| 53. பிடி 
 வீழ்ந்தது
 
 | 
 
 | இதன்கண்: பத்திராபதி 
 வீழ்ந்ததும், உதயணகுமரன் அது நற்பிறப்புறும் பொருட்டு அதன் செவியில் மறைமொழி 
 அறிவுறுத்ததும் அவன் வருந்துதலும், அதற்கு இறுதிக்கடன் இயற்றலும், பின்னர் 
 மற்றையோருடன் சிறிது தொலை நடந்தேகுதலும், மறுநாட் பகலில் ஆறலைப்போர் தம்மைக் 
 காணாதபடி அனைவரும் ஒரு முள்ளிலவமரத்தினடியிலே மறைந்திருந்ததும் பிறவும் 
 கூறப்படும். | 
 
 |  | 
 
 |  | அசைந்த விரும்பிடி யற்ற 
 நோக்கி வயந்தக குமரற்கு வத்தவ 
 னுரைக்கும்
 நொப்புணை 
 வலியா நுரைநீர்ப் 
 புக்கோற்
 கப்புணை யவல்வயி னவன்கை தீர்ந்தாஅங்
 5    கவந்தியர் கோமா னருண்முந் 
 துறீஇப்
 பை..........க கொலைப்பாற் படவகுத் 
 தீந்த
 அரும்பிடி நம்மை யாற்றறுத் தன்றாற்
 | உரை | 
 
 |  | 
 
 |  |             
 கரும்படு தீஞ்சொற் காஞ்சனை 
 யெழீஇஅவர பக்கம் விரைவனை யிழிகெனக்
 10     கவர்கணை நோன்சிலை கைவயி 
 னடக்கி
 வருத்தமுற் றலமரும் வாளரித் 
 தடங்கட்
 டிருத்தகு தாமரைத் திருப்புக்குத் 
 திளைக்கும்
 அருவரை யகலத் தணிபெறத் 
 தழீஇக்
 கருவரை மிசைநின் றிருநிலத் திழிதரும்
 15     உமையொடு புணர்ந்த விமையா 
 நாட்டத்துக்
 கண்ணணங் கவிரொளிக் கடவுள் 
 போல
 மத்தக 
 மருங்கிற் றத்துவன னிழிதர
 | உரை | 
 
 |  | 
 
 |  |      
        மருங்குற மண்மிசை வீழின் 
 மற்றென்இரும்புறத் திருந்தோர்க் கேதமென் 
 றெண்ணி
 20    மல்குநீ 
 ருடுக்கை மண்ணக 
 மடந்தையைப்
 புல்லிக் கோடல் புரிந்தது 
 போலப்
 பாவடி நிலனுறப் பரப்பி 
 யுதயணன்
 சேவடி தலையுறச் செய்தது 
 பொறுவென
 வணக்கஞ் செய்வது போல மற்றுத்தன்
 25    அணிக்கேழ்ப் பொறிச்செவி யாட 
 லாற்றாது
 செங்கேழ்த் துருத்தியி னங்காந் 
 துயிர்த்தொறும்
 பைசொரி பவழம் போலப் 
 படிதாழ்
 கைசொரி யுதிரங் கான்றுவந் திழிதர
 | உரை | 
 
 |  | 
 
 |  |             வீழ்ந்த 
 வாறுமது நோக்கிய திசையும்30   
  தேர்ந்த நூல்வழித் திண்ணி 
 தாகலின்
 அந்திலை யெய்து மிடுக்கணும் 
 பின்னிலைத்
 தன்னிலத் தழூஉதலுந் தான்வலிப் 
 பெய்தி
 மணியும் புரோசையு மணிபூண் 
 டவிசும்
 கடித்தக முட்பட வெடுத்தனன் களைஇ
 35    இன்னுயி ரினிவிடு மிதனுக் 
 கின்றென
 மன்னுயிர் காவலன் மனத்தி 
 னெண்ணித்
 துன்னிய 
 தோழற்குத் தோன்றக் கூறி
 | உரை | 
 
