| 8. யூகி  
 போதரவு  | 
 
 | இதன்கண் : உதயணன் அமைச்சனும், உயிர்த்தோழனுமாகிய 
 யூகி என்பவனுடையர் உயரிய பண்புகளும் அவ்அமைச்சன்  உதயணன் பிரசசோதனன் சிறையினின்றும் 
 தப்பி வாசவதத்தையோடு வெளிப்பட்டதற்குப் புரிந்த வியத்தகு செயல்களும் அவன் தன் படைமறவர்க்குக் 
 கூறியவையும், உதயணனிடத்துப் பேரன்புடைய ஒரு குயவன் மாண்பும், பொறித்தேரும், யூகி 
 புறப்படுதலும்,பிறவும் கூறப்படும், | 
 
 |  | 
 
 | 
 
 
 5
 |  போகம் புணர்ந்த பொன்னகர் அவ்வயின்வெகத் தானை வேந்தன் 
 மகளோடு
 ஏகச் 
 செங்கோல் ஏயர் பெருமகன்
 பொகம் கழுமிப் புணர்ந்து 
 விளையாட
 யூகிக்கு 
 இப்பால் உற்றது கூறுவென்
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 10
 
 
 
 
 15
 |  கண்ணகன் கிடக்கைக் கலிகெழும் ஊழியுள்மண்ணகம் தழீஇ மன்னிய 
 ஊழிதொறும்
 புண்ணிய உலகிற்கும் பொலிவிற் றாம்எனத்
 தோன்றுஓங் காளர் துணியப் 
 பட்ட
 பொன்றா இயற்கைப் புகழது பெருமையும்
 ஆன்முலைப் பிறந்த வால்நிற அமிர்தம்
 மலைப்பெய் நெய்யொடு தலைப்பெய் தாங்கு
 வேறுபட்டு ஏகினும் கூறுபட்டு 
 இயலா
 அன்பினின் அளைஇய நண்பின் அமைதியும்
 அசைவில் தானை விசைய வெண்குடைப்
 பெருநில மன்னர் கருமங் 
 காழ்த்த
 அருமதி நுனித்த அமைச்சின் ஆற்றலும்
 இன்னவை பிறவும் தன்வயின் தாங்கி
 | உரை | 
 
 |  | 
 
 | 20
 
 
 
 
 25
 |  மண்றணி வீதி மதில்உஞ் 
 சேனையுள்வென்ற 
 கொற்றமொடு விசயம் எய்தி
 இறைவன் பிரிக்கும் அறிவில் 
 சூழ்ந்த
 படிவ உருவம் பட்டாங்கு எய்தி
 இடிஉறழ் முரசின் ஏயர் 
 இறைவன்
 கண்ணியது முடித்துக் காரிகை பொலிந்த
 வண்ணக் கோதை வாசவ 
 தத்தையொடு
 வழிமுதற் கொண்ட கழிமுதற் கங்குதலின்
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 30
 |  மல்குகடல் தானை மன்னரை 
 வணக்கிப்பில்குகளி யானைப் பிரச்சோ தனன்எனும்
 ஐந்தலை நாகம் அழல 
 வெகுட்டிப்
 பைந்தளிர்க் கோதையைப் பற்றுபு தழீஇச்
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 35
 |  சிறைகொளப் பட்டுச் செல்வம் 
 நீத்தகுறைமகன் என்பது கோடல் செல்லாது
 திருமனன் நெகிழ்ந்த அருள்மலி 
 அன்பொடு
 தந்தனன் கோமான்  என்றுதலை 
 வணங்கி
 ஒண்தார் 
 மார்பன் உதயணன் பணிமொழி
 மந்திர மாக மகள்மாட்டு 
 இயைந்தவை
 அன்றுஅவன் உள்ளத்து தகமுண வராகன்
 உரைத்த வண்ணமும் மிகப்பல வாகத்
 | உரை | 
 
 |  | 
 
 | 40
 |  தொல்லோர் முன்னர்த் தோன்றக் 
 காட்டிஒல்கா வென்றி 
 உதயணன் தடைஇய
 வெல்போர்ப் பெரும்படை வேந்தன் 
 விடுத்ததும்
 விடுத்த பெரும்படை விளியத் தாக்கி
 உடைத்த தோழர் ஊக்க வென்றியும்
 | உரை | 
 
 |  | 
 
 | 45
 
 
 
