திருக்குறள்
பயிற்சி - 3
Exercise 3
1. திருக்குறள் எழுதியவர் யார்?
அ) ஒளவையார்
ஆ) திருவள்ளுவர்
இ) புகழேந்தி
ஈ) நக்கீரர்
ஆ) திருவள்ளுவர்
2. திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
அ) 133
ஆ) 103
இ) 130
ஈ) 233
அ) 133
3. திருக்குறள் எங்கு அரங்கேற்றம் செய்யப்பட்டதாகக் கூறப் பெறுகிறது?
அ) மயிலாப்பூர்
ஆ) திருச்சிராப்பள்ளி
இ) மதுரை
ஈ) தஞ்சாவூர்
இ) மதுரை
4. திருவள்ளுவர் காலம் எது?
அ) கி.பி.31
ஆ) கி.பி.30
இ) கி.மு.30
ஈ) கி.மு.31
ஈ) கி.மு.31
5. திருக்குறளுக்கு வேறு பெயர் யாது?
அ) உலகப் பொதுமறை
ஆ) விவிலியம்
இ) நீதி நூல்
ஈ) திருமறை
அ) உலகப் பொதுமறை
6. திருக்குறள் எத்தொகுப்பில் இடம்பெற்று உள்ளது?
அ) எட்டுத் தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) பதினெண் கீழ்க்கணக்கு
ஈ) அறநூல் தொகுப்பு
இ) பதினெண் கீழ்க்கணக்கு
7. திருக்குறள் எவ்வகைப் பாவால் இயற்றப்பட்டது?
அ) வெண்பா
ஆ) கலிப்பா
இ) ஆசிரியப்பா
ஈ) வஞ்சிப்பா
அ) வெண்பா (குறள் வெண்பா)
8. திருக்குறளில் எத்தனைக் குறட்பாக்கள் உள்ளன?
அ) 133
ஆ) 1330
இ) 1030
ஈ) 1310
ஆ) 1330
9. திருக்குறள் எத்தகைய பெரும் பகுப்புகள் கொண்டது?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஆறு
ஆ) மூன்று
10. திருவள்ளுவர் எச்சமயத்தைச் சார்ந்தவர்?
அ) சைவம்
ஆ) சமணம்
இ) கிறித்தவம்
ஈ) சமயச் சார்பற்றவர்
ஈ) சமயச் சார்பற்றவர்