தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பின்

  • ஒப்பிலியப்பன் கோவில் - திருவிண்ணகர்

    சிறப்புக்கள்
    1. திருப்பதி போக இயலாதவர்கள் வேங்கடேசனுக்குச் செய்து
      கொண்ட பிரார்த்தனைகளை இங்கேயும் செலுத்தலாம். திருப்பதி ஸ்ரீனிவாசனுக்கு தமையனார் என்கிற ஐதீகம்.

    2. 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுந்தான் உப்பில்லா நிவேதனம்.

    3. சிரவண நட்சத்திரத்தன்று (திருவோண நட்சத்திரம்) சிரவண தீபம்
      எடுத்துக் குறி சொல்லுவது இங்குவிசேஷம்)

    4. திருப்பதி    வெங்கிடாசலபதிக்கு    உண்டானது    போல்
      இப்பெருமானுக்கும் தனி சுப்ரபாதம் உண்டு.

    5. நம்மாழ்வார் இருந்த இடத்திலேயே இருக்க பல ஸ்தலங்களில்
      இருக்கும் பெருமாள்கள் அவருக்கு காட்சி கொடுக்க அவர்
      ஆனந்தித்து பாடியதாக ஐதீஹம். இத்தலத்துப் பெருமான் தானே
      மிகவும் உகந்து ஆழ்வாரை அணைந்து ஐந்து திருக்கோலங்களில்
      காட்சி கொடுத்தார். அவையாவன. பொன்னப்பன், மணியப்பன்,
      முத்தப்பன், என்னப்பன்,    திருவிண்ணகரப்பன், இவ்வைந்து
      பெயரிட்டு,

      என்னப்ப னெக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாயப்
      பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பணென்ப்பனுமாய்
      மின்னப் பொன் மதில் சூழ் திருவிண்ணகர் சேர்ந்தவப்பன்
      தன்னொப் பாரில்லப்பன் தந்தனன் தனதாழ் நிழலே
      -என்பது திருவாய்மொழி 6-3-9 நம்மாழ்வாரின் பாசுரம்

    6. இத்தலத்தையும், பெருமானையும் பற்றி நம்மாழ்வார் 11 பாசுரம்,
      திருமங்கையாழ்வார் 34 பாக்கள், பொய்கை யாழ்வார்
      1, பேயாழ்வார் 2. மங்களாசாசனம்.

    7. பிள்ளைப் பெருமாளய்யங்காரும் மங்களாசாசனம் செய்துள்ளார்,

    8. வடமொழியில் இத்தலம் வைகுண்டத்திற்குச்    சமமானதாகப்
      பேசப்படுகிறது. எனவே இதனை ஆகாச நகரி என்றே வடநூல்கள்
      கூறுகின்றன. வைகுண்டத்தில் ஓடக்கூடிய விரஜா நதியே நாட்டாரு
      (தட்சிண கங்கை) என்ற பெயரில் இங்கு ஓடுவதாக ஐதீஹம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:45:36(இந்திய நேரம்)