சிறுபஞ்சமூலம்
பயிற்சி - 4
Exercise 4
1. சிறுபஞ்சமூலம் என்பதன் பெயர்க்காரணம் கூறுக.
ஐந்து வேர்களால் ஆன மருந்து உடல் நலத்தைக் காப்பது போல இந்நூலில் கூறப்படும் ஐந்து கருத்துகள் உயிர் நலத்தைக் காப்பதால் இப்பெயர் பெற்றது.
2. ‘பஞ்ச மூலம்’ என்பதன் பொருள் யாது?
ஐந்து வேர்கள் எனப் பொருள்படும்.
3. ஐந்து வேர்கள் யாவை?
சிறு வழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லிவேர், பெருமல்லி வேர், கண்டங்கத்திரி வேர் என்பவை ஐந்து வேர்களாகும்.
4. சிறுபஞ்சமூலம் இயற்றிய ஆசிரியர் பெயர் யாது?
சிறுபஞ்சமூலம் இயற்றிய ஆசிரியர் பெயர் காரியாசான் என்பதாகும்.
5. காரியாசான் - குறிப்பு வரைக.
‘காரி’ என்பது இவரது இயற்பெயர் எனவும், ‘ஆசான்’ என்பது தொழிலால் பெற்ற பெயராகவும் கூறப்படுகிறது.
6. காரியாசான் எச்சமய நெறியைச் சார்ந்தவர் ?
காரியாசான் சமண நெறியைச் சார்ந்தவர்.
7. சிறுபஞ்சமூலம் பாயிரச் செய்யுளால் அறிய முடிவது யாது?
காரியாசான் மாக்காயனார் தம் மாணவர் என்பதை பாயிரச் செய்யுளால் அறிய முடிகிறது.
8. கண், கால் இவற்றுக்கு வனப்பாவன யாவை?
கண்ணுக்குக் கண்ணோட்டமும், காலுக்கு பிறரிடம் யாசிக்கச் செல்லாமையும் வனப்புகள்ஆகும்.
9. பெருமை, சிறுமை எனச் சிறுபஞ்சமூலம் கூறுவன யாவை?
பிறர் செய்த பிழையைப் பொறுத்துக் கொள்ளுதல் பெருமையாகவும், பிறர் செய்த பிழையை நினைத்துக் கொண்டேயிருப்பது சிறுமையாகவும் சிறுபஞ்சமூலம் கூறுகிறது.
10. பிறர் எடுத்துரைக்காமல் அறிவு பெறுபவர் யார்?
பிறர் எடுத்துரைக்காமல் அறிவு பெறுபவர் அறிஞர் ஆவர்.