 
 50
 |  வென்றி வியன்நகர் வெந்துயர் 
 உற்றதும்பட்டாங்கு உணர்ந்து முட்டாங்கு இயற்றி
 உணரா 
 தான்போல் ஒருமீக் கொற்றவன்
 புணரா தார்முன் பொச்சாப்பு அஞ்சி
 வணங்குகொடி மருங்குல் வாசவ தத்தையைப்
 பயந்துஇனிது எடுத்த பத்தினித் 
 தெருட்டி
 உயர்ந்த 
 கோயிலுள் ஒடுங்கிய ஒடுக்கமும்
 | உரை | 
 
 |  | 
 
 |  |  நளிவரை அன்ன நளகிரி ஏறிஒளிமணிக் கொடும்பூண் உதயண 
 குமரனைப்
 பற்றுபு தம்மின் செற்றெனப் பகைகொண்டு
 வெற்ற வேந்தன் வெகுண்டுஎழல் 
 இன்மையும்
 | உரை | 
 
 |  | 
 
 | 55 
 
 
 
 60
 
 
 
 
 65
 |  இனையவை பிறவும் 
 புனைநகர் வரைப்பினும்கோயில் முற்றத்தும் வாயில் 
 மருங்கினும்
 வம்பலர் மொய்த்த அம்பலத்து அகத்தும்
 யானைத் தானத்தும் அருந்தவப் 
 பள்ளியும்
 தானைச் சேரியும் தான்எடுத்து உரைக்கும்
 பாடை அறியாத் தேசிகச் சேரியும்
 ஒதுநர் சாலை அகத்தும் 
 ஓவாச்
 சூதுபொரு கழகத்து அருகலும் தோமில்
 நல்லதும் தீயதும் அறிந்துஅகத்து 
 அடக்கா
 மட்டுமகிழ் 
 மகளிர் துட்டச் சேரியும்
 காரிகை பகரும் கருங்கடை 
 மழைக்கண்
 வார்கொடி மகளிர் வளநகர் வரைப்பினும்
 குதிரைப் பந்தியும் கோடிகர் 
 வரைப்பினும்
 மதிமரக் குறூஉ மறுகுஅணி 
 கடையினும்
 நீர்த்துறைக் கரையினும் கூத்துறை சேரியும்
 | உரை | 
 
 |  | 
 
 | 70 
 
 
 
 75
 |  மன்றும் சந்தியும் 
 ஒன்றுகண்டு அன்னஊர்முழுது உள்வழிக் கார்முழுது 
 உலாஅம்
 கடுவளி வரவின் ஒடியாக் கற்பின்
 நறுநுதல் 
 பணைத்தோள் நங்கையை நம்இறை
 உறுவரை மார்பின் உதயணற்கு 
 உள்ளத்து
 அருளொடும் 
 போக்கிப் பொருளொடும் புணர்த்தமை
 யாவிரும் அறைவிர் அன்றுஎனின் 
 மற்றுஇவன்
 காவல் அவ்வழிக் காணலெம் யாம்என
 மங்கையர் நாப்பண் மறவோர் 
 எடுத்த
 கம்பலைப் புறமொழி நன்பல கேட்டும்
 | உரை | 
 
 |  | 
 
 | 80 
 
 
 
 85
 
 
 
 
 90
 |  கூற்ற 
 வேழம் அடக்கிய குமரன்குக்காற்றும் எரியும் கலந்துகை 
 கொடுப்ப
 மயக்கம் எய்தி மாண்நகர் மாந்தர்
 கயக்கம் இன்றிக் கடைஇடை 
 தெரியார்
 தம்முள் தாக்கிய விம்ம வெகுட்சியுள்
 பொருமுரண் அண்ணல் பூந்தார் 
 அகலத்துத்
 திருமகள் தன்னில் தீராது இயைந்தனள்
 இன்னும் அவனே கல்நிரை 
 கானகத்துக்
 காதலில் காப்பத் தீதிலள் ஆகிப்
 புக்கனள் அவனொடு புனைபிடி ஊர்ந்துஎனத்
 தொக்க மாந்தர் 
 நற்பொருள் பொதிந்த
 வாய்ப்புள் கொண்ட வலிப்பினன் ஆகி
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 95
 
 
 
