முகப்பு |
குருகு (நாரை) |
4. நெய்தல் |
கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர் |
||
நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ, |
||
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி, |
||
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு, |
||
5 |
'அலரே அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை |
|
அரிய ஆகும் நமக்கு' எனக் கூறின், |
||
கொண்டும் செல்வர்கொல்-தோழி!-உமணர் |
||
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி, |
||
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம் |
||
10 |
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக் |
|
கருங் கால் வெண் குருகு வெரூஉம் |
||
இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே? | உரை | |
தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி அலர் அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது.-அம்மூவனார்
|
27. நெய்தல் |
நீயும் யானும், நெருநல், பூவின் |
||
நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி, |
||
ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக் |
||
கழி சூழ் கானல் ஆடியது அன்றி, |
||
5 |
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை; உண்டு எனின், |
|
பரந்து பிறர் அறிந்தன்றும்இலரே-நன்றும் |
||
எவன் குறித்தனள் கொல், அன்னை?-கயந்தோறு |
||
இற ஆர் இனக் குருகு ஒலிப்ப, சுறவம் |
||
கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடி, |
||
10 |
கண் போல் பூத்தமை கண்டு, 'நுண் பல |
|
சிறு பாசடைய நெய்தல் |
||
குறுமோ, சென்று' எனக் கூறாதோளே. | உரை | |
சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது.-குடவாயிற் கீரத்தனார்
|
31. நெய்தல் |
மா இரும் பரப்பகம் துணிய நோக்கி, |
||
சேயிறா எறிந்த சிறு வெண் காக்கை |
||
பாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங் கால் |
||
தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ, சுரக்கும் |
||
5 |
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே; |
|
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு, பல நினைந்து, |
||
யானும் இனையேன்-ஆயின், ஆனாது |
||
வேறு பல் நாட்டில் கால் தர வந்த |
||
பல உறு பண்ணியம் இழிதரு நிலவுமணல் |
||
10 |
நெடுஞ் சினைப் புன்னைக் கடுஞ் சூல் வெண் குருகு |
|
உலவுத் திரை ஓதம் வெரூஉம் |
||
உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே. | உரை | |
தலைவன்சிறைப்புறத்தானாக, தலைவி வன்புறை எதிர்அழிந்தது.-நக்கீரனார்
|
35. நெய்தல் |
பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப் |
||
புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி |
||
கிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப் |
||
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து, |
||
5 |
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் |
|
இரை தேர் நாரை எய்தி விடுக்கும் |
||
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம் |
||
பண்டும் இற்றே; கண்டிசின்தெய்ய; |
||
உழையின் போகாது அளிப்பினும், சிறிய |
||
10 |
ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ?-மகிழ்ந்தோர் |
|
கள்களி செருக்கத்து அன்ன |
||
காமம்கொல்?-இவள் கண் பசந்ததுவே! | உரை | |
மண மனைப்பிற்றைஞான்று புக்க தோழி, 'நன்கு ஆற்றுவித்தாய்' என்ற தலைமகற்குச் சொல்லியது.-அம்மூவனார்
|
54. நெய்தல் |
வளை நீர் மேய்ந்து, கிளை முதல்செலீஇ, |
||
வாப் பறை விரும்பினைஆயினும், தூச் சிறை |
||
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து- |
||
கருங் கால் வெண் குருகு!-எனவ கேண்மதி: |
||
5 |
பெரும் புலம்பின்றே, சிறு புன் மாலை; |
|
அது நீ அறியின், அன்புமார் உடையை; |
||
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என் குறை |
||
இற்றாங்கு உணர உரைமதி-தழையோர் |
||
கொய்குழை அரும்பிய குமரி ஞாழல் |
||
10 |
தெண் திரை மணிப் புறம் தைவரும் |
