தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • புருடோத்தப்பெருமாள் கோவில் - திருவண்புருடோத்தமம்

    உத்தமன்

    என்னும் சொல்லுக்கு பெரியவாச்சான் பிள்ளையின் வ்யாக்யானம்
    யாதெனில், புருஷர்கள் மூவகை

    முதல்வகை அதமன்

    தான் இன்பமுற அடுத்தவன் துன்புற்றாலும் கவலையில்லையென்று
    எண்ணுபவன்.

    2வது வகை மத்திமன்

    தான் இன்பமுறுதல் போல் அடுத்தவனும் இன்பமுற வேண்டும்
    என்று எண்ணுபவன்

    3வது வகை உத்தமன்

    தான்    துன்பமுற்றாலும்    பரவாயில்லை    அடுத்தவன்
    இன்பமுறவேண்டுமென நினைப்பவன்.

    எம்பெருமானின் அவதார ரகசியங்கள் தான் துன்பமுற்றாலும்
    பரவாயில்லை உலகம் இன்பமுற வேண்டுமென அவதார மெடுத்ததால்
    இவனே உத்தமன் என்றாயிற்று. அதானாலன்றோ ஆண்டாளும்
    “ஓங்கியுலகளந்த உத்தமன்” என்றார்.

    மூலவர்

    புருடோத்தமன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

    தாயார்

    புருடோத்தம நாயகி

    தீர்த்தம்

    திருப்பாற்கடல் தீர்த்தம

    விமானம்

    சஞ்சீவி விக்ரஹ விமானம்

    காட்சி கண்டவர்கள்

    உபமன்யு, வ்யாக்ரபாத முனிவர்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:42:49(இந்திய நேரம்)