2. அற இலக்கியம்

சிறுபஞ்சமூலம்

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  பஞ்சமூலம் என்பதன் பொருள் யாது?

அ) நான்கு வேர்

ஆ) ஐந்து வேர்

இ) ஆறு வேர்

ஈ) ஏழு வேர்

ஆ) ஐந்து வேர்

2.  சிறுபஞ்சமூலம் எத்தனை வெண்பாக்களைக் கொண்டது?

அ) 100

ஆ) 110

இ) 120

ஈ) 130

அ) 100

3.  சிறுபஞ்சமூலம் ஆசிரியர் பெயர் என்ன?

அ) விளம்பி நாகனார்

ஆ) நக்கீரனார்

இ) காரியாசான்

ஈ) மோசிகீரனார்

இ) காரியாசான்

4.  காரியாசான் எச்சமய நெறியைச் சார்ந்தவர்?

அ) சைவம்

ஆ) வைணவம்

இ) புத்தம்

ஈ) சமணம்

ஈ) சமணம்

5.  காரியாசானின் ஆசிரியர் யார்?

அ) மாக்காயனார்

ஆ) கணிமேதாவியார்

இ) கணக்காயனார்

ஈ) சாத்தனார்

அ) மாக்காயனார்

6.  பஞ்சம் என்பதன் பொருள் யாது?

அ) வறுமை

ஆ) ஐந்து

இ) வறுமை

ஈ) ஆறு

ஆ) ஐந்து

7.  கண்ணுக்கு வனப்பாவது யாது?

அ) பார்வை

ஆ) மையிடுவது

இ) கண்ணோட்டம்

ஈ) கண்ணாடி

இ) கண்ணோட்டம்

8.  பிறர் செய்த பிழையைப் பொறுத்துக் கொள்வதால் வருவது யாது?

அ) பெருமை

ஆ) மரியாதை

இ) சிறப்பு

ஈ) மதிப்பு

அ) பெருமை

9.  பிறர் எடுத்துரைக்காமல் அறிவு பெறுபவர் யார்?

அ) முதுவர்

ஆ) அறிஞர்

இ) நல்லவர்

ஈ) வல்லவர்

ஆ) அறிஞர்

10.  எல்லாம் அறிந்தவர் யார்?

அ) ஞானியர்

ஆ) முனிவர்

இ) ஆசிரியர்

ஈ) ஒருவரும் இலர்

ஈ) ஒருவரும் இலர்