| 4. ஆறாந்திங்கள் 
 உடன்மயிர் களைந்தது  | 
 
 | இதன்கண் : உஞ்சைவேந்தனாகிய 
 பிரச்சோதனன் மாண்பும். அவன் மனைவியர் மாண்பும். வாசவதத்தையின் தாயாகிய 
 கோப்பெருந்தேவியின் மாண்பும், மயிர்வினைக் கல்யாணப் பந்தர்க் கால் அமைத்தலும், 
 இடந்திருத்தலும், உதயணன் வருகையும் அவன் மருங்கு வாசவதத்தையை இருத்தலும், அந்தணர் 
 செயலும், நாவிதன் செயலும், பிறவும் கூறப்படும். | 
 
 |  | 
 
 |  |  கருதியது முடித்த கடிநாள் 
 கோலமொடுபகுதி ஞாயிற்று உருவொளி 
 திகழக்
 கலிகெழு மூதூர் கைதொழுது 
 ஏத்த
 வலிகெழு நோன்தாள் வந்தவர் இறைவன்
 | உரை | 
 
 |  | 
 
 | 5 |  முதுநீர்ப் 
 பொழில்உகந்து எதிரின் 
 ஒதப்பதினாறு ஆயிரம் பதின்அறு 
 வகைய
 சுருக்கம் இன்றிச் குழ்ந்துடன் 
 திரியாப்
 பெருக்கத் தானைப் பிரச்சோ தனன்குப்
 | உரை | 
 
 |  | 
 
 | 10
 
 
 
 
 15
 
 
 
 
 20
 |  பெருநில மன்னர் திருநகர்ப் பிறந்துதம்நாட்டுப்பெயர் பொறித்த 
 குட்டுப்பொலி 
 சுடர்நுதல்
 கொடிப்பூண் திளைக்கும் கோல ஆகத்து
 வடிப்போழ்ந்து அன்ன வாள்அரித் 
 தடம்கண்
 அருந்தவர்க்கு ஆயினும் திருந்துமுகம் 
 இறைஞ்சாது
 செங்கதிர் விரும்பும் பைங்கொடி நெருஞ்சிப்
 பொன்புனை மலரின் புகற்சி 
 போல
 வெறுத்த வேட்கைத் தாம்உளம் 
 சிறப்பக்
 காதலற்கு அவாஅம் காம 
 நோக்கத்து
 ஈரெண் ஆயிரர் பேர்எணப் 
 பட்ட
 ஓவியர் உட்கும் உருவக் கோலத்துத்
 தேவியர்க்கு எல்லாம் தேவி ஆகிக்
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 25
 |  கோவீற்று இருப்புழிப் பூவீற்று 
 இருந்ததிருமகள் போல ஒருமையின் 
 ஒட்டி
 உடன்முடி கவித்த கடன்அறி 
 கற்பின்
 இயற்பெருந் தேவி வயிற்றுஅகத்து இயன்ற
 வட்டப் பெரும்பூண் வாசவ 
 தத்தையொடு
 கட்டில் ஏற்றம் கடந்த பின்னர்
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 30
 
 
 
 
 35
 |  உயர்ந்த 
 நண்பின் உருமண் ணுவாவும்வயந்தக குமரனும் வத்தவர்க்கு 
 இயற்றிய
 .,.,....ாளங் கழிந்து மூதூர் வாயில்
 தம்பெயர் நிறீஇய மன்பெரு மாந்தரும்
 நிறைஒம்பு ஒழுக்கத்து மறைஓம் 
 பாளரும்
 பன்நகர் தோறும் மன்னவன் வேண்ட
 முனைவர் வகுத்த புனைபூண் 
 அகலத்துக்
 காழகத் தொன்னூல் கருதுநெறி நுனித்ததன்
 ஆழமைக்கு அடங்கா அமைவரு காட்சி
 அரும்பொருள் உணரும் பெருங்கணிச் 
 சங்கமும்
 திணைகளும் கணக்கரும் இனையவர் மொய்த்து
 | உரை | 
 
 |  | 
 
 | 
 40
 |  நாற்கயிறு அமைத்துக் கோற்கயிறு கொளீஇநன்குநிலை பெற்ற நாற்பத் 
 தையணங்கு
 உண்பதம் 
 எட்டெட்டு எண்வர வாங்கி
 எண்பத்து எழுகோல் தண்கையில் 
 தழீஇக்
 கணக்க மாந்தர் கயிறிட்டு அளந்த
 மணக்கால் பந்தருள் வடமென் 
 மருங்குல்
 | உரை | 
 
 |  | 
 
 | 45
 
 
 