 
 100
 |  யாப்புள் உறுத்த அமைதிச் சூழ்ச்சியன்செறிந்த செய்கை அறிந்துமனத்து 
 அடக்கிச்
 செறுநன் போலச் செல்வ வேந்தனும்
 உறுநர் வேண்டும் உள்பொருட்டு உடன்றுஒரு
 மறுமொழி கொடுப்பின் அல்லது மனத்தில்
 துன்பாற் பட்டமை நன்பால் 
 நுனித்து
 நூலியல் நெறியினும் மதியினும் தெளிந்நு
 சொல்வேறு குறியொடு சுழன்றுஅகத்து 
 ஒடுங்கிய
 பல்வேறு 
 உருவில்தம் படைநரைப் பயிர்ந்து
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 105
 
 
 
 
 110
 |  பூவளம் கவினிய பொழிம்லும் 
 சேனைமாகள வனத்து மன்னுயிர் நடுக்கும்
 பணைப்பெரும் திரள்தோள் பகுவாய்க் கூர்எயிற்று
 இணைப்பெரும் காதின் இலங்குகுழை அணிந்த
 சேடுஏந்து வனப்பின் செழுமலர்த் 
 தடங்கண்
 மோடுஏந்து 
 அரிவை முற்றத்து 
 முனாது
 பனஞ்செறும்பு 
 அன்ன பன்மயிர் 
 முன்கை
 நிணம்பசை 
 கொண்ட நீளி 
 நெடும்பல்
 சாஅய் 
 நீங்கிச் சார்ந்தோர் 
 துட்குஎனும்
 பேஎய் 
 உருவம் பெறவகுத்து எழுதிய
 அழிசுவர் மண்டபத்து அகவயின் 
 ஆரிருள்
 வழிபடர் வலித்த மந்திரக் கோட்டியுள்
 | உரை | 
 
 |  | 
 
 | 
 115
 
 
 
 
 120
 
 
 
 
 125
 |  வென்வேல் வேந்தனை விடுத்தனிர் 
 சிறைஎனஇன்உரை அமிர்தம் இயைந்தவர்க்கு ஈத்துத்
 தான்செயப் படுபொருள் ஆங்குஅவர்க்கு 
 உணர்த்தி
 ஊன்சேர் கடுவேல் உதயணன்  
 நீங்கிய
 கான்சேர் பெருவழிக் கடத்தல் செல்லீர்
 நாடும் மலையும் காடும் 
 பொருந்திக்
 கானிவளங் கவர்ந்து பதிவயின் பெயரும்
 பனிஇறை வாவல் படர்ச்சி 
 ஏய்ப்பப்
 படையினும் தொழிலினும் நடைவேறு இயன்ற
 உருவினும் இயல்பினும் ஒருவிரும் 
 பலரும்
 கலிகெழு பண்டம் களைகலம் 
 போல
 வலிகெழு 
 சிறப்பின் மதில்உஞ் சேனை
 உள்ளகம் வறுமை எய்திப் 
 புல்எனப்
 பெருந்தவம் உள்வழி விரும்புபு செல்லும்
 பொருளும் போகமும் புகழும் 
 போல
 மறுவில் மணிப்பூண் மன்னவன் உள்வழிக்
 குறுகுதல் குணன்என உறுநரை ஒருப்படுத்து
 | உரை | 
 
 |  | 
 
 | 130 
 
 
 
 135
 |  ஏகச் செய்தபின் 
 ஆகுபொருள் 
 நாடிக்கடவுள் 
 பள்ளியுள் கள்ள ஒழுக்கொடு
 நெடுநகர் மாந்தர் நெஞ்சுஉணத் 
 திரிதரும்
 ஒட்டிய தோழரொடு கட்டுரை விரும்பி
 மூன்றுஇடம் பிழையா ஆன்ற நுண்நெறிப்
 பண்ணவர் முனிவர் பட்டதும் 
 படுவதும்
 எண்ணுவர் ஆயின் ஏதம் தருமென
 நினைத்தோன் பெயர்ந்து நெறியில் தீ்ர்ந்தவர்
 | உரை | 
 
 |  | 
 
 | 
 140
 |  வினைத்துகள் அறுக்கும் வேட்கை 
 அல்லதுவேண்டுவ உரையா மூங்கைகள் ஆம்எனும்
 நீதியது நேர்மை உளனாய் ஓதிய
 சமைய 
 விகற்பம் சாலக் காட்டி
 அசைவி லாளர் அறநெறி 
 வலித்தது
 மருண்டும் தெளிந்தும் வந்தவை 
 பிதற்றிப்
 பெயரும் இயற்கைப் பெற்றியின் திரியான்
 | உரை | 
 
 |  | 
 
 | 145 |  பூசுபு புலரா 
 யாக்கையொடு பெயரியதோழ ரோடு மிகப்பல கழறி
 வேற்றோன் போல மாற்றம் பெருக்கிப்
 படிவப் பள்ளியுள் பகலிடம் கழித்துக்
 | உரை | 
 
 |  | 
 
 | 150
 
 
 