|
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே! | உரை | |
காமம் மிக்க கழிபடர்கிளவி.-சேந்தங் கண்ணனார்
|
67. நெய்தல் |
சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம் |
||
மால் வரை மறைய, துறை புலம்பின்றே; |
||
இறவு அருந்தி எழுந்த கருங் கால் வெண் குருகு |
||
வெண் கோட்டு அருஞ் சிறைத் தாஅய், கரைய |
||
5 |
கருங் கோட்டுப் புன்னை இறைகொண்டனவே; |
|
கணைக் கால் மா மலர் கரப்ப, மல்கு கழித் |
||
துணைச் சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை, |
||
எல் இமிழ் பனிக் கடல், மல்கு சுடர்க் கொளீஇ, |
||
எமரும் வேட்டம் புக்கனர்; அதனால், |
||
10 |
தங்கின் எவனோதெய்ய-பொங்கு பிசிர் |
|
முழவு இசைப் புணரி எழுதரும் |
||
உடை கடற் படப்பை எம் உறைவின் ஊர்க்கே? | உரை | |
பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது.-பேரி சாத்தனார்
|
70. மருதம் |
சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே! |
||
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன |
||
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே! |
||
எம் ஊர் வந்து, எம் உண்துறைத் துழைஇ, |
||
5 |
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி, |
|
அனைய அன்பினையோ, பெரு மறவியையோ- |
||
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும் |
||
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என் |
||
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே! | உரை | |
காமம் மிக்க கழிபடர்கிளவி.-வெள்ளி வீதியார்
|
74. நெய்தல் |
வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலை |
||
இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார், |
||
நிறையப் பெய்த அம்பி, காழோர் |
||
சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும் |
||
5 |
சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை, |
|
'ஏதிலாளனும்' என்ப; போது அவிழ் |
||
புது மணற் கானல் புன்னை நுண் தாது, |
||
கொண்டல் அசை வளி தூக்குதொறும், குருகின் |
||
வெண் புறம் மொசிய வார்க்கும், தெண் கடல் |
||
10 |
கண்டல் வேலிய ஊர், 'அவன் |
|
பெண்டு' என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே! | உரை | |
தலைவி பாணற்கு வாயில்மறுத்தது.-உலோச்சனார்
|
91. நெய்தல் |
நீ உணர்ந்தனையே-தோழி!-வீ உகப் |
||
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப் |
||
பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ, பெடையோடு |
||
உடங்கு இரை தேரும் தடந் தாள் நாரை |
||
5 |
ஐய சிறு கண் செங் கடைச் சிறு மீன், |
|
மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பை, |
||
தாய்ப் பயிர் பிள்ளை வாய்ப் படச் சொரியும் |
||
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்ப் |
||
பெரு நல் ஈகை நம் சிறு குடிப் பொலிய, |
||
10 |
புள் உயிர்க் கொட்பின் வள் உயிர் மணித் தார்க் |
|
கடு மாப் பூண்ட நெடுந் தேர் |
||
நெடு நீர்ச் சேர்ப்பன் பகல் இவண் வரவே? | உரை | |
தோழி, தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது.-பிசிராந்தையார்
|
123. நெய்தல் |
உரையாய்-வாழி, தோழி!-இருங் கழி |
||
இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி |
||
வாங்கு மடற் குடம்பை, தூங்கு இருள் துவன்றும் |
||
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை, |
||
5 |
கானல் ஆயமொடு காலைக் குற்ற |
|
கள் கமழ் அலர தண் நறுங் காவி |
||
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ, |
||
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி, |
||
புலவுத் திரை உதைத்த கொடுந் தாட் கண்டல் |
||
10 |
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் |
|
சிறு விளையாடலும் அழுங்கி, |
||
நினைக்குறு பெருந் துயரம் ஆகிய நோயே. | உரை | |
தலைவன்சிறைப்புறத்தானாக, தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.- காஞ்சிப் புலவனார்
|
127. நெய்தல் |
இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரை |
||
இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து, |
||
உவன் வரின், எவனோ?-பாண!-பேதை |
||
கொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்த |
||
5 |
கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும், |
|
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய |
||
ஈனாப் பாவை தலையிட்டு ஓரும், |
||
'மெல்லம் புலம்பன் அன்றியும், |
||
செல்வாம்' என்னும், 'கானலானே'. | உரை | |
பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.-சீத்தலைச் சாத்தனார்
|
131. நெய்தல் |
ஆடிய தொழிலும், அல்கிய பொழிலும், |
||
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு |
||
ஊடலும் உடையமோ-உயர் மணற் சேர்ப்ப! |
||
திரை முதிர் அரைய தடந் தாள் தாழைச் |
||
5 |
சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசிய, |
|
இறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும், |
||
நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன், |
||
கள் கமழ், பொறையாறு அன்ன என் |
||
நல் தோள் நெகிழ மறத்தல், நுமக்கே? | உரை | |
மணமனையில் பிற்றை ஞான்று புக்க தோழியைத் தலைவன், 'வேறுபடாமை ஆற்றுவித்தாய்; பெரியை காண்' என்றாற்குத் தோழி சொல்லியது.-உலோச்சனார்
|
138. நெய்தல் |
உவர் விளை உப்பின் குன்று போல்குப்பை |
||
மலை உய்த்துப் பகரும், நிலையா வாழ்க்கை, |
||
கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த |
||
பண் அழி பழம் பார் வெண் குருகு ஈனும் |
||
5 |
தண்ணம் துறைவன், முன் நாள், நம்மொடு |
|
பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல் |
||
பூவுடன் நெறிதரு தொடலை தைஇ, |
||
கண் அறிவுடைமை அல்லது, நுண் வினை |
||
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர் |
||
10 |
முழங்கு திரை இன் சீர் தூங்கும் |
|
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே. | உரை | |
'அலர் ஆயிற்று' என ஆற்றாளாய தலைமகட்குத் தலைவன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.-அம்மூவனார்
|
167. நெய்தல் |
கருங் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ் சினை |
||
விருந்தின் வெண் குருகு ஆர்ப்பின், ஆஅய் |
||
வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற |
||
பண் அமை நெடுந் தேர்ப் பாணியின், ஒலிக்கும் |
||
5 |
தண்ணம் துறைவன் தூதொடும் வந்த |
|
பயன் தெரி பனுவற் பை தீர் பாண! |
||
நின் வாய்ப் பணி மொழி களையா-பல் மாண் |
||
புது வீ ஞாழலொடு புன்னை தாஅம் |
||
மணம் கமழ் கானல், மாண் நலம் இழந்த |
||
10 |
இறை ஏர் எல் வளைக் குறுமகள் |
|
பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே. | உரை | |
தோழி பாணற்கு வாயில் மறுத்தது; தூதொடு வந்த பாணற்குச் சொல்லியதூஉம் ஆம்.
|
178. நெய்தல் |
ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன |
||
தோடு அமை தூவித் தடந் தாள் நாரை |
||
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை |
||
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது, |
||
5 |
கைதை அம் படு சினைப் புலம்பொடு வதியும் |
|
தண்ணம் துறைவன் தேரே கண்ணின் |
||
காணவும் இயைந்தன்று மன்னே; நாணி |
||
நள்ளென் யாமத்தும் கண் படை பெறேஎன்; |
||
புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப, |
||
10 |
விளிந்தன்றுமாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே. | உரை |
சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.
|
180. மருதம் |
பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை |
||
கழனி நாரை உரைத்தலின், செந்நெல் |
||
விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன் |
||
பலர்ப் பெறல் நசைஇ, நம் இல் வாரலனே; |
||
5 |
மாயோள், நலத்தை நம்பி விடல் ஒல்லாளே |
|
அன்னியும் பெரியன்; அவனினும் விழுமிய |
||
இரு பெரு வேந்தர், பொரு களத்து ஒழித்த |
||
புன்னை விழுமம் போல, |
||
என்னொடு கழியும்-இவ் இருவரது இகலே. | உரை | |
தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது.