 
 50
 |  குலத்தொடு புணர்ந்த நலத்தகு நண்பின்அழுக்காறு அகன்ற ஒழுக்காறு ஓம்பிக்
 கைவினை ஐந்தும் கற்றுஅகத்து 
 அடக்கி
 மெய்யில் 
 தூய்மையொடு மேதகு 
 வனப்பின்
 செயிர்வின 
 கடிந்துதம் சிறப்புவழித் தாங்கி
 மயிர்வினை நுனித்த மாசுஇல் 
 கம்மத்துச்
 சிற்புஇயல் 
 புலவர் நனகென நாட்டிப்
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 55
 |  பதர்ச்சொல் பருப்பொருள் பன்னுபு நீக்கிப்பொருள்சொல் நிரப்பும் புலவர் 
 போலக்
 கல்லும் ஓடும் புல்லும் 
 கரியும்
 உமியும் 
 மயிரும் என்பும் உட்பட
 அமைவில் தன்மைய அரித்துடன் களைந்து
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 60
 |  விண்மேம் படூஉம் லிழுத்தகவு உடைத்தாய்மண்மேம் படுத்து மணிநிழல் 
 உறீஇ
 வடக்கும் 
 குணக்கும் வகையுளிப் பணித்துக்
 குடக்கும் தெற்கும் கோணம் 
 உயரி
 நிரப்பம் 
 கொளீஇ நின்ற நிலமிசை
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 65
 
 
 
 
 70
 |  விசும்புஉறை தேவர் வேள்விச் 
 சேதான்பசுஞ்சோற்று அமலைப் பாசம் 
 கொளீஇ
 மறுஇன்று அமைந்த நறுவெண் 
 சாந்தில்
 பத்தியும் கொடியும் பல்வழி 
 எழுதி
 முத்தமும் மணியும் சித்திரத்து இயற்றிய
 ஆடகப் பொன்னும் அகல்நில 
 முதுபொழில்
 தன்பெயர் கொளீஇய மன்பெரும் 
 சீர்த்தி
 மரக்களி 
 அன்ன திருத்தகு பொன்னும்
 இரத்தினக் குப்பையும் இலங்குஒளிப் பவழமும்
 இன்னவை பிறவும் பன்முறை பண்ணித்
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 75
 
 
 
 
 80
 |  தொல்லோர் வகுத்தநூல் துறைமுறை 
 போகியநல்ஆ சிரியர் நடுவுநிலை 
 அமைத்துக்
 கீழ்த்திசை முதலா வாழ்த்துபு வணங்கித்
 தெய்வம் பேணிக் கைவினைக் கம்மத்துச்
 சத்தி முகமே சக்கர 
 வட்டம்
 பத்தி வரிப்பே பாவை நுடக்கம்
 குஞ்சர முகமே நந்தி 
 மலரவை
 எஞ்சாத் திருவடி எனப்பெயர் 
 இவற்றுள்;
 போரடு மன்னர்க்குப் புரையோர் 
 புகழ்ந்த
 பாசடைத் தாமரைத் தாதகத்து 
 உறையும்
 மாசில் மடமகள் மருங்கின் 
 வடிவாய்க்
 குலாஅய்க் கிடந்த கோலக் கோணத்துக்
 | உரை | 
 
 |  | 
 
 | 
 85
 |  கலாஅய்க் கிடந்து கவ்விய 
 கொழுந்தின்வள்ளியும் மலரும் கொள்வழிக் கொளிஇ
 வலமுறை வகுத்த நலமுறை நன்நகர்
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 90
 
 
 
 
 95
 |  நாற்பெரு வாயில் முதல்தொறும் 
 ஏற்பத்தமனியப் பேரில் தலைநிலம் 
 தழீஇய
 கொழுங்களி உழுந்தும் செங்கதிர்ச் 
 செந்நெலும்
 உப்பும் அரிசியும் கப்புரப் பளிதமொடு
 ஐவகை வாசமும் கைபுனைந்து 
 இயற்றிய
 முக்கூட்டு அமிர்தும் அக்கூட்டு 
 அமைத்துத்
 தேனும் பாலும் தயிரும் கட்டியும்
 ஆன்நெயும் வெண்ணெயும் அனையவை 
 பிறவும்
 பதினறு மணியும் பைம்பொன் மாலையும்
 நுதியில் பெய்து விதியுற இரீஇப்
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 100
 |  பொதியில் சந்தனம் போழ்ந்துகொண்டு இயற்றிக்கதிரொளி பயின்ற கம்மக் கைவினை
 நாற்கால் அமைத்த பால்பெரும் 
 படுமனைப்
 பொங்குமயிர்த் தவிசொடு பூமலர் புனைஇ
 நண்ணிய சிறப்பொடு நால்பெரும் 
 திசையும்
 பண்ணிய உணவின் திண்ணிலைக் குப்பையுள்
 முடிமுதல் குத்தி அடுநிலைக்கு 
 அமைந்த
 பைம்பொன் விளக்கில் செஞ்சுடர் மாட்டிக்
 | உரை | 
 
 |  | 
 
 | 105
 
 
 
