற்று அணித்தகக் கிடந்த
 உந்தி உள்ளுற வந்துடல் நடுங்கி
 அளைக்குஇவர் அரவின் தளர்ச்சி ஏய்ப்ப
 முளைத்தெழு முலைக்கச்சு அசைத்தலின் அசைந்த
 மருங்குல் நோவ விரும்புபு விரைந்து
 மைவரை மீமிசை மகளிர் போலச்
 செய்வளை மகளிர் செய்குன்று ஏறினர்

 



35

 உணர்ந்தோர் கொண்ட உறுநன்று ஏய்ப்ப
 வணர்ந்துஏந்து வளர்பிறை வண்ணம் கடுப்பத்
 திருநுதற்கு ஏற்ற பரிசரக் கைவினை
 நீடிய பின்றைக் கூடாது தாங்கும்
 கொற்றவன் காண்மென வெற்றவேல் தடக்கையர்
 கோல வித்தகம் குயின்ற நுட்பத்துத்
 தோடுங் கடிப்பும் துயல்வரும் காதினர்
 வாலிழை மகளிர் வழிவழி விலக்கவும்

 
40




45

 ஒன்பது விருத்தி நன்பதம் நுனித்த
 ஓவவினை யாளர் பாவனை நிறீஇ
 வட்டிகை வாக்கின் வண்ணக் கைவினைக்
 கட்டளைப் பாவை கடுப்பத் தோன்றிக்
 குறைவினைக் கோலம் கூடினர்க்கு அணங்காய்
 நிறைமனை வரைப்பில் சிறைஎனச் செய்த
 சுவர்சார் வாகத் துன்னுபு நிரைத்த
 நகர்காண் ஏணி விரைவனர் ஏறினர்

 


50




55

 ஒருபுடை அல்லது உட்குவரு செங்கோல்
 இருபுடை பெயரா ஏயர் பெருமகன்
 சிதைபொருள் வலியாச் செறிவுடைச் செய்தொழில்
 உதயண குமரன் வதுவைக்கு அணிந்த
 கோலம் கொண்ட கோல்வளை மகளிருள்
 ஞாலம் திரியா நன்நிறைத் திண்கோள்
 உத்தம மகளிர் ஒழிய மற்றைக்
 கன்னியர் எல்லாம் காமன் துரந்த

 




60

 கணைஉளம் கழியக் கவின்அழி வெய்தி
 இறைவளை நில்லார் நிறைவரை நெகிழ
 நாள்மீது ஊர்ந்து நன்னெஞ்சு நடப்பத்
 தோள்மீது ஊர்ந்து தொலைவிடம் நோக்கி
 அற்றம் பார்க்கும் செற்றச் செய்தொழில்
 பற்றா மாந்தரின் பசலை பாய்ந்த
 கருங்கண் புலம்ப வருந்தினர் அதனால்

 


65

 காட்சி விரும்பன்மின் மாட்சி இன்றென
 ஈனாத் தாயர் ஆனாது விலக்கும்
 ஆணை மறுத்தியாம் ஆணம் உடைமையின்
 இந்நகர் காண்கஎம் அன்னை மார்எனக்

 



70

 கண்ணின வேட்கை பின்நின்று துரப்ப
 வாயில் மாடத்து மருங்குஅணி பெற்ற
 வரிச்சா லேகம் விரித்தனர் அகற்றித்
 ததும்பும் கிண்கிணித் தகைமலர்ச் சேஅடிப்
 பெதும்பை மகளிர் விதும்பி நோக்கினர்

 



75

 நேரியல் சாயல் நிகர்தமக்கு இல்லாக்
 காரிகை கடுநுனைத் தூண்டி லாக
 உட்கும் நாணும் ஊராண் ஒழுக்கும்
 கட்கின் கோலமும் கட்டுஇரை யாக
 இருங்கண் ஞாலத்து இளையோர் ஈட்டிய
 அருங்கல வெறுக்கை அவைமீன் ஆக
 வாங்குபு கொள்ளும் வழக்கியல் வழாஅப்
 பூங்குழை மகளிர் புனைமணிப் பைம்பூண்

 
80




85




90

 ஒளிபெற்று இலங்கும் உதயண குமரன்
 அளிபெற்று அமர்ந்த அம்பூஞ் சேக்கையுள்
 உவக்கும் வாய்அறிந்து ஊடி மற்றவன்
 நயக்கும் வாயுள் நகைச்சுவைப் புலவியுள்
 நோக்கமை கடவுள் கூப்பினும் கதும்எனப்
 பூம்போது அன்ன தேங்குவளைத் தடக்கை
 வள்உகிர் வருட்டின் உள்குளிர்ப்பு உறீஇப்
 பஞ்சி அணிந்த அம்செஞ் சீறடிப்
 பொன்அணி கிண்கிணிப் போழ்வாய் நிறையச்
 சென்னித் தாமத்துப் பன்மலர்த் தாதுஉக
 இரந்துபின் எய்தும் இன்சுவை அமிர்தம்
 புணரக் கூடின் போகமும் இனிதுஎன

 
 

 மீட்டல் செல்லா வேட்ட விருப்பொடு
 கோடுகொள் மயிலின் குழாஅம் ஏய்ப்ப
 மாடம் தோறும் மலிந்திறை கொண்டனர்

