தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • வடிவழகிய நம்பி திருக்கோயில் - திரு அன்பில்
    வரலாறு

    மற்ற ஸ்தலங்கட்கு உள்ளதைப் போன்று மிக விரிவாக
    ஸ்தலவரலாறோவரலாற்று     நூலோ, தமிழ்     இலக்கியத்தின்
    ஆதாரங்களோ இத்தலத்திற்கு கிட்டவில்லை. இத்தலத்தைப் பற்றிய
    விரிவான ஆராய்ச்சியில் இது காறும்யாரும் ஈடுபடவில்லை. புராண
    நூல்கள் இத்தலத்தைப் பிரம்மபுரி என்று குறிப்பிடுகின்றன.

    பிரம்ம தேவனுக்கும், சிவபெருமானுக்கும் ஐந்து தலைகள் இருந்தன.
    ஒரு சமயம் நிஷ்டையில் அமர்ந்திருந்த பார்வதி தேவி சற்றே விழித்து
    நோக்கும் போது அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த பிரம்மனை
    தனது பர்த்தாவென்று எண்ணி பாதங்களைக் கழுவி பணிவிடை செய்ய,
    ஒரு மரியாதையின் பொருட்டு உமையவள் இவ்வாறு செய்கின்றாள்
    என்று பிரம்மதேவன் அதை ஏற்றுக் கொண்டிருக்கும் போது
    தற்செயலாக வந்த சிவபெருமான், இதைக் கண்டு சினந்து இருவருக்கும்
    5 தலைகள் இருப்பதால் தானே இப்பிரச்சனை உருவாக்கிறதென்று
    நினைத்து பிரம்மதேவனின் 5 தலைகளில் ஒன்றைச் சிவன்
    கிள்ளியெறிந்துவிட்டார்.

    இதனால் பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டு, பிரம்மாவின் கபாலம்
    (மண்டை ஓடு) சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டது. அத்துடன்
    பல ஸ்தலங்களை தரிசித்து கொண்டு வந்த சிவன் கரம்பனூர் என்னும்
    உத்தமர் கோவிலுக்கு வந்த அங்கு மஹா லட்சுமி இட்ட பிச்சையால்
    கபாலம் நிறையப் பெற்ற பின் கண்டியூர் செல்லும் வழியில்
    சிவபெருமான் இத்தலத்தையும் வந்து வழிபட்டு சென்றார். இவ்வரலாறு
    கந்த புராணத்திலும் கூறப்பட்டுள்ளது.

    சிவபெருமான் இத்தலத்திற்கு வந்து சென்ற வரலாறு பல நூல்களில்
    இல்லாவிட்டாலும் இங்கு கர்ண பரம்பரையாக வழங்கி வரும்
    செய்தியாகும்.

    இத்தலத்தோடு தொடர்பு கொண்ட பலபுராணங்களிலும் பேசப்படும்
    வரலாறு ஒன்று உண்டு. ஒருரிஷியானவர் தண்ணீருக்குள் மூழ்கி தவஞ்
    செய்வதில் பெருஞ் சக்தி பெற்று விளங்கினார். இதனால் அவர் மண்டுக
    மஹரிஷியென்றே அழைக்கப்பட்டார். இவர் ஒரு சமயம் தவத்தில்
    ஈடுபட்டிருக்கும் போது இவரைக் காண வந்த துர்வாச முனிவர்
    வெகுநேரம்காத்திருந்தார். ஆனால்     மண்டுக     மஹரிஷியோ
    தவத்திலிருந்து மீளவில்லை. இதனால் தன்னை அலட்சியப்
    படுத்துவதாகக் கருதிய துர்வாசர் சினந்துஇம்முனிவரை மண்டூகமாகவே
    (தவளையாக) போகுமாறு சபித்தார்.

    இந்த மண்டுக மஹரிஷி இவ்விடத்தில் தவமிருந்து மஹாவிஷ்ணு
    பிரத்யட்சமாகி துர்வாச முனிவரின் சாபத்தை நீக்கினார். இதனால்
    இவ்விடத்திற்கு மண்டுக புரி என்ற பெயரும் உண்டு.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:01:46(இந்திய நேரம்)