 |  | 
 
 |  |             
 வத்தவ ரிறைவன் மத்தகம் 
 பொருந்திக்குளிர்ப்பத் தைவந் தளித்த லானான்
 40    இறுதிக் காலத் துறுதி 
 யாகிய
 ஓம்படைக் கீளவி பாங்குறப் 
 பயிற்றிச்
 செல்கதி 
 மந்திரஞ் செவியிற் 
 செப்பி
 எம்மை யிடுக்க ணிம்மை 
 தீர்த்தோய்
 வரும்பிறப் பெம்மோ டொருங்கா 
 கியரெனச்
 45    செந்தா 
 மரைக்கண் டெண்பனி 
 யுறைப்ப
 நிறுத்த லாற்றா நெஞ்சினிகழ் கவற்சியன்
 | உரை | 
 
 |  | 
 
 |  |       
       மறுத்து முதயணன் வயந்தகற் 
 குரைக்கும்பெறற்கரும் பேர்யாழ் கைவயிற் 
 பிரிந்ததும்
 இயற்றமை யிரும்பிடி யின்னுயி ரிறுதிழும்
 50    எள்ளு மாந்தர்க் கின்ப 
 மாக்கி
 உள்ளு தோறு முள்ளஞ் 
 சுடுதலிற்
 கவற்சியற் கையற னீக்கி 
 முயற்சியிற்
 குண்டுதுறை யிடுமணற் கோடுற 
 வழுந்திய
 பண்டிதுறை யேற்றும் பகட்டிணை போல
 55    இருவே மிவ்விடர் நீக்குதற் கியைந்தனம்
 | உரை | 
 
 |  | 
 
 |  | திருவேர் சாயலைத் தேமொழித் 
 துவர்வாய்க் காஞ்சன் மாலையொடு கண்படை 
 கொளீஇக்
 காவ 
 லோம்பெனக் காவல 
 னருளிக்
 கவர்கணை நோன்சிலை கைவபி னீட்டி
 60    அரணக் கூர்வா ளசைத்த 
 தானையன்
 கரணச் சேடகங் கைவயி 
 னடக்கி
 விச்சையின் மெலிந்துதன் விழுத்தகு 
 நகரிழத்
 தச்சமொ டொளித்த வணித்தகு 
 பேரொளிக்
 கோலக் குமரன் போலத் தோன்றி்
 | உரை | 
 
 |  | 
 
 |  | தியங்குத லிலக்கண மிறைமகற் 
 கின்மையிற் செய்வது துணியுஞ் சிந்தைச் 
 சூழ்ச்சியன்
 வெவ்வழி நிலமிசை வில்லேப் 
 பாட்டிடை
 எவ்வெம் மருங்கினுந் தெரிவோ னவ்வழி
 | உரை | 
 
 |  | 
 
 |  |      
        எவ்வெம் மருங்கினுந் தெரிவோ 
 னவ்வழி70    நல்காக் 
 கரவ னடுவன் மேல்வர
 ஒல்காத் தவமிலா தொளித்தது 
 போலக்
 குண்டுசுனை யடுக்கத்துக் கொழுங்கனி 
 வீழ்ச்சிப்
 பண்ணமை படைச்சுவர்க் கண்ணகன் 
 றமைந்து
 நாற்பெரு 
 வாயி லேற்ப வியற்றிக்
 75   
  கற்படை யமைத்துக் கடுமழை 
 மறப்பினும்
 உப்படு நீரோ டூற்றுடைத் 
 தாகி
 வாசற வறியா வளப்பருங் 
 குட்டத்துப்
 பாசடைத் தாமரை யாம்பலொடு 
 பயின்று
 புட்புகன் றுறையுமோர் பூம்பொக் கரணியை
 80    முற்படக் கண்டே முகனம ருவகையன்
 | உரை | 
 
 |  | 
 
 |  | விளக்குறு வெள்ளி முளைத்துமுன் 
 றோன்ற வடக மீக்கொள் வாளொடு 
 களைந்ததன்
 படுகரை மருங்கிற் பாங்குற 
 வைத்து
 வருதிரை 
 புகூஉம் வருணன் போல
 85   
  இருகரை மருங்கினும் புள்ளெழுந் 
 தியம்பத்
 தெளித்தலைத் தண்ணீர் குளித்தன 
 னாடி
 வாய்மைக் கொத்த வாய்ப்பூச் 
 சியற்றித்
 தூய்மைக் கொத்த தொழில னாகி
 | உரை | 
 
