Primary tabs
-
3. எத்தகைய பற்றை விட வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்?
யான், எனது எனும் பற்றை விட வேண்டும். ஏன் என்றால் அதுதான்
எல்லாப் பற்றிற்கும் அடிப்படை. எந்த ஒரு பொருளின் மீதுள்ள
பற்றை விட்டுவிடுவீர்களோ, அந்தப் பொருளினால் வரும் துன்பம்
வராது. எனவே துன்பமே வரவேண்டாம் என்று கருதுபவர்கள், எந்த
ஒரு பொருள் மீதும் பற்று கொள்ள வேண்டாம் என்று வள்ளுவர்
குறிப்பிடுகிறார்.