தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • நாண்மதியப் பெருமாள் கோவில்
    திருத்தலைச்சங்க நாண்மதியம்
    வரலாறு

    இத்தலம் பற்றிய விபரங்கள் பிரம்மாண்ட புராணத்தில் சிறிதளவே
    கிடைக்கிறது. இரவில் நமக்கு ஒளிதரும் நாள் மதியாகிய சந்திரனுக்கு
    ஏற்பட்ட சாபம் தீர்ந்தமையால் இங்குள்ள பெருமாளுக்கு
    நாண்மதியப்பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. இதையேதான்
    வடவானரும் “சந்திரசாப ஹரப்” பெருமாள் என்றழைத்தனர். விலை
    மதிப்பற்ற சங்கு ஒன்றை இப்பெருமாள் ஏந்தியிருப்பதாலும்
    தலைச்சங்கானம் ஆயிற்றென்பர்.

    சங்ககாலத்தில் இப்பகுதி தலைச்சங்கானம் என வழங்கப்பட்டு
    காலப்போக்கில் அது மருவி தலைச்சங்கமாயிற்று என்று தமிழாய்வாளர
    பகர்வர். இதுவே இப்போது தலைச்சங்காடு ஆயிற்று.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:30:09(இந்திய நேரம்)