 |  | 
 
 |  | அரும்படைத் தானை யரசூர்ந் தியற்றிய 90    இரும்பிடி யினிதுழி யேறுக 
 சென்றெனப்
 போர்க்கடம் பூண்ட பொருவலித் 
 தடக்கையின்
 நீர்க்கட னாற்றிய நியமக் 
 கிரிகையன்
 பூம்போ தணிந்த வாங்குகரை 
 மருங்கின்
 வழிபடு தெய்வம் வணங்குவன னேத்திக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 95    கழிபிடி வலங்கொண் 
 டொழிவிடத் 
 தொழிந்து துணைபிரிந் தனைய னிணைபிரி 
 மகன்றிலிற்
 போத லாற்றான் காதலிற் 
 கழுமிப்
 பிடிக்க ணின்ற் பேரன் 
 பானான்
 வடிக்கண் மாதர் வருத்த 
 மோம்பிப்
 100     
 பகலிடத் தற்றம் படாமை 
 யிருக்கும்
 அகலிட மறித லருமை யுடைத்தெனத்
 | உரை | 
 
 |  | 
 
 |  | தாழிற் றாழ்ந்து சூழிற் 
 சூழியல் அந்த ணாளனொடு மந்திரம் 
 விரும்ப
 வஞ்சமி னண்பின் வயந்தக னுரைக்கும்
 105     நஞ்சம் பொதிந்து நமக்கும் 
 பிறர்க்கும்
 அஞ்சல் செல்லா வரணகம் 
 வலித்துக்
 காட்டகத் துறையுங் கடுவினை 
 வாழ்க்கை
 வேட்டுவர் பயின்ற விடமற் றிந்நிலம்
 | உரை | 
 
 |  | 
 
 |  |             நாட்டுச் 
 சந்திது நாமிவ ணீந்தி110    
  ஒன்றிரு காவதஞ் சென்ற 
 பின்றைக்
 குன்றகச் சாரற் குறும்புபல 
 வடக்கிநம்
 வன்றா ளிளையர் வாழ்பதிக் 
 கியங்கும்
 வழியது வகையுங் தெரிவழிக் 
 குறையும்
 திகைத்திலே னாதன் மதிக்குமென் மனனே
 115     மடத்தகை மாதர் வருந்தினு 
 நாமிவட்
 கடப்பது கருமம் காவல வருளென
 | உரை | 
 
 |  | 
 
 |  | வாளொடு கேடகம் வயந்தகற் 
 கீத்துக் கோலொடுங் கொடுஞ்சிஙை கோமகன் 
 கொண்டு
 பள்ளி கொண்ட வள்ளியஞ் சாயற்
 120     கற்பொடு புணர்வியைக் காஞ்சன 
 மாலாய்
 நற்பொரு ளிதுவென நன்கன 
 மெடுப்பி
 நடக்கல் வேண்டு நாமிவ 
 ணீங்கி
 இடுக்க ணில்லா விடம்புகு 
 மளவென
 உற்றவ 
 னுரைத்த வுறுதி மாற்றம்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 125     பொற்றார் 
 வேந்தன் பூங்கொடிப் 
 பாவையைச் செவ்விதிற் றேர்ந்து கைவிரல் 
 கூப்பித்
 தோழி 
 காஞ்சனை தோன்றக் கூறிக்
 | உரை | 
 
