திருக்குறள்
சொல்-பொருள்
Words-Meaning
புகழ் |
|
| ▪ யாக்கை | - உடம்பு, மெய் |
| ▪ சாக்காடு | - சாவு, இறப்பு |
| ▪ இசை | - புகழ் |
| ▪ இசைபட | - புகழ் உண்டாக |
| ▪ இரப்பார் | - பிச்சைக் கேட்பார் |
| ▪ ஊதியம் | - பயன் |
| ▪ எச்சம் | - அழியாமல் எஞ்சி நிற்பது |
| ▪ ஒன்றா | - ஒப்பில்லாத |
| ▪ குன்றும் | - குறையும் |
| ▪ நிலவரை | - நிலவுலகு (Map) |
| ▪ புத்தேள் உலகு | - தேவர் உலகம், மேல் உலகம் (Heaven) |
| ▪ பொன்றாது | - அழியாது |
| ▪ வசை | - பழி |
| ▪ வண்பயன் | - வளமான விளைச்சல் |
| ▪ வித்தகர் | - திறமையுடையோர், கற்றோர் (learned) |
| ▪ புலவர் | - அறிவுடையார் (intellectual) |
|
நடுவு நிலைமை |
|
| ▪ அணி | - அழகு (Aesthetic) |
| ▪ அல்ல | - தீமை |
| ▪ ஆக்கம் | - செல்வம் (Wealth), உயர்வு(Development) |
| ▪ எச்சத்தால் | - எஞ்சி நிற்கும் புகழால் |
| ▪ ஒருதலையா | - உறுதியாக (Firm) |
| ▪ கோட்டம் | - கோணல் (Curve) ,வைளவு |
| ▪ கோடாமை | - தவறாமை |
| ▪ செப்பம் | - நடுநிலை |
| ▪ செயின் | - செய்யின், செய்தால் |
| ▪ தகுதி | - நடுவுநிலைமை |
| ▪ நடுஒரீஇ | - நடுவு நிலையிலிருந்து நீங்கி (Unjustice) |
| ▪ பேணி | - பாதுகாத்து (Guard) |
| ▪ கேடு | - தாழ்வு, தீமை |