2. அற இலக்கியம்

சிறுபஞ்சமூலம்

பாட அறிமுகம்
Introduction to Lesson


சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், கண்டங்கத்தரி வேர் ஆகிய ஐந்து வேர்களுக்கும் ‘பஞ்ச மூலம்’ என்று பெயர். ஐந்து வேர்களால் ஆன இவை மருந்தாகி உடல் நலத்தைக் காப்பது போல இந்நூலில் உள்ள பாடல்களில் ஐந்தைந்து கருத்துகள் கூறி உயிர் நலத்தைக் காப்பதால் இப்பெயர் பெற்றது. இந்நூல் பாயிரச் செய்யுள் உள்பட 100 நேரிசை வெண்பாக்கள் கொண்டது. இதுவும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.