தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பின்

  • மணிக்குன்றப்பெருமாள் கோவில்
    திருத்தஞ்சை மாமணிக்கோவில்
    சிறப்புக்கள்
    1. பெருமாள் இங்கு எழுந்தருளியதும் குபேரன் விஸ்வகர்மாவை
      (தேவசிற்பி) அழைத்து இங்கு ஒரு நகரை நிர்மானம் பண்ணச்
      சொல்ல கருடன் பறப்பதுபோல் அவர் இந்நகரத்தைச்
      சிருஷ்டித்தார். இந்நகரில் கருடனின் சக்தி இருப்பதாகவும்,
      கருடன் பறந்து இந்நகரத்தை காப்பதாகவும் ஐதீகம். எனவே
      கருடன் பறப்பதால் இந்நகரில் பாம்பு கடிக்காது என்பதும்
      பழமொழி.

    2. ஸ்ரீநீலமேகன்,     ஸ்ரீமணிக்குன்னன்,     ஸ்ரீவீரசிங்கப்பெருமாள்
      இம்மூவரும் முறையே ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவியின்
      மயக்கிற்பட்டு இவ்விடத்திலிருந்து பக்தர்கட்கு அருளுவதாகவும்
      மரபு.

    3. “வெட்டுங்கலியன் வேல் வலியால் மந்திரத்தைத் தட்டிப் பறித்த
      மணங்கொல்லை” என்று திருமங்கை ஆழ்வார் பகவானிடம்
      மந்திரத்தை தட்டிப்பறித்த வெண்ணாற்றங் கரையில் தான்
      இத்தலம் அமைந்துள்ளது. இது ஒரு கோடியிலும் அது ஒரு
      கோடியிலும் உள்ளது. இங்கு விண்ணாறு எனப்படுகிறது. அங்கு
      (நதி துவங்குமிடத்து) வெண்ணாறு எனப்படுகிறது.

      திருமணங் கொள்ளை தன்னில் வழிபறித்த
          குற்றமற்ற செங்கைய்யன்
      மறையுரைத்த மந்திரத்தை மாலுரைக்க
          அவன் முன்னே” எனவும் பாசுரமுண்டு

    4. இத்தலத்திற்கு பராசர சேத்ரம், வம்புலாஞ்சோலை, அழகாபுரி,
      கருடாபுரி, சமீவனம், தஞ்சையாளி நகர் எனப் பல பெயர்களுண்டு.

    5. இம்மூன்று ஸ்தலங்களும் முன்காலத்தில் தஞ்சை நகரில்
      வெவ்வேறு இடங்களில் இருந்தது. நீலமேகப் பெருமாள்
      மணிமுத்தா     நதியருகேயும்,     மணிக்குன்னப் பெருமாள்
      தஞ்சையருகேயுள்ள களிமேட்டுப் பகுதியிலும், நரசிங்கப்
      பெருமாள் ஸ்ரீனிவாசபுரம் செவப்ப நாயக்கர் குளமருகில் உள்ள
      சிங்கப்பெருமாள் குளத்தருகேயும் இருந்தது. பிற்காலத்து நாயக்க
      மன்னர்களால் தஞ்சையிலிருந்து பெயர்க்கப்பட்டு இப்போது
      உள்ளவாறு அமைக்கப்பட்டது.

    6. பரமபதத்தில் ஓடக்கூடிய விரஜாநதியே இங்கு ஓடுவதாகவும்
      விண்ணிலிருந்து வந்த தன்மையால் விண்+ஆறு - விண்ணாறு
      ஆயிற்று என்றும் சொல்வார்கள்.

    7. தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பாடலைக் கூர்ந்து நோக்கினால்
      அரக்கர்களை     அடக்கி     எம்பெருமான்     இந்நகருக்கு
      (வம்புலாஞ்சோலை, பராசர நகர்) எழுந்தருளியமை மறைமுகமாக
      உணர்த்தப்பட்டுள்ளதை அறியலாம்.

    8. பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய மூன்று
      ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசமிது.

    9. தஞ்சையைப் பார்த்த வண்ணம் விக்ரஹங்கள் அமைந்திருப்பதால்
      தஞ்சையைக் காத்தருளும் தெய்வம் என்றும் தஞ்சை மாமணி
      யென்றும் போற்றப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:21:59(இந்திய நேரம்)