தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பின்

  • திருவேங்கடப் பெருமாள் கோவில் - திருவேங்கடம்

    முதல் பிரிவு

    திருப்பதி, இதனைக் கீழ்திருப்பதி எனவும் பகர்வர். இங்கு பெருமாள்
    சயன திருக்கோலம்.

    மூலவர்

    கோவிந்தராஜப்பெருமாள், கிழக்கு நோக்கிய புஜங்க சயனம்.

    தாயார்

    புண்டரீக வல்லி. இங்கு ஆண்டாள் உடையவருக்கும் தனித்தனி
    சன்னதிகள் உண்டு.
    இந்தக் கீழ்த்திருப்பதியில் உள்ள கோவிந்த ராஜப்பெருமாள் சன்னதி
    மிகவும் சக்திவாய்ந்ததாகும். முக்கியத்துவம் நிறைந்ததாகும். தில்லை
    திருச்சித்ரகூட கோவிந்தராஜப் பெருமாள் சில காலம் இங்குவந்து
    இருந்த பின்னால் தில்லைக்கு சென்றுவிட அவர் நினைவாக இத்தலம்
    தோற்றுவிக்கப்பட்டது.

    2ம் பிரிவு திருமலை

    இது மலைமேல் உள்ள கோவில்

    மூலவர்

    திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாசன் வெங்கிடாசலபதி. பாலாஜி,
    ஏழுமலையான் வேங்கடத்தான் என்று பல திருநாமங்கள்.கிழக்குநோக்கி
    நின்ற திருக்கோலம்.

    உற்சவர்

    கல்யாண வெங்கடேஸ்வரர்.

    தீர்த்தங்கள்

    மொத்தம் 14 தீர்த்தங்கள்.

    1. சுவாமி புஷ்கரிணி 2. பாபவிநாசம்
    3. ஆகாசகங்கை     4. கோனேரி
    5. வைகுண்ட தீர்த்தம் 6. சக்ரதீர்த்தம்
    7. ஜபாலி தீர்த்தம்     8. வகுள தீர்த்தம்
    9. பாண்டவ தீர்த்தம் 10. இராமகிருஷ்ண தீர்த்தம்
    11. தும்புரு தீர்த்தம் 12. சேஷ தீர்த்தம்
    13. சுகஸந்தன தீர்த்தம் 14. மொர தீர்த்தம்.


    இதில் மிகவும் முக்கியமான தீர்த்தங்கள் பற்றிய சிறப்பியல்புகள்
    தனியே தரப்பட்டுள்ளது.

    விமானம்

    ஆனந்த நிலைய விமானம்

    காட்சி கண்டவர்கள்

    எண்ணற்ற ரிஷிகள், பிரம்மா, சிவன், ஆறுமுகன், தொண்டைமன்னன்.

    3ம் பிரிவு

    திருச்சானூர். இதை அலமேலு மங்காபுரம் என்றும் கூறுவர்.

    மூலவர்

    தாயார் தான் மூலவர். அலர்மேல்மங்கை பத்மாவதி என்னும்
    திருநாமங்கள். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்

    தீர்த்தம்

    பத்ம ஸரோவரம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:50:34(இந்திய நேரம்)