தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • ஆண்டளக்குமையன் கோவில் - திருஆதனூர்

    வரலாறு

    பிர்ம்மாண்ட புராணத்தின் 3வது பிரிவில் இத்தலம்பற்றி
    பேசப்படுகிறது.

    ஆவாகிய     காமதேனு     மகாவிஷ்ணுவிடம்     சரணடைய
    வேண்டுமென்று இத்திருத்தலத்தில் தவமிருந்து அது சித்தித்தது.
    காமதேனு தவமிருந்ததால் ஆ+தன்+ஊர் ஆதனூராயிற்று. இங்குள்ள
    எம்பெருமானை ப்ருகு மஹரிஷியே பிரதிஷ்டை செய்ததாக
    ஸ்ரீபாஞ்ராத்ர ஆகமத்தில் உள்ள பௌஷகா ஸம்ஹிதையின் மூலம்
    அறியப்படுகிறது.

    ஒரு சமயம் பிறகு வைகுண்டம் சென்று எம்பெருமானையும்,
    பிராட்டியையும் வழிபட பிராட்டி பூமாலையொன்று பரிசளிக்க,
    அத்துடன் இந்திர லோகம் சென்ற ப்ருகு அதனை தேவந்திரனுக்குத்
    தர, அதனையவன் தனது ஐராவதம் என்ற யானைக்குச் சூட்ட அந்த
    யானை அதனைத் துதிக்கையில் சுற்றி கீழேபோட்டுக் காலால் மிதித்து
    அப்பாலும் இப்பாலும் அசை போடுவது போன்று அசைய
    ஆரம்பித்தது.

    இதனால் மிக்க சீற்றங்கொண்ட ப்ருகு இந்திரனைச் சபிக்க
    இந்திரன் எல்லாச் செல்வங்களும், சுகபோகங்களும் இழந்து இறுதியில்
    திருமாலிடம் பிராயச்சித்தம் கேட்டு நிற்க, அவனை நோக்கிய பிராட்டி
    நான் ப்ருகுவுக்கு பார்க்கவி என்ற பெயரில் மகளாகப் பிறந்து
    வளர்ந்து வருங்காலை திருமால் என்னைத் திருமணஞ் செய்யும்போது
    நீ அந்த ஸ்தலத்தில் வந்து சேவிப்பாயாக, உனது சாபந்தீரும் என்று
    கூற அவ்விதமே எம்பெருமான் பார்க்கவியைத் திருமணஞ்செய்யும்
    போது இந்திரன் இத்தலத்தில் வந்துவேண்ட அவனது சாபம் தீர்ந்து
    இழந்தது பெற்றான். சிவன் பிரம்மாவின் ஒரு தலையைக் கிள்ள அது
    கையில் ஒட்டிக் கொள்ள அதைச் சுட்டெரித்து சாம்பலாக்குமாறு
    சிவன் அக்னிதேவனிடம் செல்ல அக்னியால் அது முடியாமல்
    போனது மட்டுமன்றி அவனையும் பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்
    கொண்டது. அப்பாபம் நீங்க அக்னி பகவான் இத்தலத்தில்
    கடுந்தவமிருந்து எம்பெருமான் காட்சி தந்து சாபம் போக்கினார்.

    எல்லா தேவர்களுக்கும் அக்னி பதிலியாக இருந்தபடியால்
    அக்நிர்வை ஸர்வ தேவர் என்பர் இத்தன்மைத்தான அக்னியின்
    தோஷமும், இந்திரன் சாபமும் நீங்கினமையால் இத்தலம் தேவாதி
    தேவர்களின் ஸ்தலமாக கருதப்படுகிறது.

    கீழேவரும் கவிதையைப் பாருங்கள். மேலே கூறிய கதை
    அனைத்தும் அடங்கியிருக்கும்.
    ஆதிரங்கேச்வரம் வந்தே பாடலி வந ஸமஸ்திதம்
        ப்ருகு, அக்னி, காமதேனுப்யோ தத்தாபீதம் தயாந்திரம்
    விமானே ப்ரணவே ரங்க நாயக்யா ஸு ஸ மாசரிதம் ஸு ர்ய
        புஷ்கர்னி திரே சேஷஸ்யோபரி ஸாயிநம்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:02:37(இந்திய நேரம்)