சிறுபஞ்சமூலம்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. ஐந்து வேர்களுக்கு ------- என்று பெயர்.
ஐந்து வேர்களுக்கு பஞ்ச மூலம் என்று பெயர்.
2. சிறுபஞ்சமூலம் -----------வெண்பாக்களைக் கொண்டது.
சிறுபஞ்சமூலம்நூறு வெண்பாக்களைக் கொண்டது.
3. சிறுபஞ்சமூலம் ஆசிரியர் ---------- என்பவர்.
சிறுபஞ்சமூலம் ஆசிரியர் காரியாசான் என்பவர்
4. ‘காரி’ என்பது ---------.
‘காரி’ என்பது இயற்பெயராகும்.
5. ‘ஆசான்’ என்பது ------------ பெற்ற பெயராகும்
‘ஆசான்’ என்பது தொழிலால் பெற்ற பெயராகும்.
6. காரியாசான் ------- ஆவார்.
காரியாசான் சமணர் ஆவார்
7. காரியாசான் -------- தம் மாணவர்.
காரியாசான் மாக்காயனார் தம் மாணவர்.
8. நாறுதல் என்பதற்கு -------- என்று பொருளாகும்.
நாறுதல் என்பதற்கு முளைத்தல் என்று பொருளாகும்.
9. கண்ணுக்கு அழகு மற்றவர் மீது -------- கொள்ளுதல்.
கண்ணுக்கு அழகு மற்றவர் மீது இரக்கம் கொள்ளுதல்
10. பாத்தி கட்டி விதைக்காமல் முளைக்கின்ற ----------- உண்டு.
பாத்தி கட்டி விதைக்காமல் முளைக்கின்ற விதைகள் உண்டு.