பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
653

அருஞ்சொற்பொருள் அகராதி

        பாட்டு எண்
 

வா

     
  வாங்குதல் - வளைதல் 46
வாங்குமவர் - கரைக்கண் உய்த்தவர் 158
வாட்டந்திருத்துவது - வாட்டுவது 12
  வாம் - வாமம் என்பதன் இடைக்குறை, அழகு 263
  வாய்தரின் - இடந்தருமாயின்,வாய்ப்பின் 80
  வார் - முலைக்கச்சு 296
  வாவி - பொய்கை 212
  வாள் - ஒளி 48
  வான்   மேகம் 274
வான்கழி - பெரியகழிகள், சிவலோகம் 85
வான்கொங்கை - பெருங்கொங்கைகள் 10
  வானர மகளிர் - தேவப் பெண்களின் மேலாகிய உருப்பசி, திலோத்தமை முதலியோர் 371
 

வி

     
விட்டுரைத்து - வெளிப்படவுரைத்து 391
  விட - மிகவும் 297
  விண்டு - பிளந்து 24
  வித்தகம் - சதுரப்பாடு 106
விதிர்விதிர்த்தல் - மிக நடுங்குதல் 102
  விம்மும் - பொருமாநிற்கும் 193
  வியல் - பெருமை 301
  வியன் - அகலம் 136
  வியன்கை - பெரியகை 245
       வில்லைப் பொலிநுதல் விற்போலும் நுதல் 368
  விலங்கல் - மலை 24
  விழுத்துணை - சிறந்த துணை 106
விள்ளல் - நீங்குதல், வாய்  திறந்து கூறல் 185
விளரும் - பசக்கும் 193
விளையாடல் - விளையாட வேண்டா 133
  விளைவு - நல்வினையின் விளைவாகிய தெய்வம் 6
 

வெ

     
  வெண்சுடர் - மதி 336
  வெதிர் - மூங்கில் தண்டு 243
  வெள்கி - நாணி 26
  வெளிறுற்ற - வெளிப்படு தலையுற்ற 254
  வெறுப்ப - துன்புற 243
 

வே

     
வேய்தல் - மூடுதல், பெய்தல் 119
  வேயாது - சூடாது 374
  வேரி - கள் 265
          தேன் 301
  லேல் - சூலவேல் 231
  வேழப்படையோன் - கருப்புச்சிலையாகிய படையை உடையோன்-மன்மதன் 70
 

வை

     
  வை - கூர்மை 43
வைகல் - தங்குதல் 305