தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பின்

  • சத்தியகிரிநாதப்பெருமாள் கோவில் திருமெய்யம்
    சிறப்புக்கள்
    1. கருடன் தன் தாயின் அடிமைத் தளையைத் தீர்க்க அமிர்தம்
      கொண்டுவர வேண்டிய நிலையேற்பட்டது. அதற்கு வேண்டிய
      மகாபலத்தையும்     சக்தியையும்     இவ்விடத்திலிருந்துதான்
      மஹாவிஷ்ணுவைக் குறித்துத் தவமிருந்து பெற்றான் என்பர்.

    2. சுவேதத் தீவில் பகவானுடைய கோட்டை வாசற் காவல் பூண்ட
      தச்சகன் என்பவன் கோபங்கொண்ட துர்வாச முனிவரால்
      சபிக்கப்பட்டு உடனே பாம்பினுருவத்தையடைந்து பூமியில் பல
      இடங்களிலும் திரிந்து இறுதியில் இத்தலத்தை அடைந்த
      மாத்திரத்தில் பகவானின் அனுக்கிரகத்தால் முன்பு போலவே
      விஷ்ணு சிங்கார ரூபத்தையடைந்தான்.

    3. இங்கு சந்திரனால் ஆராதிக்கப்பட்ட பிம்பம் ஸத்திய
      புஷ்கரணிக்கு தெற்கில் ததிவாமன மூர்த்தியாய் உள்ளது. இது
      முழுமையும் சந்திர காந்தக் கல்லினால் அமைக்கப்பட்டது.

    4. அதற்கு மேற்கில் திருமெய்ய மலைக்குத் தென்புறம்
      அடிவாரத்தில் மிக்க அழகுள்ளதாகவும், சயன மூர்த்தியாகவும்
      திகழ்பவர்     ஆதிசேடனால்     அமைக்கப்பட்டு
      ஆராதிக்கப்பட்டவராகும்.

    5. மெய்யமலையின் உச்சியில் கருடனால் பிரதிட்டை செய்யப்பட்ட
      பிம்பம் உயர்ந்ததான ஒரு கருடப் பச்சைக் கல்லினால்
      அமைக்கப்பட்டதாகும்.

    6. ஆதிசேடன் தனக்கு வேதங்களில் கூறப்பட்டுள்ள சர்வஞானமும்
      தெரியவேண்டுமெனப் பிரார்த்தித்த தலம், எனவே இச்சேத்ரம்
      அஞ்ஞான இருள் நீக்கி மோட்சம் தரத்தக்கதாகும்.

    7. தற்போதுள்ள ஆலய அமைப்பு பல்லவ மன்னர்களின்
      குடவரைக்கல் கோவில்கள்     என்பதின் அடிப்படையில்
      வருவதாகும். பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மனால்
      (இப்போதுள்ளவாறு) கட்டப்பட்டதாகும்.

    8. இங்கு ஆதிசேடனில் சயனித்துள்ள பெருமாள் ஸ்ரீரங்கநாதனைவிட
      மிகவும் நீளமானவர். இதற்கு அருகில் உள்ள சுவற்றில் பிரம்மன்
      முதலிய சகல தேவர்களும் எழுந்தருளியுள்ளனர்.

    9. ஆதிசேடன் இத்தலத்தைப் பாதுகாப்பதாக ஐதீகம். இவன்
      பாதுகாப்பிலிருந்த பெருமானை ஒரு முறை அசுரர்கள்
      திருட்டுத்தனமாய் தூக்க வந்ததாயும் ஆதிசேடன் விஷக்
      காற்றைவிட்டு அந்த அசுரர்களை அழித்ததாகவும் வரலாறு.
      இந்நிகழ்ச்சியை நினைவு கூறும் முகத்தான் இங்குள்ள ஆதிசேடன்
      வாயிலிருந்து விஷ ஜு வாலைகள் செல்வது போன்று செதுக்கப்
      பட்டிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும்.

    10. திருமங்கையாழ்வாரால் மட்டும் பாசுரங்களில் மங்களாசாசனம்
      செய்யப்பட்டதாகும். மெய்யமென்னும்     தடவரை மேல்
      கிடந்தானையென்றும், திருமெய்யத்து இன்னமுத வெள்ளத்தை
      என்றும், திருமெய்ய மலையாளா என்றும், மெய்யம் அமர்ந்த
      பெருமாளை என்றும், மெய்யமணாளர் என்றும் இப்பெருமாளைச்
      சொல்லிச் சொல்லி மகிழ்வார் திருமங்கையாழ்வார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:22:51(இந்திய நேரம்)