Primary tabs
-
2. தவம் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துகள் எவை?
துன்பங்களைக்கண்டு - அஞ்சி ஓடிவிடாமல் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். தலை மயிரை நீளமாக வளர்த்தல், தலை மயிரைப் போக்கி மொட்டையாக
இருத்தல் போன்ற புறத் தோற்றங்கள் தேவை இல்லை.எல்லாவற்றையும் விட்டுவிட்டு, காடு நோக்கிச் செல்வதை வள்ளுவர்
'தவம்' என்று கூறவில்லை. மாறாக, ஏற்கனவே, பற்று உடைய
பொருள் மீதும் பற்று இல்லாமல் இருக்கும் மனநிலையையும் தவம்
செய்தல் போன்றதாகும் என்று குறிப்பிடுகிறார்.இவ்வாறு தவத்தைப் பற்றிப் பல கருத்துகளை வள்ளுவர்
குறிப்பிட்டுள்ளார்.