 
 110
 
 
 
 
 115
 |  குறைவின்று அமைந்த கோல நுட்பத்துமறுவின்று அமர்ந்த மங்கலப் பேரணி
 மன்ன குமரன் தன்னோர் 
 சூழ
 உருத்த மன்னர் ஊர்ச்சி வேழத்து
 மருப்புக்கை அமைத்து வாய்முதல் 
 தோறும்
 உருக்குறு தமனியத்து ஒழுகுகொடி ஓட்டிப்
 பவழக் கொட்டைப் பல்வினை நுனித்த
 திகழ்அணிச் செருப்பில் சேவடி 
 இழிந்து
 கடவுள் தானம் வலமுறை வந்தபின்
 அடர்பொன் திருநகர் அறியக் 
 காட்டி
 நிலத்துமிசை இழிந்த நிகரில் நெடுமுடி
 நலத்தகை இந்திரன் எழில்பொலிவு ஒப்ப
 இலக்கண இருக்கை திருத்திய பின்றை
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 120
 
 
 
 
 125
 
 
 
 
 130
 |  நாணுக்கவின் கொண்ட நனிநா கரிகத்துயாணர்ப் பூந்துகில் அணிந்த 
 அல்குல்
 இலைப்பூண் 
 கவைஇ முலைப்புறம் புதைஇப்
 பொற்கொடி இழையொடு நற்குடன் 
 தாழ
 ஏகஉத் 
 தரியம் இடைச்சுவல் வருத்த
 வட்டுடைப் பொலிந்த வண்ணக் 
 கலாபமொடு
 பட்டுச்சுமந்து அசைந்த பரவை அல்குல்
 இயைந்துஅணி பெற்ற ஏன்ற 
 அவ்வயிற்று
 அசைந்தணி கொண்ட அம்மென் 
 சாயல்
 தாமரை எள்ளிய காமரு திருமுகத்து
 இன்பக் காமன் எய்கணை 
 போலச்
 செங்கடை போழ்ந்த சிதர்அரி 
 மழைக்கண்
 வண்ணக் 
 கோதை வாசவ தத்தையைச்
 செண்ணக் காஞ்சனை செவ்விதின் தழீஇ
 இகல்வரை மார்பன்கு இயைய 
 இரீஇயபின்
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 135
 |  அகன்மனைக் காவல் ஆற்றுளி 
 நிறீஇஎண்திசை 
 மருங்கினும் இவர்திரை 
 எய்ப்பக்
 கண்டப் 
 பூந்திரை காழ்முதல் கொளீஇ
 எழுதுவினைக் கம்மத்து முழுமுதல் 
 கோத்த
 முத்த மாலை முடிமுதல் 
 வருட
 ஒத்த ஓரை நோக்கி ஓங்கிய
 கைத்தொழில் நுனித்த வித்தக 
 வாளர்
 பொன்புனை நன்கலத்து இன்பதம் ஆர்ந்தபின்
 | உரை | 
 
 |  | 
 
 | 140 
 
 
 
 145
 |  மணிஅறைந்து அன்ன 
 மாண்இருங் 
 குஞ்சிஅணிவலம் சுரிந்த அமைதிக்கு 
 ஏற்ப
 வளர்பிறை அன்ன மல்லிகைக் 
 கத்திகை
 கிளர்பொன் போதொடு களைஅறப் 
 பிணித்த
 வாக்கமை சிகைமுதல் பாற்பட அடைச்சி
 மகரம் கவ்விய மணிக்குழைக் 
 காதினர்
 தகரம் கலந்த தண்நறுஞ் 
 சாந்தினர்
 பால்நிற வெண்துகில் ஆனத் 
 தானையர்
 இறைமகன்கு 
 இயன்ற குறைவில் 
 செல்வமொடு
 அந்தணர் ஈண்டி அடித்துகள் ஆற்றி
 | உரை | 
 
 |  | 
 
 | 150 
 
 
 
 155
 
 
 
