2. அற இலக்கியம்

சிறுபஞ்சமூலம்

பாடல்
Poem


அழகுகள் ஐந்து

பாடல் 1

கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை

எண்வனப்(பு) இத்துணையாம் என்றுரைத்தல் - பண்வனப்புக்

கேட்டார்நன்(று) என்றல் கிளர்வேந்தன் தன்னாடு

வேட்டான் நன்(று) என்றல் வனப்பு.

பல்லார் நகைக்காத வாழ்வு

பாடல் 2

பிழைத்த பொறுத்தல் பெருமை சிறுமை

இழைத்த தீங்(கு) எண்ணி யிருத்தல் - பிழைத்த

பகைகெட வாழ்வதும் பல்பொருளா பல்லார்

நகைகெட வாழ்வதும் நன்று.

மேதையர் நிலை

பாடல் 3

பூவாது காய்க்கும் மரமுள நன்றறிவார்

மூவாது மூத்தவர் நூல்வல்லார் - தாவா

விதையாமை நாறுவ வித்துள மேதைக்(கு)

உரையாமைச் செல்லும் உணர்வு.

எல்லாம் அறிந்தவர் இலர்

பாடல் 4

ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும்

ஒருவன் அறியா தவனும் - ஒருவன்

குணனடங்கக் குற்றமி லானும் ஒருவன்

கணனடங்கக் கற்றானும் இல்.