|
183. நெய்தல் |
தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து, |
||
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி, |
||
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி, |
||
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து, |
||
5 |
உமணர் போகலும் இன்னாதாகும்- |
|
மடவை மன்ற-கொண்க!-வயின்தோறு |
||
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும் |
||
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே; |
||
இன மீன் ஆர்ந்த வெண் குருகு மிதித்த |
||
10 |
வறு நீர் நெய்தல் போல, |
|
வாழாள் ஆதல் சூழாதோயே. | உரை | |
வரைவிடை வைத்துப் பிரியும் தலைவற்குத் தோழி சொல்லியது.
|
189. பாலை |
தம் அலது இல்லா நம் நயந்து அருளி |
||
இன்னும் வாரார்; ஆயினும், சென்னியர், |
||
தெறல் அருங் கடவுள் முன்னர், சீறியாழ் |
||
நரம்பு இசைத்தன்ன இன் குரற் குருகின் |
||
5 |
கங்கை வங்கம் போகுவர்கொல்லோ- |
|
எவ் வினை செய்வர்கொல் தாமே?-வெவ் வினைக் |
||
கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய |
||
கானப் புறவின் சேவல் வாய் நூல் |
||
சிலம்பி அம் சினை வெரூஉம், |
||
10 |
அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே? | உரை |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
|
199. நெய்தல் |
ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை |
||
வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு, |
||
நள்ளென் யாமத்து, உயவுதோறு உருகி, |
||
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து, |
||
5 |
உளெனே-வாழி, தோழி! வளை நீர்க் |
|
கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர் |
||
வாங்கு விசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி, |
||
வளி பொரக் கற்றை தாஅய், நளி சுடர், |
||
நீல் நிற விசும்பின் மீனொடு புரைய, |
||
10 |
பைபய இமைக்கும் துறைவன் |
|
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே! | உரை | |
வன்புறை எதிரழிந்தது.-பேரி சாத்தனார்
|
211. நெய்தல் |
யார்க்கு நொந்து உரைக்கோ யானே-ஊர் கடல் |
||
ஓதம் சென்ற உப்புடைச் செறுவில், |
||
கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்த |
||
கருங் கால் குருகின் கோள் உய்ந்து போகிய |
||
5 |
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை, |
|
எறி திரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்டுத் |
||
துறு கடற் தலைய தோடு பொதி தாழை |
||
வண்டு படு வான் போது வெரூஉம் |
||
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே? | உரை | |
வரைவு நீட ஒருதலை ஆற்றாளாம் என்ற தோழி சிறைப்புறமாகத் தன்னுள்ளே சொல்லியது.-கோட்டியூர் நல்லந்தையார்
|
216. மருதம் |
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும், |
||
இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்; |
||
கண்ணுறு விழுமம் கை போல் உதவி, |
||
நம் உறு துயரம் களையார்ஆயினும், |
||
5 |
இன்னாதுஅன்றே, அவர் இல் ஊரே; |
|
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும் |
||
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண், |
||
ஏதிலாளன் கவலை கவற்ற, |
||
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக் |
||
10 |
கேட்டோர் அனையராயினும், |
|
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே. | உரை | |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தலைமகன் தலைநின்று ஒழுகப் படாநின்ற பரத்தை, பாணற்குஆயினும் விறலிக்குஆயினும் சொல்லுவாளாய், நெருங்கிச் சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்
|
263. நெய்தல் |
பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின் |
||
இறை வரை நில்லா வளையும், மறையாது |
||
ஊர் அலர் தூற்றும் கௌவையும், நாண் விட்டு |
||
உரை அவற்கு உரையாம்ஆயினும், இரை வேட்டு, |
||
5 |
கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது, |
|
கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு, |
||
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும் |
||
மெல்லம் புலம்பற் கண்டு, நிலைசெல்லாக் |
||
கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு, |
||
10 |
உரைத்த-தோழி!-உண்கண் நீரே. | உரை |
சிறைப்புறமாகத் தோழி தலைமகனை வரைவு கடாயது.-இளவெயினனார்
|
291. நெய்தல் |
நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல் |
||
நெய்த் தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகு |
||
குப்பை வெண் மணல் ஏறி, அரைசர் |