 
 155
 |  குடிகெழு வளமனை குழீஇய செல்வத்துக்கன்னி நன்மதில் கடிக்கோ சம்பி
 மன்முதல் தோறும் தொன்முதல் பிழையாது
 பெருங்கலக் கைவினைப் பேறுஅது 
 பெற்றுத்
 தானகந் தாங்கிய ஊனம்இல் செலவின்
 இட்டிடர்ப் பொழுதின் இன்பம் 
 நீக்கிக்
 கட்டுஅழல் 
 புகூஉம் சுட்டுறு கோல்போல்
 நட்டை இட்டு நாட்டகம் 
 துறந்துதம்
 பெருமகன் கொள்ளும் வெட்கையில் போந்த
 குயமகன் இல்லம் குறுகினன் ஆகி
 | உரை | 
 
 |  | 
 
 | 160
 
 
 
 
 165
 |  ஆங்கினிது இருந்த அருந்தவ ஒழுக்கின்சாங்கிய மகளைப் பாங்கினில் தரீஇ
 நிகழ்ந்ததை எல்லாம் நெறியில் கூறிப்
 புகழ்ந்த வண்ணம் போகுதல் 
 பொருள்எனப்
 பசியும் அழலும் பரிவற 
 எறியும்
 மிசை மருந்து இயன்ற இசைவுகொள் இன்பத்துத்
 தருப்பணக் கிழியும் தண்ணீர்க் 
 கரகமும்
 ஒருப்படுத்து அமைத்துப் புறப்படப் போக்கி
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 170
 
 
 
 
 175
 |  அமரிய நண்பின் தமருளும் 
 தமராம்யவனப் பாடி ஆடவர் தலைமகன்
 தமனியப் பைம்பூண் தம்இறைக்கு இயன்ற
 கண்மணி அன்ன திண்நட் 
 பாளன்
 கையில் புனைந்த கழிநுண் சிறப்பொடு
 வையகத்து இயங்கும் வெய்யவன் 
 ஊரும்
 தேரின் அன்ன செலவிற்று ஆகி
 யாவரும் அறியா அரும்பொறி 
 ஆணியின்
 இருப்புப் பத்திரம் இசையக் கவ்வி
 மருப்புப் பலகை மருங்கணி 
 பெற்றுப்
 பூணி இன்றியும் பொறியின் இயங்கும்
 மாண்வினை வைய மனத்தின் ஒய்ப்பக்
 | உரை | 
 
 |  | 
 
 | 180
 
 
 
 
 185
 |  கடுப்பும் தவிர்ப்பும் கண்டனன் 
 ஆகிப்படைத்துப் 
 பெயர்த்தற்குப் பாடமை 
 வித்தகர்க்.
 கண்ணினும் 
 கையினும் திண்ணிதின் அடக்கி
 எண்ணிய கருமத்து அன்றியும் 
 யூகி
 சிறைவினை நீக்கி இறைவினை இரீஇக்
 கொடிக்கோ சம்பி புகுத்துதற்கு இருந்து
 கோடித்து அன்ன கோடுசால் வையத்து
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 190
 |  மூவகை 
 யோகமும் சீரமைத்து இரீஇஎந்திர ஊர்தியொடு ஏனவை 
 இயற்றி
 மந்திரம் ஆகத் தந்தமர் உளரெனில்
 போத்தந்து அல்லது போதாய் 
 நீஎன
 ஆத்த வாரமோடு டவன்அவண் ஒழியத்
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 195
 | தெய்வப் படைக்கலம் கையகத்து 
 அடக்கி வத்தவன் நன்னாடு அத்திசை முன்னி
 வித்தக ஆணி வேண்டுவயின் 
 முருக்கி
 விண்ணகத்து 
 இழிந்து விமானம் ஏறி
 மண்அகத்து இயங்கல் மனத்தின் 
 வேண்டிய
 பூந்தார் 
 மார்பின் புரந்தர 
 குமரனின்
 போந்தனன் மாதோ புறநகர் கடந்துஎன்
 | உரை | 
 
 |  |