திருக்குறள்
பாட அறிமுகம்
Introduction to Lesson
நம் செந்தமிழ் மொழியில் அறநெறி நூல்கள் ஏராளமாக உள்ளன. அவற்றுள் முதலில் வைத்து எண்ணத் தக்கது திருக்குறளாகும். இது பதினெண் கீழ்க்கணக்கு என்னும் தொகுப்பில் உள்ளது.
திருக்குறள் = திரு+குறள் = சிறப்பு மிக்க குறுகிய இரண்டு அடிகளால் ஆனது. இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகிய மூன்று பெரும் பகுப்புகள் கொண்டது. இது 133 அதிகாரங்களும், 1330 குறட்பாக்களும் கொண்டுள்ளது. உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறளுக்கு முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, உலகப் பொதுமறை என வேறு பல பெயர்களும் வழங்குகின்றன.