திருக்குறள்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. திருக்குறள் எழுதியவர் -----------.
திருக்குறள் எழுதியவர் திருவள்ளுவர்
2. முப்பால் என்று குறிப்பிடப் பெறுவது ----------.
முப்பால் என்று குறிப்பிடப் பெறுவது திருக்குறள்.
3. திருக்குறள் ------, --------, -------- எனப் பகுப்பு உடையது.
திருக்குறள் அறம், பொருள், இன்பம் எனப் பகுப்பு உடையது.
4. திருக்குறள் ---------- அதிகாரங்கள் உடையது.
திருக்குறள் 133 அதிகாரங்கள் உடையது.
5. திருக்குறள் ----------- குறட்பாக்கள் கொண்டது.
திருக்குறள் 1330 குறட்பாக்கள் கொண்டது.
6. திருவள்ளுவர் காலம் --------.
திருவள்ளுவர் காலம் கி.மு. 31.
7. திருக்குறள் --------- பாவகையைச் சார்ந்தது.
திருக்குறள் வெண்பா பாவகையைச் சார்ந்தது.
8. திருக்குறள் ----------- இலக்கிய வகையைச் சேர்ந்தது.
திருக்குறள் அற இலக்கிய வகையைச் சேர்ந்தது.
9. திருக்குறளுக்கு வேறு பெயர்கள்--------, ------------, -------------, ----------, -------------, ------------, ----------.
திருக்குறளுக்கு வேறு பெயர்கள் முப்பால், உத்தரவேதம், தெய்வ நூல், பொய்யா மொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, பொதுமறை .
10. திருக்குறள் சிறப்பு மிக்க -------, ------- அடிகளால் ஆனதால் இப்பெயர் பெற்றது.
திருக்குறள் சிறப்பு மிக்க குறுகிய, இரண்டு அடிகளால் ஆனதால் இப்பெயர் பெற்றது.