 |  | 
 
 |  |      
        காழில் பஞ்சி யூழறிந் 
 தாற்றிவிரற்கொண் டமைத்து வித்தக ரூட்டிய
 130     அரத்த வடர்மையு மரந்தோய்த் 
 தென்ன
 நோய்க்கொண்டு கறுக்கு மாய்மலர்ச் 
 சேவடி
 ஏழடி யிடுத லாற்றா 
 தாயினும்
 ஊர்திரைப் பௌவ முலாவு 
 மூக்கமொடு
 பூமலர்க் கோதையும் பொறையென வசைவோள்
 135     மாமலை தாங்கு மதுகையள் 
 போல
 இன்பக் காதலற் கேத 
 மஞ்சிப்
 பொன்புனை பாவையும் போகுதல் வலிப்பக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கொடிப்படை கோமக னாகக் 
 கூழை வடுத்தீர் 
 வயந்தகன் வாள்வலம் பிடித்துக்
 140     கடித்தகப் பூம்படை கைவயி 
 னடக்கிக்
 காவல் கொண்ட கருத்தின 
 னாகப்
 புரிசைச் சுற்றங் காஞ்சனை 
 யாக
 உரிமைக் கொத்த திருமா 
 மேனியைப்
 புன்புலர் விடியற் புறம்பனி யொழுகிய
 145     அம்புத லதர்வை யணிநடைக் 
 கியலிய
 வனப்பொடு புணரிய வடகப் 
 போர்வையை
 மணிப்பூண் வனமூலை யிடைக்கரை புதைஇப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பைந்தொடிப் பணைத்தோள் பைய 
 வீசி அஞ்செந் தாமரை யகவித ழன்ன
 150     சில்லரித் தடங்கண் மெல்லென 
 மிளிர
 மானின் 
 மடப்பெடை மம்ம 
 ரெய்த
 வேனிற் காலத்துத் தான 
 நோக்கி
 மணிக்கட் பீலி மாமயிற் 
 பேடை
 அணிக்கவின் மென்னடை யனுக்க வசைந்தசைந்
 155     தியலா நின்ற காலை வியலிடத்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 155     தியலா நின்ற 
 காலை வியலிடத் தெல்லை யாரிரு ணல்வினை 
 முன்னர்ப்
 பாவம் போலப் பறைந்துகை 
 யகலக்
 கோவத் தன்ன குழவிக் 
 கோலமொடு
 குணமலைப் பிறந்து குடவரை நிமிர்ந்து
 160     கனல்கதிர் கான்று கடுமை 
 கூராத்
 தனிக்காற் றேரோன் றனிமை யெய்த
 | உரை | 
 
 |  | 
 
 |  |             அனித்த 
 மிதிப்பினும் பனித்த 
 லானாஒளிச்செஞ் சீறடி யுருக்கரக் 
 கேய்ப்ப
 உளித்தலை வெம்பர லூன்றுபு நலியப்
 165   
   பவளக் கொப்புளம் பக்கம் 
 பயிலத்
 தவளைக் கிண்கிணி தாங்குத 
 லாற்றா
 திவள திடுக்க ணிசைத்தும் 
 யாமெனத்
 ததும்புகுரற் பூச லிரங்குவன வொலிப்ப
 | உரை | 
 
 |  | 
 
 |  | மணங்கமழ் நறுந்தார் மன்ன குமரன் 170     வயந்தகற் குரைக்கும் வாலிழை 
 வருந்தினள்
 இயங்குதல் செல்லா திருக்குமிடங் காணெனக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கார்ப்பூ நீலங் கவினிய 
 கலித்துறை நீர்ப்பூம் 
 பொய்கை நெறியிற் 
 கண்டதன்
 படுகரை மருங்கிற் படர்புறம் வளைஇக்
 175     கன்முரம் படுத்துக் கவடுகா 
 றாழ்ந்து
 புள்ளினம் புகலினும் புகற்கரி 
 தாகி
 ஒள்ளெரி யெழுந்த வூழ்படு 
 கொழுமலர்
 முள்ளரை யிலவத்துண் முழையரண் முன்னி
 | உரை | 
 
 |  | 
 
 |  | முள்ளங் கோடு மூழிலைப் 
 பிறங்கலும் 180     வள்ளிலை 
 வாடலும் வயந்தகன் 
 களைந்து
 பாய லமைத்த பாசடைப் 
 பள்ளியுள்
 ஆய்வளைத் தோளியை யமர்துயில் 
 கொளீஇத்
 தடம்பெரும் பொய்கை தண்ணிழல் 
 வலியா
 ஒடுங்கினர் மாதோ கடும்பகல் கரந்தென
 
 | உரை | 
 
 |  |