நான்மணிக்கடிகை
பயிற்சி - 3
Exercise 3
1. நான்மணிக்கடிகை எந்தத் தொகை நூலில் இடம் பெற்றுள்ளது?
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) பதினெண் கீழ்க்கணக்கு
ஈ) அற நூல்கள்
இ) பதினெண் கீழ்க்கணக்கு
2. நான்மணிக்கடிகையின் ஆசிரியர் யார்?
அ) காரியாசனார்
ஆ) விளம்பி நாகனார்
இ) ஒளவையார்
ஈ) திருவள்ளுவர்
ஆ) விளம்பி நாகனார்
3. நான்மணிக்கடிகை எவ்வகைப் பாக்களால் ஆனது?
அ) வஞ்சிப்பா
ஆ) கலிப்பா
இ) ஆசிரியப்பா
ஈ) வெண்பா
ஈ) வெண்பா
4. நான்மணிக்கடிகை ஆசிரியரின் ஊர்ப்பெயர் என்ன?
அ) மதுரை
ஆ) சென்னை
இ) விளம்பி
ஈ) தகடூர்
இ) விளம்பி
5. விளம்பி நாகனார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
அ) கி.மு. 2
ஆ) கி.பி. 2
இ) கி.பி. 3
ஈ) கி.பி. 4
ஆ) கி.பி. 2
6. வெகுளி என்பதன் பொருள் யாது?
அ) சினம்
ஆ) குணம்
இ) வியப்பு
ஈ) வனம்
அ) சினம்
7. கள்ளி வயிற்றில் பிறப்பது எது?
அ) சந்தனம்
ஆ) பன்னீர்
இ) அகில்
ஈ) குங்குமம்
இ) அகில்
8. கடலில் பிறப்பது எது?
அ) அலை
ஆ) நுரை
இ) முத்து
ஈ) சிப்பி
இ) முத்து
9. தன்னுடன் துணையாக வரவேண்டுமானால் செய்ய வேண்டுவது யாது?
அ) அறம்
ஆ) மறம்
இ) வரம்
ஈ) திறம்
அ) அறம்
10. ஒருவனுக்கு வலிமை தருவது எது?
அ) கல்வி
ஆ) செல்வம்
இ) படை
ஈ) வீரம்
ஆ) செல்வம்