 
 160
 |  மந்திர 
 விதியின் வாய்ப்பூச்சு 
 இயற்றித்தம்தொழில் 
 முடித்துத் தலைவனைக் 
 குறுகி
 வெண்ணிற 
 மலரும் தண்ணறும் 
 சாலியும்
 புண்ணியப் புல்லும் பொன்னொடு 
 முறைமையின்
 மண்ணார் மணிப்பூண் மன்னனொடு மாதரைச்
 சென்னியும்  உச்சியும் சேடுபடத் 
 தெளித்துக்
 கூப்பிய கையர் காப்பொடு 
 பொலிந்த
 அமரரும் முனிவரும் அமர்வனர் 
 ஆகி
 ஆயுளும் திருவும் போகமும் பொலிவும்
 மேயினர் தருகென மிகப்பல 
 வாழ்த்தி
 மறையிற் 
 கிரிகையின் முறைஅறிந்து ஓதி
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 165
 
 
 
 
 170
 |  மின்வாள் அழித்த மேதகு 
 கைவினைப்பொன்வாள் பற்றிப் பன்மாண் 
 பொலிகென
 வலப்பால் 
 சென்னி வகைபெறத் 
 தீட்டி
 இலக்கணம் பிழையா எஃகுஅமை 
 இருப்பின்
 நீர்அளந்து ஊட்டிய நிறைஅமை 
 வாளினைப்
 பஞ்சிப் பட்டொடு துரூஉக்கிழி 
 நீக்கிப்
 பைங்கதிர் அவிர்மதிப் பாகத்து 
 அன்ன
 அங்கேழ்க் 
 கல்மிசை அறிந்துவாய் 
 தீட்டி
 வெங்கேழ்த் துகில்மிசை விதியுளி் புரட்டிச்
 செங்கேழ்க் கையில் சிறந்துபா 
 ராட்டி
 ஆசறு 
 நறுநீர் பூசனை கொளீஇ
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 175
 
 
 
 
 180
 |  வாள்தொழில் கம்மம் வல்லிதின் 
 பிழையாதுசேட்டெழில் பொலிந்த திருமுகக்கு 
 ஏற்ப
 மூரிக் கொள்ளான் முனிதல் செல்லான்
 ஆவிக் கொள்ளான் அயர்ந்தும் 
 பிறர்நோக்கான்
 சீர்கெழு நெடுந்தகை செவ்வியில் 
 திரியான்
 கண்ணினும் 
 மனத்தினும் கையினும் 
 அமைத்த
 மண்ணுவினை மயிர்த்தொழில் நன்நல 
 நாவிதன்
 எல்லை வகுப்ப, , . , . . . . , , , , , , , , , . ,
 எதிர்நோக்கு ஆற்றா இலங்கிழை 
 முகத்தையும்
 மதிமாசு கழீஇய வண்ணம் 
 போலக்
 கதிர்மேல் இலங்கக் கைவினை முடித்தபின்
 | உரை | 
 
 |  | 
 
 | 
 185
 
 
 
 
 190
 
 
 
 
 195
 |  அடிவினைக் கம்மியர் வெடிபட 
 அடுக்கியஉயர்நலக் கோலத்து ஒள்ளொளி திகழ
 வகைஅமை கொல்லியின் வசைஅறத் 
 துடைத்துச்
 சேவடிக்கு ஏற்பச் செழுமதிப் 
 பாகென
 வாருகிர் குறைத்து வனப்புவீற்று 
 இரீஇய
 ஒள்நிறக் கல்லின் நன்நிறம் 
 பெறீஇ
 விரலில் கொண்ட வெண்ணிற நுண்தாது
 விரிகதிர் மதியின் விளங்கொளி 
 அழிப்ப
 நிறம்பெற உரிஞ்சி நேர்துகில் 
 துடைத்தும்
 தண்டா 
 மரையின் அகஇதழ் 
 போலப்
 பண்டே சிவந்த படிய ஆயினும்
 கண்டோர் மருளக் கைவளம் காட்டி
 அரத்தப் பஞ்சின் அணிநிறம் 
 கொளீஇப்
 பரப்பும் விதிர்ப்பும் பருப்பும் இன்றி
 அணித்தலைச் சார்ங்கம் அணிபெற 
 எழுதி
 இருவகைக் 
 கம்மம் உருவெளி 
 திகழ
 வல்லோர் 
 முடித்த பின்றைப் பல்லோர்
 | உரை | 
 
 |  | 
 
 | 200 
 
 
 
 205
 | அருங்கல வெறுக்கை ஆர 
 வீசி விருப்புறு மனத்தவர் விண்ணவர் 
 காப்ப
 மன்னுக 
 வேந்தே மண்மிசை நீடஎன
 அன்னவை கலந்த ஆர்வ 
 நாப்பண்
 எண்ணுவரம்பு அறியா இன்பச் செல்வமொடு
 மண்ணுவினை முடிந்தன்றால் மயிர்வினை மகிழ்ந்துஎன்.
 | உரை | 
 
 |  |