தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

 • அருமாகடல் பெருமாள் கோவில் - திருச்சிறுபுலியூர்
  வரலாறு

  இத்தலத்தைப்பற்றிய வரலாறு கருட புராணத்தில் பேசப்படுகிறது.
  ஒருகாலத்தில் கருடனுக்கும், ஆதிசேசனுக்கும் தம்மில் யார் பெரியவர்
  என்று வாக்கு வாதம் ஏற்பட்டு இறுதியில் யுத்தத்தில் வந்து நிற்க
  இவர்களைச் சாமாதானப்படுத்துவதற்காகப் பெருமாள் “பாலசயனத்தில்”
  எழுந்தருளிய ஸ்தலம் இதுவென்பது வரலாறு.

  வியக்கிரபாதர் என்னும் முனிவர் சிதம்பரத்தில் தவமியற்றி தனக்கு
  மோட்சம் வேண்டுமென்று நடராஜனிடம் கேட்க, மோட்சம் கொடுக்க
  வல்லவர் மகாவிஷ்ணுவே என்று நடராஜன் கூற, அவ்வாறாயின்
  அதற்குரிய ஸ்தலத்தை எனக்கு காண்பியும் என்று முனிவர் வேண்ட
  நடராஜர் சிவலிங்க ரூபமாக வழிகாட்ட அவரை விரைந்து
  பின்பற்றுவதற்கு தாம் பெற்ற வலிமையால் விரைந்து செல்லும் புலியின்
  கால்களால் இத்தலத்திற்கு வந்து சேர்ந்து முக்திபெற்றதால் இதற்குச்
  சிறுபுலியூர் என பெயர் வந்ததென்பர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:19:51(இந்திய நேரம்)