தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • நிலாத்திங்கள் துண்டத்தான் கோவில்
    திருநிலாத் திங்கள் துண்டம்
    வரலாறு

    ஒரு சமயம் பார்வதிக்கும், பரமசிவனுக்கும் ஒரு போட்டி ஏற்பட்டு
    பார்வதி இவ்விடத்தில் ஒரு மாமரத்தின் கீழ் தவம் செய்ய அத்தவத்தை
    சோதிக்க எண்ணி சிவன் மாமரத்தை நெற்றிக் கண்ணால் தீ
    ஜ்வாலைகளால் எரிக்க பார்வதி திருமாலைப் பிரார்த்தித்தாள். சங்கு
    சக்ரதாரியாகத் தோன்றிய திருமால் அம்ருத கிரணங்களால் மாமரத்தை
    தழைப்பிக்கச் செய்ய பார்வதியின் தாபம் தீர்ந்து தவத்தைத்
    தொடர்ந்தாள்.     பார்வதியின்     தாபம்     தீர்க்கப்பட்டதால்
    (துண்டிக்கப்பட்டதால்) இப்பெருமானுக்கு நிலாத்திங்கள் துண்டத்தான்
    என்ற பெயருண்டாயிற்று. நிலவின் குளிர்ந்த கிரணங்களால்
    பார்வதியின் யாகத்திற்குண்டான தடை துண்டிக்கப்பட்டதால்
    இப்பெருமாளுக்கு நிலாத்திங்கள் துண்டத்தான் என்ற பெயர்
    ஏற்பட்டதென்பர்.

    பார்வதியின் வேண்டுகோளின் படி பெருமாள் குளிர்ந்த கிரணங்களை
    வழங்கிக் கொண்டே இவ்விடத்தில் எழுந்தருளியிருப்பதாக ஐதீஹம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:33:23(இந்திய நேரம்)