 
95




100

 சுவல்பொதி கூழையர் சுடர்பொன் தோட்டினர்
 பெயலிடைப் பிறழும் மின்னேர் சாயலர்
 பாப்புஎயிற்று அன்ன பன்னிரைத் தாலி
 கோப்புமுறை கொண்ட கோலக் கழுத்தினர்
 மணிநில மருங்கின் முனிவிலர் ஆடும்
 பந்தும் கழங்கும் பட்டுழிக் கிடப்ப
 அந்தண் மஞ்ஞை ஆடிடம் ஏய்ப்பக்
 கோதையும் குழலும் துள்ளுபு விரியப்
 பேதை மகளிர் வீதி முன்னினர்

 

105




110




115

 வெண்முகில் நடுவண் மீன்முகத்து எழுதரும்
 திருமதி என்னத் திலக வாள்முகம்
 அருமணி மாடத்து அகவயின் சுடர
 வாள்கெழு மழைக்கண் வாசவ தத்தை
 தோள்குத் தக்க தொடுகழல் குருசிலைக்
 கண்டீர் நீங்கிக் காண்இடம் தம்மென
 விண்தீர் மகளிரின் வியப்பத் தோன்றி
 அரிமதர் நெடுங்கண் அளவிகந்து அகல
 இருமுலைப் பொன்பூண் இடவயின் திருத்தாத்
 தெரிவை மகளிர் தேமொழிக் கிளவிக்
 குழித்தலைப் புதல்வர் எழில்புறம் வரித்த
 அம்சாந்து அழிய ஆகத்து அடக்கி
 நுண்சா லேகத்து எம்பரும் நோக்கினர்

 



120




125

 அறம்புரி செங்கோல் அவந்தியர் பெருமகன்
 மறம்புரி தானை மறமாச் சேனன்
 பாவையர் உள்ளும் ஓவா வாழ்க்கை
 ஏசுவது இல்லா வாசவ தத்தையும்
 காமன் அன்ன கண்வாங்கு உருவின்
 தாமம் தாழ்ந்த ஏம வெண்குடை
 வத்தவர் இறைவனும் முற்பால் முயன்ற
 அத்தவம் அறியின் எத்திறத்து ஆயினும்
 நோற்றும் என்னும் கூற்றினர் ஆகி
 மணிநிற மஞ்ஞையும் சிங்கமும் மயங்கி
 அணிமலை இருந்த தோற்றம் போல
 மகளிரும் மைந்தரும் தொகைகொண்டு ஈண்டி
 மாடம் தோறும் மலர்மழை பொழிய

 
130




135

 ஆடுஅம் பலமும் ஆவண மறுகும்
 கீத சாலையும் கேள்விப் பந்தரும்
 ஓது சாலையும் சூதாடு கழகமும்
 ஐவேறு அமைந்த அடுசில் பள்ளியும்
 தம்கோள் ஒழிந்த தன்மையர் ஆகி
 மண்கா முறூஉம் வத்தவர் மன்னனைக்
 கண்கா முற்ற கருத்தினர் ஆகி
 விண்மேல் உறையுநர் விழையும் கோலமொடு
 மென்மெல நெருங்கி வேண்டிடம் பெறாஅர்
 அரும்பதி உறைநர் விரும்புபு புகழ

 
140




145

 அருந்தவம் கொடுக்கும் சுருங்காச் செல்வத்து
 உத்தர குருவம் ஒத்த சும்மை
 முத்துமணல் வீதி முற்றுவலம் போகித்
 தெய்வ மாடமும் தேர்நிலைக் கொட்டிலும்
 ஐயர் தானமும் அன்னவை பிறவும்
 புண்ணியப் பெயரிடம் கண்ணின் நோக்கி
 நாட்டகம் புகழ்ந்த நன்நகர் புகல
 மீட்டுஅகம் புக்கு மேவரு செல்வமொடு

 


150

 மங்கல மண்ணுநீர் மரபின் ஆடக்
 கொங்குஅலர் கோதையைப் பண்டுமுன் பயின்ற
 தோழி தானே தாழாது விரும்பிக்
 கைத்நவில் கம்மத்துக் கம்மியன் புனைந்த
 செய்கலத் துள்ளும் சிறந்தவை நோக்கி
 ஏற்கும் தானத்துப் பாற்பட அணிந்து

 

155




160

 பால்நீர் நெடுங்கடல் பனிநாள் எழுந்த
 மேல்நீர் ஆவியின் மெல்லிது ஆகிய
 கழுமடிக் கலிங்கம் வழுவில வாங்கி
 ஒண்மணிக் காசிற் பன்மணிப் பாவை
 கண்ணிய காதல் உண்நெகிழ்ந்து விரும்பி
 ஆடற்கு அவாவும் அமிழ்தம் சோர
 ஊடுபோழ்ந்து உறழ ஒலிபெற உடீஇ
 மாலையும் சாந்தும் மங்கல மரபின்
 நூலில் திரியாது நுண்எழில் புரியப்
 புதுவது புனைந்த பூங்கொடி புரையும்
 வதுவைக் கோலத்து வாசவ தத்தை

 
165




170
 புதுமைக் காரிகை புதுநாண் திளைப்பக்
 கதிர்விளங்கு ஆரத்துக் காமம் கழுமி
 அன்னத்து அன்ன அன்புகொள் காதலொடு
 பொன்நகர்க்கு இயன்ற புகரில் புகழ்நகர்
 வரைவில் வண்மை வத்தவர் மன்னன்குப்
 பொருவில் போகம் புணர்ந்தன்றால் இனிதுஎன்,