தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பின்

  • அரவிந்தலோசனர் கோவில் - (இரட்டைத்திருப்பதி)
    திருத்தொலைவில்லிமங்கலம்

    சிறப்புக்கள்
    1. ஊரும் நாடுமல்லாது காடேகினான் என்னு மாப்போல காட்டில்
      அமைந்துள்ள திவ்ய தேசமிது. இதைத் தரிசிக்கச் செல்லுமிடத்து
      அர்ச்சகர் இருக்கும் நேரம் தெரிந்தோ, அல்லது அவரை
      கையுடன் அழைத்துக்கொண்டோ செல்ல வேண்டும்.

    2. திருக்கோளூர் திவ்ய தேசத்தின் அர்ச்சகரே இதற்கும் நித்திய
      ஆராதனம் செய்கிறார்.

    3. இரட்டைத் திருப்பதிகள் என்றழைக்கப்படும் துலைவில்லி
      மங்கலத்தின் முதலாவது திருப்பதியான இந்த தேவப்பிரான்
      சன்னதி தாமிரபரணி நதிக்கரையினிடையே அமைந்துள்ளது.

      அரவிந்த லோசனப் பெருமாள் எழுந்தருளியுள்ள இரண்டாவது
      திருப்பதி இதிலிருந்து சுமார் அரை பர்லாங் தூரத்தில்
      தாமிரபரணியிலிருந்து பிரியும் வாய்க்கால் கரையில் உள்ளது.

    4. யார் காலத்தில் எப்போது, இப்போதுள்ள கோவில்
      கட்டப்பட்டதென்று அறியுமாறில்லை. கோவிலின் உட்புறத்திலும்
      பிரகாரத்தின் இடைப்பட்ட கற்களிலும், நடைபாதையோரத்
      தூண்களிலும் மூலஸ்தானச்     சுற்றுப்புற     மதில்களிலும்
      கல்வெட்டுக்கள் பொதிந்துள்ளன. பெரும் பாலானவை
      சிதலமடைந்துள்ளன.

    5. மூலஸ்தானத்தைச் சுற்றி வலம் வர இயலாது. அப்பாதை கதவிட்டு
      அடைக்கப்பட்டுள்ளதால் புல்லுஞ் செடியும் மண்டிக்கிடக்கிறது.
      அர்ச்சகரின் உதவியுடன் அக்கதவைத் திறந்து சென்று கண்டால்
      மூலஸ்தானக் கோபுரத்தில் உள்ள இன்னும் மங்காத
      வர்ணத்தையும் (பெயிண்டையும்) அழகிய வேலைப்பாட்டையும்
      காணலாம்.

    6. இவ்விரண்டுகோவில்களும் சேர்ந்து ஒரே திவ்ய தேசமாக
      கருதப்பட்டாலும் இரட்டை திருப்பதி என்று பெயர் பெற்றமையால்
      இரண்டு பெருமாள்களின் பெயரையும் ஆழ்வார், தம் பாசுரங்களில்
      தனித்தனியே குறிப்பதாலும், நவதிருப்பதிகளில் இரண்டு
      திருப்பதியாகக் கொள்ளப்படுகிறது.

    7. நம்மாழ்வாரால் மட்டும் பாசுரங்களில்     மங்களாசாசனம்
      செய்யப்பட்டது. (இரண்டு பெருமாள்களையும் குறிக்கும் பாக்கள்)

    8. மணவாள மாமுனிகளும் இங்கு எழுந்தருளியுள்ளார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:28:40(இந்திய நேரம்)