||
ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும், |
||
5 |
தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு, நீயும், |
|
கண்டாங்கு உரையாய்; கொண்மோ-பாண!- |
||
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து, |
||
எல்லித் தரீஇய இன நிரைப் |
||
பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே? | உரை | |
வாயிலாகப் புக்க பாணற்குத் தோழி தலைமகளது குறிப்பு அறிந்து, நெருங்கிச் சொல்லி யது.- கபிலர்
|
312. பாலை |
நோகோ யானே, நோம் என் நெஞ்சே- |
||
'பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட, |
||
சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு, |
||
பார்வை வேட்டுவன், காழ் களைந்தருள, |
||
5 |
மாரி நின்ற, மையல் அற்சிரம்- |
|
யாம் தன் உழையம் ஆகவும், தானே, |
||
எதிர்த்த தித்தி முற்றா முலையள், |
||
கோடைத் திங்களும் பனிப்போள்- |
||
வாடைப் பெரும் பனிக்கு என்னள்கொல்?' எனவே. | உரை | |
பொருள் வலித்த தலைமகன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது.-கழார்க் கீரன் எயிற்றியார்
|
330. மருதம் |
தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து, |
||
மட நடை நாரைப் பல் இனம் இரிய, |
||
நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து, |
||
5 |
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் |
|
யாணர் ஊர! நின் மாண் இழை மகளிரை |
||
எம் மனைத் தந்து நீ தழீஇயினும், அவர்தம் |
||
புன் மனத்து உண்மையோ அரிதே: அவரும், |
||
பைந் தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து, |
||
10 |
நன்றி சான்ற கற்பொடு |
|
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே. | உரை | |
தோழி, தலைமகனை வாயில் மறுத்தது.-ஆலங்குடி வங்கனார்
|
338. நெய்தல் |
கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே; |
||
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர் |
||
நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா; |
||
இறப்ப எவ்வம் நலியும், நின் நிலை; |
||
5 |
'நிறுத்தல் வேண்டும்' என்றி; நிலைப்ப |
|
யாங்ஙனம் விடுமோ மற்றே!-மால் கொள |
||
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு, |
||
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய |
||
ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறி, |
||
10 |
கொடு வாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய, |
|
உயிர் செலக் கடைஇப் புணர் துணைப் |
||
பயிர்தல் ஆனா, பைதல்அம் குருகே? | உரை | |
ஒருவழித் தணந்த காலை ஆற்றாத தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.-மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்
|
369. நெய்தல் |
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர, |
||
நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக, |
||
எல்லை பைபயக் கழிப்பி, முல்லை |
||
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை |
||
5 |
இன்றும் வருவது ஆயின், நன்றும் |
|
அறியேன் வாழி-தோழி!-அறியேன், |
||
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி, |
||
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக் |
||
கங்கைஅம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும் |
||
10 |
சிறை அடு கடும் புனல் அன்ன, என் |
|
நிறை அடு காமம் நீந்துமாறே. | உரை | |
பட்ட பின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்து, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது.-மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
|
372. நெய்தல் |
அழிதக்கன்றே-தோழி!-கழி சேர்பு |
||
கானற் பெண்ணைத் தேனுடை அழி பழம், |
||
வள் இதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு, |
||
அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென, |
||
5 |
கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு |
|
அன்ன வெண் மணற்று அகவயின், வேட்ட |
||
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து, இனிது நோக்கி, |
||
அன்னை தந்த அலங்கல் வான் கோடு |
||
உலைந்தாங்கு நோதல் அஞ்சி, 'அடைந்ததற்கு |
||
10 |
இனையல் என்னும்' என்ப-மனை இருந்து, |
|
இருங் கழி துழவும் பனித் தலைப் பரதவர் |
||
திண் திமில் விளக்கம் எண்ணும் |
||
கண்டல் வேலிக் கழி நல் ஊரே. | உரை | |
மேல் இற்செறிப்பான் அறிந்து ஆற்றாளாகி நின்ற தலைமகள் ஆற்ற வேண்டி, உலகியல் மேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறியார் எனச் சொல்லியது.-உலோச்சனார்
|