அருஞ்சொற் பொருள் - அகரவரிசை |
சடிலம் |
... |
சடை முடி 96, 150 |
சதுட்டயம் |
... |
நான்கு 56 |
சமழ்த்தல் |
... |
நாணுதல் 168 |
சமன் |
... |
கூற்றுவன் 199 |
சாயல் |
... |
மென்மை 196 |
சாலிகை |
... |
கவசம் 72 |
சிரகம் |
... |
கரகம் 166 |
சிலம்பி |
... |
சிலந்தி நூல் 64 |
சிலம்பு |
... |
மலை 78 |
சீத்தல் |
... |
அழித்தல் 140 |
சீறடி |
... |
சிறிய பாதம் 86, 169 |
சுடிகை |
... |
முடி 130, 174, 177 |
சுணங்கு |
... |
பசலைபூத்த தேமல் 55, 86,
214 |
சுரிமுகம் |
... |
சங்கு 181 |
சுருதி |
... |
வேதம் 72 |
சூடகம் |
... |
வளையல் 117, 174 |
சூரல் |
... |
பிரம்பு 139 |
சூர் |
... |
அச்சுறுத்தும் தெய்வம் 160 |
செத்து |
... |
கருதி 300 |
செயிர்த்தல் |
... |
சினத்தல் 65 |
செய் |
... |
வயல் 112 |
செல் |
... |
மேகம் 197 |
சேக்கை |
... |
படுக்கை 264 |
சேயரி |
... |
செவ்வரி 218, 299 |
சேய் |
... |
முருகன் 77 |
சேர்ப்பன் |
... |
கடற்றுறைத் தலைவன் 226, 281 |
|